ஈமுக் கோழிகள் எப்படி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றன ?
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பறக்க இயலாத ஈமுக் கோழிகள்,அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திலும் பாப்புவா நியூ கினியா தீவிலும் காணப் படும் பறக்க இயலாத காசோவாரிப் பறவைகள், நியூ சிலாந்து தீவில் காணப் படும் பறக்க இயலாத கிவி பறவைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து அந்தத் தீவுக் கண்டத்திற்கும் தீவுகளுக்கும் சென்றன? என்பது இன்று வரை விடுவிக்கப் படாத மர்மமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஈமுக் கோழிகள்,காசோவரிப் பறவைகள்,நியூ சிலாந்து தீவின் கிவி, தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் நெருப்புக் கோழி போன்ற ரியா மற்றும் குயில் போன்ற டினாமஸ் பறவைகளும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆஸ்ட்ரிச் என்று அழைக்கப் படும் நெருப்புக் கோழிகளும் பழந்தாடைப் பறவைகள் என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பறவைகளின் தாடை அமைப்பானது மற்ற பறவைகளைப் போல் அல்லாது டைனோசர் மற்றும் ஊர்வன வகை விலங்கின் தாடையைப் போல் தொன்மையான அமைப்புடன் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மற்ற பறக்கக் கூடிய பறவைகளின் மார்பு எலும்பானது கப்பல...