பத்திரிகை செய்தி வெளியீடு.
சென்னை. 30.03.2012 (மேப் விளக்கம்-அட்லாண்டிக் கடல் பகுதியில் வட அமெரிக்கக் கண்டதிற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.மேப் நன்றி நாசா ) வணக்கம் , பொருள்:நில அதிர்ச்சி சுனாமி காரணம் கண்டு பிடித்ததை தெரிவித்தல். பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி உள்ள தரைப் பகுதியும் உயர்கிறது. அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையின் உயரம் குறைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி உள்ள தரைப் பகுதியும் இறங்குகிறது. இவ்வாறு ஒரு எரிமலை பல முறை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு சில அங்குலம் உயரத்துடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன. இவ்வாறு எரிமலையைச...