பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பது, வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
கரீபியன் கடல் பகுதியில் அமைந்து இருக்கும்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்பட்டதற்கும்,ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்டையில்,புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலாமல் இருப்பதன் மூலம்,அந்தத் தியரி தவறு என்பது, வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.












இந்த நிலையில் எரிமலைகளைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கொள் படங்களில் பதிவாகி இருப்பதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.


Comments