டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
பல்வேறு கண்டங்களில் டைனோசர் போன்ற தொல் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்திருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏறபடாததன் அடிப்படையில் கண்டங்கள் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் நேரத்தில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் ,எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.
எனவே ஆஸ்திரேலியா அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசரின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர் காலத்தின் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.
Comments