புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்த பூமியின் கடந்த காலம் .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது.அதன் வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.
அத்துடன் பூமியும் தன் சுழல் அச்சில் தற்பொழுது இருப்பதைப் போல் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்திராமல் நேராக இருந்ததால் பூமத்திய ரேகைப் பகுதியில் ஏற்படுவதைப் போன்றே துருவப் பகுதிகளில் பகலும் இரவும் கொண்ட நாட்கள் ஏற்பட்டு இருக்கிறது.
அதனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் கூட வெப்ப மண்டலக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் வெப்ப மண்டல பிரதேசத்தில் வாழும் விலங்கினங்களும் வாழ்ந்திருக்கின்றன. இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகளில் இருந்து வெளிப்பட்ட நீராவி குளிர்ந்ததால் உருவான நீர், சுடு நீர் ஊற்று மூலம் வெளியேறி கடலில் கலந்ததால் கடல் மட்டம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்தது.
கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு விலங்கினங்களும் தனிமைப் படுத்தப் பட்டது.
கடல் மட்ட உயர்வால் பூமியின் வெப்ப நிலை குளிர்ந்து துருவப் பகுதிகளில் பனி உருவானது.
கண்டங்களின் மேல் இருந்த எரிமலைத் தொடர்கள் இணைந்ததால் மலைத் தொடர்கள் உருவாகின.இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் அவ்வப் பொழுது குமுறும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
Comments