கண்டங்கள் கடல் தளத்துக்கு அடியில் இருந்து உயர்ந்து இருக்கிறது.
ஐசக் நியூட்டன தலையில், ஆப்பிள் விழுந்ததால் அவர் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பதை, முதலில் நான் நம்ப வில்லை.ஆனால் இப்பொழுது நம்புகிறேன்.ஏனென்றால் எனக்கே அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.
ஒருநாள் நான் தற்செயலாக நேஷனல் ஜியாகிரபிக் புத்தகத்தை அசிரத்தையாகப் புரட்டிக் கொண்டு இருந்த பொழுது,ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு புகைப் படம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அந்தப் படத்தில் ஒரு மலை உச்சியில் இரண்டு பேர் நின்று கொண்டு மண் வெட்டும் கருவியால் மண்ணைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.
குறிப்பாக அவர்கள் இருவரும்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களுக்காக தரையைத் தோண்டிக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் இருந்ததாகவும்,பின்னர்,கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருப்பதாகவும் ,தெரிவிக்கப் பட்டு இருந்தது.
உடனே எனக்கு அந்த மலைப் பகுதியுடன் அந்த மலையைச் சுற்றி இருந்த நிலப் பகுதிகளும் கூட கடலுக்கு அடியில் இருந்தே நேராக மேல் நோக்கி உயர்ந்து இருப்பது தோன்றியது.
ஏற்கனவே நான் பல நாடுகளில் குறிப்பாக உள் நாட்டுப் பகுதிகளில் கூட கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதைப் பற்றி படித்து இருந்தேன்.
( சீல காந்த் என்று அழைக்கப் படும் கடல் மீனின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள்,கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதற்கு ஆதாரம். )
image courtesy,Canadian Museum of Nature
(ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடலுக்கு அடியில் வாழ்ந்த ட்ரைலோபைட் என்று அழைக்கப் படும், கடல் உயிரினத்தின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் )
image courtesy, university of Maryland
உடனே எனக்கு கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் நிலத்தின் மேல் காணப் படுவதற்கு காரணம் என்ன ? என்ற கேள்வி எழுந்தது.
எனவே நான், இணைய தளத்தில் புதை படிவங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்தேன்.
அப்பொழுது கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது கண்டங்கள் எல்லாம் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது,கண்டங்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் நகர்ந்து செல்வதாகவும்,அதனால் சில சமயங்களில் கடல் நீர் உள் நாட்டுப் பகுதிக்கு வந்து செல்வதே, கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் காணப் படுவதற்கு காரணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் திடீரென்று ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட உயிரினங்களே கால போக்கில் புதை படிவங்களாக மாறுகின்றன.அதனாலேயே புதை படிவங்கள் குறிப்பாக படிவப் பாறைகளிலேயே காணப் படுகின்றன.
திடீரென்று நிலச் சரிவு ஏற்பட வேண்டும் என்றால் நிலமானது ஒரு புறம் திடீரென்று உயர வேண்டும்.
உதாரணமாக தமிழகத்தில் அரியலூரில் கூட கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது படிவப் பாறைகளில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
தற்பொழுது அந்தப் புதை படிவங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.
ஆனால் கடல் நீர் உள் நாட்டுப் பகுதிக்கு வந்த பிறகு மறுபடியும் வடிவதால் உயிரினங்கள் மண்ணில் புதைய சாத்தியம் இல்லை.
எனவே புதை படிவங்கள் உருவாக உயிரினங்கள் பல அடி ஆழத்தில் புதைய வேண்டும் என்றால்,ஒரு புறம் நிலம் உயர்ந்து,நிலச் சரிவு ஏற்பட வேண்டும்.
ஆனால் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக் நம்பும் புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
குறிப்பாகப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு ஒற்றைப் பெருங் கண்டமாக இருந்ததாகவும் ,பின்னர் அந்தப் பெருங் கண்டமானது பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாகப் பிளவு பட்டுப் பிரிந்ததாகவும்,அதனால் லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு கண்டங்கள் உருவாகியதாகவும் அதில் லாரேசியாக் கண்டமானது வட பகுதியை நோக்கியும் கோண்டுவானாக் கண்டம் தென் பகுதியை நோக்கியும் நகர்ந்து சென்றதாக விளக்கம் கூறப் படுகிறது.
பின்னர் வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் ,ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்த யூரேசியக் கண்டங்கள் உருவகியதாகவும்,அதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால், தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,
ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி உருவாகி, வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டமானது முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும்,அதே போன்று ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா,மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய கண்டங்களும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இதில் குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டமானது மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஐரோப்பாக் கண்டத்துடன் மோதியதாகவும்,அதே போன்று இந்திய நிலப் பகுதியானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியதாகவும்,இந்த மோதலால் ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த கடலடி நிலப் பகுதி புடைத்துக் கொண்டு கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததாகவும் அதனாலேயே ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணாப் படுகின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று இந்திய நிலப் பகுதியானது ,ஐந்து கோடி ஆணடுகளுக்கு முனு ஆசியக் கண்டத்துடன் மோதியதால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த கடலடி நிலப் பகுதியானது ,புடைத்துக் கொண்டு கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததால் இமய மலை உருவானதாகவும்,அதன் காரணமாகவே இமைய மலைத் தொடரில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கத்தின் படி தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியா ஆகிய கண்டங்கள் எல்லாம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தீவுக் கண்டங்களாக இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த பாலூட்டி விலங்கினத்தைச் சேர்ந்த விலங்கின் புதை படிவங்களை இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நஸ்கல் என்ற கிராமத்தில் இருந்து ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் ஜம்மு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜி.வி.ஆர்.பிரசாத் மற்றும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அசோக் சாஹினி என்ற புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அவர்கள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வடபகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருக்கவில்லை என்று நேச்சர் அறிவியல் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதும்,ஆசியக் கண்டத்த்தின் பகுதியாகவே இருந்திருப்பதும் ஆந்திராவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆசிய வகைப் பாலூட்டி விலங்கினத்தின் புதை படிவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் இமய மலை அடிவாரப் பகுதியான சிம்லாவில் உள்ள ஒரு மலைக் குகையில்,ஐந்து கோடியே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான திமிங்கிலத்தின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது.
எனவே இந்திய நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து நேராக மேல் நோக்கி உயர்ந்திருப்பது, சிம்லாவில் கண்டு பிடிக்கப் பட்ட ,ஐந்து கோடியே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான திமிங்கிலத்தின் புதை படிவங்கள் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இந்தியாவில் காணப் படுவதற்கு ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தீவாக நகர்ந்து கொண்டு இருந்ததாகவும், பின்னர் ஆசியக் கண்டத்துடன் மோதியதால் கடலுக்கு அடியில் இருந்து நிலப் புடைத்துக் கொண்டு உயர்ந்ததாகவும், அதனால்தான் இந்தியாவின் வடபகுதியில் உள்ள மலைகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன என்றெல்லாம் கூறப் படும் விளக்கங்கள் முற்றிலும் தவறு என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே கண்டங்களிலும் மலைகளின் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பதே காரணம் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
( ஆம்புலோசீட்டா-பாகிஸ்தானில் கண்டு பிடிக்கப் பட்ட மூதாதைத் திமிங்கிலத்தின் புதை படிவம். ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையனது )
குறிப்பாக இந்தியாவுடன் பாகிஸ்தான் நிலப் பகுதியும் சேர்ந்து இருந்ததாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஆம்புலோசீட்டஸ் என்று அழைக்கப் படும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூதாதைத் திமிங்கிலத்தின் மூதாதை புதை படிவங்கள் பாக்கிஸ்தானில் கண்டு பிடிக்கப் பட்டது.
இந்த காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் நிலப் பகுதிகள் தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படுகிறது.
இந்தப் காலத்தைச் சேர்ந்த திமிங்கிலத்தின் புதை படிவங்கள் பாகிஸ்தானில் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம் , நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்ததே, கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே கண்டங்களில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு நிலப் பகுதிகளானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்ததே காரணம் என்பது ஆதாரபூர்வமாக நிருபணமாகியுள்ளது.
Comments