கண்டங்கள் நிலையாக இருப்பதை நிரூபிக்கும் முக்கியமான ஆதாரம்.
ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலம் பேலியோ சீன் என்று அழைக்கப் படுகிறது.இந்தக் காலத்தில் தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டமானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்ததாகக் கூறப் படும், கோண்டுவாணா என்ற கண்டத்தில் இருந்து பிரிந்து, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதன் பிறகுதான் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் ,அதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வட அமெரிக்கக் கண்டதிற்கும் விலங்கினங்கள் இடம் பெயர்ந்ததாக நம்பப் படுகிறது.
புவியியல் வல்லுனர்களின் நம்பிக்கை அடிப்படை ஆதாரமற்ற நம்பிக்கை என்பது புதை படிவ ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது.
பாண்டோ டோண்ட் என்று அழைக்கப் படும் மொன்னையான கால்களுடைய விலங்கினங்கள்,பேலியோசீன் காலத்தின் தொடக்கத்தில் சீனாவில் வாழ்ந்து இருப்பது புதை படிவ ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது.
பேலியோசீன் காலத்தின் மத்தியப் பகுதியில் பாண்டோ டோண்ட் விலங்கினங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து இருப்பதும் அந்தக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் அமெரிக்கக் கண்டத்திலும், பாண்டோ டோண்ட் விலங்கினங்கள் வாழ்ந்திருப்பதற்கு ஆதாரமாகத், தென் அமெரிக்கக் கண்டத்தில், ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் ,பாண்டோடோன்ட் இனத்தைச் சேர்ந்த அல்சிடெடோர் பிக்னியா என்ற விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பாண்டோடோன்ட் விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் முற்றிலும் தவறான விளக்கம்.
முக்கியமாக பேலியோசீன் காலத்தில் வாழ்ந்த பாண்டோடோன்ட் விலங்கினத்தின் புதைபடிவம் அண்டார்க்டிக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் பேலியோசீன் காலத்தில், கண்டங்கள் தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருப்பதுடன் , பேலியோசீன் காலத்தில், கடல் மட்டமானது , பல்லாயிரம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததால், கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்து, அதன் வழியாக பாண்டோடோன்ட் விலங்கினங்கள், அண்டார்க்டிக் கண்டதுக்கு சென்று இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது
Comments