கடல் மட்டம் உயர்ந்ததால் பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கிறது.
தற்பொழுது பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.ஆனால் புதை படிவ ஆதாரங்கள் மூலம் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதும் அதனால் பூமியில் வெப்ப நிலை குறைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ....
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் படிவுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்பு புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடல்டிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங் கடல் பகுதியில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ...
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நடக்கும் கடற் பசுவின் புதை படிவங்கள் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ....
தற்பொழுது அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் வாழக் கூடிய முதலை,ஆமை போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் வட துருவப் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆக்சல் ஹை பெர்க் தீவில் ஒன்பதரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான நன்னீர் வாழ் ஆமையின் ஓடு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது.
ஐந்து கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி உயர்ந்து இருக்கிறது.
வரலாற்றுக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த நிலப் பகுதிகள் தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது முதல் முப்பது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.இதான் மூலம் கடல் மட்டம் பல்லாயிரம் அடி உயர்ந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது.
வட துருவப் பகுதியில் நாற்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டு வரை பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
ஆசியக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதில் உள்ள சைபீரியாப் பகுதியில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்த ானைகளின் உடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்ததால் பூமியில் வெப்ப நிலை குறைந்திருப்பதும் அதனால் பனிப் பொழிவு ஏற்படுவதும் நிரூபணமாகியுள்ளது.
Comments