நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.
பூமிக்கு அடியில் இருக்கும் சுரக்கும் நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக்
கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது..
உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப்
படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான்,
ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில்
இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக
பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.
அனால் உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு
அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக்
குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே
காரணம்.
பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும்
குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள்
வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து
உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.அதனால் தாவரங்கள்
மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி
வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப்
படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு
என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும்
கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து
கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி
நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று
நம்பப் படுகிறது.
இந்த நிலையில், புதை படிவ ஆதாரங்கள் மூலம், கடந்த காலத்தில், ஒரே கால
கட்டத்தில், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய
வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங்
விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாக பதினைந்து அடி
ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும்
அதற்கேற்ப வளரக் கூடியது.குறிப்பாக அக்ரோ போரா பால்மேட்டா பவளங்களானது இறக்கும்
பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து
விடும் இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா
பவளத் திட்டானது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.
இந்த நிலையில் கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக
வேகத்தில் உயர்ந்தால் அக்ரோ போரா பாலமேட்ட பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும்
இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டில் ஆழமான பகுதியில் வளரக் கூடிய
மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.
இந்த நிலையில் கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும்
பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000
ஆண்டுகளுக்கு
முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து,
உயர்ந்து
இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப்
என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு
அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல்
கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு
கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப்
பகுதியில்,பனி யானைகள்
இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த
தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த
விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு
செய்தனர்.
அதன் அடிப்படையில்,கடந்த 50,000
ஆண்டுகளுக்கு
முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும்
தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள்
மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு கடந்த 50,000
ஆண்டுகளுக்கு
முன்பு தொடங்கி,10,000
ஆண்டுகளுக்கு
முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப்
பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்
அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில்
கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு
என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப்
பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல்
மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப்
பட்டுள்ளது.
ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல்
மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது
வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும்
பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக
சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு
இருந்ததாகவும்,அதனால் கடல்
மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ
டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி
நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி
வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப்
படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத்
தொடங்கும்,அதனால்
கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப்
பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப
நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.
உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில்
இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை
உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர்
ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின்
வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே
பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப்
படும் விளக்கம் தவறு.
அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல்
மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப
நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே
நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின்
வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம்
இல்லை.
எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்?
என்ற கேள்வி
எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது?
என்ற
கேள்வியும் எழுகிறது.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு
நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப்
பாய்வு செய்த,டாக்டர்
யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும்
பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக்
கண்டு பிடித்துள்ளார்.
இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப்
பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு
குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து
கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.
சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ்
ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன்
அடிப்படையில் ,பூமிக்கு
மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று
மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு
அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது
இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.
தற்பொழுது அண்டார்க்டிக்கா ,ஆஸ்திரேலியா ஆகிய தீவுக்
கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில்
கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் அந்தப்
பெரிய கண்டம் தனித் தனியாகப் பிரிந்து சிறிய கண்டங்களாக உருவாகி நகர்ந்து கொண்டு
இருப்பதே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலுக்கு
அடியில் இருக்கும் எரிமலைப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல்
தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக
நம்பப் படுகிறது.
இந்த நிலையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது
தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன்
கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு
இருந்திருப்பதும்,கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும்
தாவரங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர்
ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த
பாறைத் துண்டுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்த
பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு
பிடிக்கப் பட்டுள்ளது.
இதே போன்று பிரிட்டிஷ் தீவுக்கு வடகிழக்கே, செட்லாண்ட் தீவுக்கு அருகில் ,கடல் மட்டத்தில்
இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலப் பகுதி மூழ்கிக் கிடப்பதை
கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அந்தக் கடலடி நிலத்தில் இருந்து படிவங்களைச் சேகரித்து ஆய்வு செய்ததில் ,அந்தப் படிவுகளில்,நிலக் கரி உள்பட,பூக்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதும், அதன் அடிப்படையில்,அந்த நிலப் பகுதியானது ,ஐந்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதும், அதன் பிறகு கடலால் மூழ்கடிக்கப் பட்டு இருப்பதும், தெரிய வந்திருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து
இருக்கின்றனர்.
இதே போன்று இந்தியப்
பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்
மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும் கடலடிப் பீட
பூமியில்,இருந்து
எடுக்கப் பட்ட,ஒன்பது
கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைப் பதிவுகளிலும் கூட,மரங்களின் கருகிய
பாகங்கள்,விதை
மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் பிரிட்டிஸ் நாட்டின் புவியியல்
வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
அந்தத் தீவானது ஐந்து
கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்ததாகவும் ,அதன் பிறகு கடலால்
மூழ்கடிக்கப் பட்டு இருப்பதும்,தெரிய வந்திருப்பதாக அந்த
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக்
காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில்
காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக்
காட்டப் படுகிறது.
எனவே கண்டங்களுக்கு இடையில் இருந்த காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு
வழியாகவே டைனோசர்கள் ஏழு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதாரப்
பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
டைனோசர்களின் காலத்தில்
ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்பம் நிலவி இருந்து இருக்கிறது.
ஆர்க்டிக் பகுதியில் காணப் படும், ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களுக்குப் புவியியல்
வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
தற்பொழுது தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப்
படுவதற்கு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக
இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டமாக
இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டம்
இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி
நகர்ந்ததாகவும் அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித் தென் பகுதியை நோக்கி
நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியாக் கண்டமானது
மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்கா மற்றும் யூரேசியாக் கண்டங்கள்
உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததால் இந்த இரண்டு கண்டங்குளுக்கு
இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்கக்
கண்டத்தின் வட பகுதியில் இருக்கும் அலாஸ்காவின் வட பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட
கிழக்குப் பகுதியில் இருக்கும் சைப்பீரியாவின் வட பகுதியும் ,கடுங் குளிர் நிலவும்
ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
கூறுகின்றனர்.
குறிப்பாக ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற
தீவானது அறுபது சதவீதம் பனியால் மூடப் பட்டு இருக்கும் நிலையில்,அந்தத் தீவில்
வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் காணப்
படுவதற்கு,முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை
நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,ஆர்க்டிக் பகுதியை நோக்கி
நகர்ந்து வந்ததே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதியில் இருக்கும்
அரிசோனா பாலை வனப் பகுதியில் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த சதுப்பு நிலக்
காடுகள் மற்றும் முதலை போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்
,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதியானது பூமத்திய ரேகைப்
பகுதியில் இருந்த பிறகு,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு நகர்ந்து வந்ததே காரணம்
என்று நம்பப் படுகிறது.
இந்த நிலையில் அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்
சைபீரியாவின் வட பகுதியில் உள்ள காக்கநாடு ஆற்றுப் பகுதியிலும் ஏழு கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள்
கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
ஆனால் ஊர்வன வகை டைனோசர்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால் அதற்கு
முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
இதில் கொல் வில்லி ஆறு பாயும் அலாஸ்காவின் வட பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப
நிலையானது மைனஸ் பத்து டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை நிலவுகிறது.ஜூன் ஜூலை
மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே வெப்ப நிலையானது உறை நிலைக்கு மேலாக
உயர்கிறது.மற்றபடி ஒன்பது மாதங்கள் தரையானது பனியால் மூடப் பட்டு இருக்கிறது.
இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் நிச்சயம் ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசர்கள்
இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்க இயலாது.
எனவே ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஆர்க்டிக்
பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகளுடன் பூமத்திய ரேகைப்
பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது.
அத்துடன் ,தற்போழுது பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து
இருப்பதால்,துருவப்
பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாதம் தொடர்ச்சியாக பகலும்,
அதே போன்று
ஆண்டுக்கு ஆறு மாதம் காலம் தொடச்சியாக இரவும் நீடிக்கிறது.இவ்வாறு ஆண்டுக்கு ஆறு
மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடித்தால்,தாவரங்களால் சூரிய ஒளியின்றி,ஒளிச்
சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழ்ந்து இருக்க இயலாது.
அத்துடன் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடிக்கும் பொழுது வெப்ப
நிலையானது மைனஸ் முப்பது டிகிரி முதல் மைனஸ் ஐம்பது டிகிரி வரை இறங்குகிறது.
இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் தாவரங்களுக்கு உள்ளே இருக்கும் நீரும்
உறைந்து விடும்.தரையில் இருக்கும் நீரும் உறைந்து இருக்கும்.எனவே மாதக் கணக்கில்
நீரின்றி தாவரங்களால் உயிருடன் இருந்திருக்க இயலாது.குறிப்பாக தாவார உண்ணி
டைனோசர்களானது கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.அத்துடன் டைனோசர்கள் ,யானைக்
கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடியது.
எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்கள் கூட்டத்திற்கு உணவு அளிக்கக் கூடிய
அளவுக்கு அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.எனவே டைனோசர்கள்
காலத்திற்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.பூமியின்
அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகில் சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை
காரணமாக இருந்திருக்கலாம்.
முக்கியமாக ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பிளேட் டெக்டானிக் தியரியின்
அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.
இதன் மூலம் அந்தக் கருத்தானது தவறு எனபதும் ஆதாரப் பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமும் தாழ்வாக இருந்திருப்பது புதை
படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.அதே போன்று டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக்
பகுதியில் அதிக வெப்பம் நிலவி இருந்து இருப்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம்
எடுத்துக் காட்டப் படுகிறது.
எனவே டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக
இருந்ததால் கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததால் பூமியின் வெப்ப நிலை அதிகமாக
இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால்,கடலின்
பரப்பளவும் அதிகரித்ததால்,பூமியின் வெப்ப நிலை குறைந்து அதன் காரணமாக துருவப்
பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.
இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்
இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் இருந்த காடுகளுடன்
கூடிய தரைவழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் தீவுக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து
இருப்பதும்,கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவு குறைவாக
இருந்ததால்,பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பதுடன்,கடல் மட்டம் இரண்டு
கிலோ மீட்டர் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவு அதிகரித்தால்,பூமியின் வெப்ப நிலை
குறைந்து அதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும்
எடுத்துக் காட்டப் படுகிறது.
Comments