இருபது ஆண்டுகால புதை படிவ ஆராய்ச்சி-விஞ்ஞானி.க.பொன்முடி.

வணக்கம்! கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகிறன்றன. நிலத்தின் மேல் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது பனிப் பிரதேசமான திருவப் பகுதிகளில் காணப் படுகிறது. கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்குகள் காணப் படுகின்றன. இந்தப் புதிர்களுக்கு காரணம் என்ன என்பதை அறிவதற்காக நான் மேற்கொண்ட ஆய்வில் புதிய விஷயங்களைக் கண்டு பிடித்து இருக்கிறேன். புதை படிவங்கள் குறித்த ஆய்வில் எனக்குத் தெரிய வந்த விபரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். இருபது ஆண்டுகால புதை படிவ ஆராய்ச்சி குறித்து...ஒரே பக்கத்தில். தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது, கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடல் தளங்களின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் பட்ட நிலையில்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் அவ்வாறு இந்தக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாத நிலையில்,இந்த கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவுப் பகுதியிலும் ஹைத்தி தீவிலும்,நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகள் ஏற்பட்டதற்கு நாசா போன்ற அமெரிக்காவின் முன்னணி ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில்,இந்த இரண்டு இடங்களிலுமே உருவான நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும்,எரி மலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகக் கூடிய, சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளதால், நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்புக்கு, பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வ்வாறு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும் கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதும் ஆதாராப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது கடலின் சாராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில், கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் வட துருவப் பகுதியில் பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்களும், டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகளும் வெப்பமான மணற் பரப்பும் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளிலேயே அதிக வெப்பம் நிலவி இருப்பதன் மூலம் பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிக மாக இருந்திருப்பதுடன், கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்து இருப்பதும், அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்து இருப்பதுடன், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்து இருப்பதும் அதனால்,துருவங்களில் பனிப்படலங்கள் உருவாகி, பசுமைக் காடுகள் அழிந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன் மூலம் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் ,பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரிய வகை நீர் யானைகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த, கடல் பகுதியைக் கடக்க இயலாத குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்களானது, மடகாஸ்கர் தீவிலும்,மத்திய தரைக் கடலிலில் உள்ள சிசிலி,சைப்ரஸ் ,கிரிட்டி,மால்டா ஆகிய தீவுகளில் காணப் படுவதன் மூலம், இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருக்கும் நிலையில், இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால், சில லட்சம் ஆண்டுகளிலேயே கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் மூழ்கி விடும். எனவே பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000 எரிமலை வெடிப்பே ...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் உண்மையான காரணம். அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் ஏன் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை? சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. அதே போன்று ஹைத்தி தீவானது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 26.12.2004 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது சுமத்ரா தீவுப் பகுதியில் உருவானது. அதே போன்று கடந்த 10.01.2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது ஹைத்தி தீவில் உருவானது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமான நாசா மற்றும் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான காரணத்தைக் கூற இயல வில்லை. ஏனென்றால் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அறிவியல் உலகில் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத்தின் கடல் தளமானது உரசியபடி நகர்ந்து செல்வதாகவும், அப்பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' தனித்த தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே அந்த நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாகஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருந்து, தனித்த தனியாகப் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன்,இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது .எனவே, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உண்மையில் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கணடங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால் இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. ஆக, தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன? குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுக்கு அருகில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.அதனால் அந்தத் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரையும் உருவாகி இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் அது வரை கடலுக்குள் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன. அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவு நான்கு அடி வரை உயர்ந்ததற்கும்,சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது,தீவில் உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் 12.10,2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது சோனார் கருவி ஆய்வு மூலம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் தென் பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி முறையே வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும்,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த கருத்து உண்மை என்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அந்த எரிமலைத் தொடருக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் அந்த ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகுவதை போன்று ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்தசெயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே இரண்டரை லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது செயற்கைக் கோள் பட ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு ஆராய்ச்சியாளர்களால் ஏன் விளக்கம் கூற இயல வில்லை? குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக எரிமலைகள் உ ருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அத்துடன் வட அட்லான்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. அதே போன்று தெற்கு அட்லான்டிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. இந்த நிலையில் கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் குறிப்பாக இந்த இரண்டு கடல் தள பகுதிக்கும் இடைப் பட்ட கடல் தள பகுதியில் அமைந்து இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் தள பகுதியில் உருவாகி இருந்தால் அந்த எரிமலைத் தீவுக்கு கூட்டமானது நேர் கொட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ கவிழ்த்துப் போட்ட 'ட ' வடிவில் உருவாகி இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் எரிமலைத் தீவுக்கு கூட்டமானது ஒழுங்கற்ற வடிவில் உருவாக்கி இருக்கிறது. அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக காலபாகஸ் தீவுகள் இருக்கும் இடத்திலேயே உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த கருத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி இந்த நிலப் பகுதியை கடந்து கரீபியன் தீவுக்கு கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,கரீபியன் தீவுக்கு கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து உயர்ந்து இருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறினார்கள். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்து இருப்பது நிரூபணம் ஆகிறது.எனவே பசிபிக் கடல் மாதிரி விளக்கம் ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கம். எனவே வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த விளக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கியதாக்க கூறப் படும் எரிமலைப் பிழம்பு எதுவும் காணப் பட வில்லை. அது மட்டுமின்றி கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து படி, கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால் , கடல் தளத்தின் மேல் வரிசையாக எரிமலைத் தீவுகள் உருவாக வேண்டும். ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது வரிசையாக உருவாகாமல் கவிழ்ந்துப் போட்ட ''ட '' வடிவில் உருவாகி இருக்கிறது.இதன் மூலமாகவும் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம்,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்து இருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரிபியன் தீவுக்கு கூட்டமானது தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்து இருந்திருப்பதும் அதன் வழியாக டைனோசர்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அந்த தீவில் ஏற்பட்ட சுனாமிக்கு நில அதிர்ச்சிக்கும் விளக்கம் கூற வேண்டிய இக்கட்டான நிலைமை, அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ப்பட்டு விட்டது. இந்த நிலையில்,அந்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால் பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக,அந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு, கரீபியன் தீவுக் கூட்டமானது குறிப்பாக எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது .எனவே கரீபியன் பாறைத்த தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தை பொருந்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.என்று '' மையமாக '' ஒரு விளக்கத்தைக் கூறி மிகவும் சாமர்த்தியமாக இக்கட்டில் இருந்து தப்பித்து விட்டனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் இந்த விளக்கமானது சரியான விளக்கம் அல்ல. உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று விளக்கமாகக் கூறினால் மட்டுமே அந்த விளக்கமானது சரியான விளக்கம் ஆகும். அதாவது கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாததால் USGS ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயலா வில்லை. ஆக தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயலாததைப் போலவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் , அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தைக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயல வில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. 0000000000000 கண்டங்கள் பற்றிய கருத்துக்கள் உருவான கதை. பதினாறாம் நூற்றாண்டு... ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலிக்கு வந்த வியாபாரிகள் லியோனார்டோ டா வின்சியை சந்தித்து வரும் வழியில் அவர்கள் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களைக் கண்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட டாவின்சி அப்படி என்றால் இந்த இடம் முன் ஒரு காலத்தில் கடலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். மற்ற படி கடல் மலையின் மேல் இருந்து தாழ்வடைந்ததா அல்லது மலை கடலுக்குள் இருந்து உயர்ந்ததா என்றெல்லாம் அவர் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அவர் காலத்தில் மிகவும் புதை படிவங்கள் குறித்த தகவல்கள் மிகவும் குறைவு. பத்தொன்பதாம் நூற்றாண்டு... பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் பல் தனிமனித தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களைக் கண்டு குறிப்பாக தவளைகள் மண்புழுக்கள் மற்றும் நத்தைகள் எப்படி இந்த இந்தத் தனிமையான தீவுகளுக்கு வந்திருக்குமென்று வியந்தார். இருபதாம் நூற்றாண்டு... குளோசெப் டெரிகிஸ் என்று அழைக்கப் படும் ஒரு தாவரத்தின் பாகங்கள் ஆப்பிரிக்க,தென் அமெரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா ஆகிய தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தத் தென் பெருங் கண்டத்திற்கு கோண்டுவானா என்றும் பெயர் சூட்டினார். பின்னர் அந்தக் கண்டத்தின் சில பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்று நம்பினார். இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பாணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார்.மாற்றாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித்த தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. அப்பொழுது கண்டங்களைச் சுற்றிலும், கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் நகரும் கண்டங்கள் கருத்துக்கு அடிப்படை ஆதாரம் இல்லாததை போலவே,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை என்பது ,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதன் அடிப்படையில், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000 பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா,மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா பனிப் பாலைவனத்தி ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு வகையான டைனோசர்களின் புதை படிவங்கள்,மிகவும் இலை வயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தீவுகளிலும் தீவுக் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்ன?அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களுக்கு காரணம் என்ன? நார்வே நாட்டு கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையை துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து மடிந்த, பனை மர உயரமுள்ள ,''பிளேட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ''கெர்கூலியன்'' என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீட பூமி, எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, அந்த பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதன் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனரான டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன்,அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலே , ஒரு எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது என்றும் டாக்டர் மைக்கேல் காபின் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுடன் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம், ஒரு காலத்தின் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு, தனித் தனியாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது சரியான விளக்கம் அல்ல. 0000000000000 பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும். அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 0000000000000000 அன்புடன் , விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?