ஆதாரம் இருக்கிறது...ஆதாரம் இருக்கிறது...
கடல் தளங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளங்களுடன் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கடல் தளங்கள் தனித் தனியாக நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாக நம்பப் படும் நிலையில்.உண்மையில் கடல் தளமானது அவ்வாறு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகளால் பிரிக்கப் படாமல்,கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதை நிரூபிப்பதற்கு ஆதாரம் இருக்கிறது...ஆதாரம் இருக்கிறது.
பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைத்துக் கடல் தளத்திற்கு மேலேயும், கண்டங்களுக்கு மேலேயும் எரிமலையாக உருவாகும் நிலையில்,கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதால்தால், கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகளானது, தொடர்ச்சியாக உருவாகி இருப்பதாக விளக்கம் கூறப் படும் நிலையில்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் ,உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலம்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதை நிரூபிப்பதற்கும் ஆதாரம் இருக்கிறது...ஆதாரம் இருக்கிறது.



கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள், தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகுத் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறப் படும் நிலையில்,உண்மையில் தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதற்கும்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதை நிரூபிப்பதற்கும் ஆதாரம் இருக்கிறது...ஆதாரம் இருக்கிறது.

கடல் தளங்களுடன் கண்டங்கள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாக விளக்கம் கூறப் படும் நிலையில் ,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்தால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதை நிரூபிப்பதற்கும், தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பட ஆதாரங்கள் இருக்கிறது...ஆதாரங்கள் இருக்கிறது.


வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் துருவப் பகுதிகளில் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில், அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படும் நிலப் பகுதிகளானது,வெப்ப மண்டலப் பகுதியில் இருந்த பிறகு,துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது...ஆதாரம் இருக்கிறது.















Comments