கரீபியன் தீவு விலங்கினங்கள்.
ttsloth.jpg பொதுவாகக் கண்டங்களில் இருந்து தொலை தூரத்தில் அமைந்து இருக்கும் தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள்,மற்றும் தாவரங்கள் மூலம் ,பல விலங்கினங்கள் கூட்டமாக மிதந்த படி,கடலில் பல நாட்கள் தத்தளித்த படி,மிதந்து தற்செயலாகத் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்த நிலையில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காக் கண்டங்களுக்கு அருகில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,பெரிய தீவுகளான,கியூபா,ஹிஸ்பானோலியா,போர்டோரிகோ மற்றும் ஜமைக்கா,ஆகிய தீவுகளில், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லோத் என்று அழைக்கப் படும் மரத்தில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு வாழும் விலங்கினம், சென்று வாழ்ந்திருப்பது அந்தத் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதே போன்று ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுகளில் பல இனத்தைச் சேர்ந்த குரங்குகள்,மற்றும் கொறித்துண்ணிகள், சென்று வாழ்ந்து இருப்பதும் ,அந்தத் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட, புதை படிவங்கள் மூலம் தெ...