பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் உருவாகும் வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பதை தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட நகரில் எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதால் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது நிரூபணமாகிறது.
Comments