பாக்லாந்து தீவுக்கு ஓநாய்கள் எப்படி வந்தன ?
இயற்கை அறிவியலில் கடந்த முன்னூற்றி இருபது ஆண்டு காலமாக விடுவிக்கப் படாமல் இருந்த புதிருக்கு, விடை கண்டு பிடித்து விட்டதாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
பாக்லாந்து தீவானது தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
இயற்கை அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1833 ஆம் ஆண்டு பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட பொழுது,பாக்லாந்து தீவில் இறங்கி ஆராய்ச்சி செய்தார்.
அப்பொழுது அந்தத் தீவில் இருந்த நரி முக ஓநாய்கள் அவரையும் அவருடன் வந்தவர்களையும் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் நாய்களைப் போல நட்புடன் அருகில் வந்து பார்த்தது.
அந்த விலங்குகளைக் கண்ட டார்வின் , எப்படி இந்தத் தனிமைத் தீவுக்கு இந்த விலங்கினம் வந்திருக்கக் கூடும் ? என்று வியப்படைந்தார்.
டார்வின் அந்தத் தீவுக்கு வந்து சென்ற பிறகு நாற்பதே ஆண்டுகளில்,ரோமத்திற்காக அந்த விலங்கினம் வேட்டையாடப் பட்டதால் முற்றிலும் அழிந்தது.
ஆனாலும் டார்வின் சேகரித்த அந்த விலங்கின் எலும்புகள் லண்டன் அருங்காட்சியத்தில் உள்ளன.
இதற்கு முன்பு அந்த விலங்கின் மரபணுவை ஆய்வு செய்த உயிரியல் வல்லுனர்கள் ,அந்த விலங்கானது ,தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும்,கிரிசோசயன் பிராக்கியுரஸ் என்று அழைக்கப் படும் ஓநாய் இனத்தில் இருந்து எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாகவும்,மூன்று லட்சத்தி முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாக்லாந்து தீவுக்கு ,கடலில் மிதக்கும் பனிப் பாறைகள் மூலமாக வந்தது என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆலன் கூப்பர் தலைமயிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மேற்கொண்ட மரபணு ஆய்வில்,பாக்லாந்து தீவின் ஓநாய்கள்ஆயிரத்தி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து மடிந்த, துசியஸ் ஏவஸ் என்று அழைக்கப் படும் ஓநாய் இனத்தில் இருந்து , பிரிந்ததாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட ஒரு ஆய்வறிக்கையில்,பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் பாக்லாந்து தீவானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக பரப்பளவில் இருந்ததாகவும்,அப்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டுக்கும் பாக்லாந்து தீவுக்கும் இடையில் இருபது முதல் முப்பது கிலோ மீட்டர் இடைவெளியே இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் டாக்டர் ஆலன் கூப்பர், அந்தக் காலத்தில் பூமியில் பல பகுதிகளில் பனி படர்ந்து இருந்ததாகவும் அதனால் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் பாக்லாந்து தீவுக்கும் இடையில் கடல் நீர் உறைந்து இருந்திருக்கலாம் என்றும், அப்பகுதியில் இருந்த கடல் பகுதியும் ஆழம் குறைந்து நீச்சல் குளம் போன்று இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் அந்தப் பனிப் பகுதியின் மேல் சீல் அல்லது பெங்குவின் பறவையைத் துரத்திய படி, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஓநாய்கள், பாக்லாந்து தீவுப் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்றும், அதன் பிறகு பனி உருகியதாகவும் கடல் மட்டம் உயர்ந்து விட்டதாகவும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த விளக்கம் தவறு.
ஒரு சிறிய கற்பனை...
இப்பொழுது திடீரென்று பூமி குளிரத் தொடங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
என்ன ஆகும்?
பூமியின் மேல் உள்ள நீராவி குளிர்ந்து பனியாக நிலத்தின் மேல் படியத் தொடங்கும்.
அதே நேரத்தில் கடலில் இருந்து நீர் ஆவியாகுவதும் நின்று விடும்.
எனவே கடலில் உள்ள நீர் கடலிலேயே இருக்கும்.
எனவே பூமி குளிர்ந்ததால் பூமியின் மேல் பனி படிந்ததால் கடல் மட்டம் தாழ்வடைந்ததகக் கூறப் படும் விளக்கம் தவறு.
அதே போன்று பூமியின் வெப்ப நிலை மறுபடியும் உயர்வதாகக் கற்பனை செய்யுங்கள்.
என்ன ஆகும்?
பூமியின் மேல் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கடல் மட்டம் உயரத் தொடங்கும்.
அதே நேரத்தில் வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்.
எனவே பனி உருகியதால் கடல் மட்டம் உயர்ந்ததாகக் கூறப் படும் விளக்கமும் தவறு.
எனவே பாக்லாந்து தீவுக்கு தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஓநாய்கள் எப்படி வந்தன? என்ற கேள்வி எழுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததால்,தென் அமெரிக்கக் கண்டத்துக்கும்,பாக்லாந்து தீவுக்கும் இடையில் இருந்த தரைவழித் தொடர்பு வழியாகவே ஓநாய்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து பாக்லாந்து தீவுக்கு வந்திருக்கின்றன.
ஆனால் கடல் மட்டம் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருந்த சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்த நீர் கடலில் கலந்ததே காரணம்.
கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் பூமியில் அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.
அதனால் துருவப் பகுதிகளில் கூட விலங்கினங்கள் வாழ்ந்த காடுகள் இருந்திருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்தால் பூமியில் குளிர்ச்சி அதிகரித்து பனி உருவாகி இருக்கிறது.அதனால் துருவப் பகுதிக் காடுகளும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன.
சுடுநீர் ஊற்றுக்களால் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கும்,அதனால் பூமியின் பனிப் படலங்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.அதனால் மேலும் பல தாவர மற்றும் விலங்கினங்களும் அழியும்.
Comments