நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.
கெர்கூலியன் தீவில் தென் அமெரிக்க வகை மண் புழுக்கள் காணப் படுவது, நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞானி.க.பொன்முடி. நிலப் பகுதிகளில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பல தீவுகளில், நிலத்தில் வாழும் விலங்கினங்கள் காணப் படுவது, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையும் நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இந்தியப் பெருங் கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கெர்கூலியன் தீவுகள் அமைந்திருக்கின்றன. எரிமலைத் தீவான கெர்கூலியன் மற்றும் அந்தத் தீவைச் சுற்றி அமைந்திருக்கும் முன்னூறு சிறிய தீவுகளும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கின்றன. கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப படும் அந்தக் கடலடிப் பீட பூமியும், கெர்கூலியன் தீவுகளும் எப்பொழுது உருவாகின என்று அறிவதற்காக கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில...