ரேடான் வாயுக் கசிவு மூலம் நில அதிர்ச்சி ஏற்படப் போவதை அறிதல் .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
japan radon.jpg (Satellite images showing changes in the heat of the atmosphere above the epicentre of the March 11 earthquake between March 1 and March 12. The total electron content in the ionosphere increased dramatically before the quake Read more: http://www.dailymail.co.uk/sciencetech/article-1388789/Japan-earthquake-Atmosphere-epicentre-heated-rapidly-days-disaster.html#ixzz2AfcE3t00 Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook ) ரேடான் என்பது நிறமற்ற மணமற்ற கதிரியக்கத் தன்மையுள்ள வாயு.மண்ணில் உள்ள யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற தனிமங்கள் சிதைவுறும் பொழுது ரேடான் வாயு உற்பத்தியாகி வளி மண்டலத்தில் கலக்கிறது. இந்த வாயு கதிரியக்கத் தன்மையை கொண்டிருப்பதால் கதிரியக்கத்தை அறியும் கருவிகள் மூலம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ரேடான் வாயுக் கசிவு சிறிய அளவில் ஏற்பட்டாலும் கூட கண்டு பிடித்து விட முடியும். எரிமலைக்குள் பாறைக் குழம்பு சேரும் பொழுது எரிமலைப் பகுதியில் அதிக அளவில் ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. முக்க...