உயரும் கண்டங்கள்.
(ஆப்பிரிக்காவின் மொராக்கோ மலைப் பகுதியில் - கேம்ப்ரியன் காலக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.)
(பர்கிஸ் ஷேல் மலைப் பகுதியில் - கேம்ப்ரியன் காலக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.)
கடந்த 1909 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதத்தில் ...ஒரு நாள் மாலைப் பொழுது,சார்லஸ் வால்காட் என்ற தொல்உயிரியல் வல்லுநர் ,கனடாவின் ராக்கி மலைப் பகுதியில் ஆறாயிரம் அடி உயரத்தில் உள்ள தனது குவாரியில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார்.
மழையின் தூறல் அதிகரித்துக் கொண்டு இருந்ததால் சீக்கிரம் வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்று அவசர அவசரமாக அந்த மலைச் சரிவில் சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது ஒரு இடத்தில் பெயர்ந்து இருந்த சிலேட்டுப் பாறைகளில் குழந்தைகளின் ஷூ அச்சுக்கள் போன்று ஏதோ தென் பட்டது.அந்த அவசரத்திலும் அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தார்.
வீட்டுக்குள் வந்ததும் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு அந்த சிலேட்டுப் பாறையை பார்த்தவருக்கு ஆச்சரியம்.
அந்த சிலேட்டுப் பாறைகளில் குழந்தைகளின் ஷூ அச்சுக்கள் போன்று பதிந்து இருந்தவைகள் ,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்.
ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் கடலுக்கு அடியிலேயே வாழ்ந்தன,தரைக்கு வர வில்லை.ஆனால் அது எப்படி இந்த மலையின் மேல் வந்தது?
அந்தப் புதை படிவங்கள் காணப் பட்ட இடமானது பர்கிஸ் ஷேல் என்று அழைக்கப் படுகிறது.அந்த உயிரினங்களின் மெல்லிய திசுக்கள் கூட சித்திரம் போன்று தெளிவாகப் புதை படிவங்களாக உருவாகி இருந்தன.
இதே போன்று கடந்த 2012 ஆம் ஆண்டு, பர்கிஸ் ஷேலில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூட்டெனி ஷேல் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
http://www.dailymail.co.uk/sciencetech/article-3011373/Ancient-lobster-six-claws-FOUR-eyes-unearthed-Fossil-reveals-predator-prowled-oceans-500-million-years-ago.html
தற்பொழுது இந்த மலைப் பகுதிகளானது,பசிபிக் கடற் கரையில் இருந்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருந்தாலும்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,இந்த மலைப் பகுதிகள் கடற் கரையோரமாக இருந்திருக்கிறது.
அப்பொழுது அந்த மலையடிவாரப் பகுதியானது களிமண் சகதி நிறைந்த ஆழமற்ற கடல் பகுதியாக இருந்திருக்கிறது.அதில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய நண்டு போன்ற கடல் உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன.
அப்பொழுது அந்த மலையானது திடீரென்று மேல் நோக்கி உயர்ந்ததால்,ஏற்பட்ட நில அதிர்ச்சியின் பொழுது, ஏற்பட்ட நிலச் சரிவினால் கடலுக்கு அடியில் சகதிச் சரிவு ஏற்பட்டது.அதனால் பல அடி ஆழத்தில், பல கடல் உயிரினங்கள் சிக்கிப் புதையுண்டன.
அத்துடன் அந்த சகதி நிறைந்த கடலடி நிலமானது,கடல் மட்டத்திற்கு மேலாகவும் உயர்ந்தது.
அதன் பிறகு அந்த சேற்று நிலப் பகுதியானது,காலப் போக்கில் வெய்யிலில் காய்ந்து இறுகிப் பாறையானது.அதனால் அந்தப் பாறைக்கு உள்ளே சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களானது, புதை படிவங்களாக உருவானது.
இதே போன்று தொடர்ந்து ஏற்பட்ட நிலத்தின் உயர்வாலும்,நில அதிர்ச்சியாலும் நிலச் சரிவினாலும் தொடர்ந்து புதை படிவங்கள் உருவாகியது.
தொடர்ந்து அந்த மலையைச் சுற்றி இருந்த நிலப் பகுதியும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்ததால் கடற்கரையானது படிப் படியாக அதிக தொலைவுக்குத் தள்ளிச் சென்றது,அதனால் அந்த மலைப் பகுதியானது காலப் போக்கில் உள்நாட்டுப் பகுதியாக மாறி விட்டது.
இன்றும் கூட நியூ சிலந்து தீவின் கடற் கரைப் பகுதியில் இருக்கும் மலைப் பகுதியானது நில அதிர்ச்சியின் பொழுது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததால்,கடற்கரையானது தள்ளிச் சென்று இருப்பதுடன், அப்பகுதிகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
இதே போன்று,இயற்கை விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ,பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட பொழுது, தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பொழுது, கடலுக்கு அடியில் இருந்த நிலப் பகுதியானது பல கிலோ மீட்டர் நீளத்திற்கு கடல் மட்டத்துக்கு மேலாக பல அடி வரை உயர்ந்து இருப்பது பற்றி தனது பயணக் குறிப்பில் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தில் இருந்த மலையின் மேல் ஏறி ஆராய்ச்சி செய்தார்.அப்பொழுது அந்த மலையில் கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் இருப்பதையும் கண்டு தனது பயணக் குறிப்பில் பதிவு செய்து இருக்கிறார்
இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு,பிப்ரவரி மாதம், தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி நாட்டுக் கடற் கரைப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,அந்தப் பகுதியில் ,கடற் கரையானது ,நூற்றி என்பது செண்டி மீட்டர் உயர்ந்து இருப்பது ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்,வட அமெரிக்காவில் கலிபோர்னியா யூதா பாலைவனப் பகுதியில் உள்ள மார்பில் மலைப் பகுதியிலும் , சீனாவில் சென்ஜியாங் மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியிலும்,ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள பிளிண்டர்ஸ் ரேஞ் மலைப் பகுதியிலும்,ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள மொரோக்காவில் உள்ள அட்லாஸ் மலைப் பகுதியிலும் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
http://www.virtualmuseum.ca/edu/ViewLoitDa.do;jsessionid=B5B07E1EBE71E77B951745813F61776A?method=preview&lang=EN&id=19487
இவ்வாறு கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்,கண்டங்களின் உட் பகுதியில் இருக்கும் மலைப் பகுதிகளில் காணப் படுவதன் மூலம்.அந்த மலைப் பகுதிகளும்,மலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளும், கடலுக்கு அடியில் இருந்து நேராக மேல் நோக்கி உயர்ந்து, கடல் மட்டத்துக்கு மேலாக வெளிப்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
-----------------------
http://www2.newark.ohio-state.edu/facultystaff/personal/jstjohn/Documents/Rocks-and-Fossils-in-the-Field/Marble-Mountains.htm
http://www.ucmp.berkeley.edu/cambrian/marblemts.htmlவட அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் உள்ள மொஜாவி பாலைவனத்தில் உள்ள மார்பில் மலையில், ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்த ட்ரைலோ பைட் என்று அழைக்கப் படும் கடல் உயிரினத்தின் புதை படிவங்கள் காணப் படுகிறது.
Comments
- அருள் மணிவண்ணன்
இன்னோர் உலகம்