கலிபோர்னியா நில அதிர்ச்சிகளுக்குக் காரணம் என்ன?
வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்திண் வடபகுதியில் 1300 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது.அந்தப் பிளவுப் பகுதியில் சான் ஆண்ட்ரியாஸ் என்று அழைக்கப் படும் எரியும் இருப்பதால் அந்த பிளவானது சான் ஆண்ட்ரியாஸ் நில முறிவு என்று அழைக்கப் படுகிறது.
இந்த நில முறிவு ஏன் ஏற்பட்டது?
குறிப்பாக கலிபோர்னியாவின் வடபகுதியில் உள்ள கிலாமத் என்ற மலைப் பகுதிக்கு அருகில் கடலடித் தளத்திற்கு அடியில் இருக்கும் எரிமலைகளின் செயல் பாட்டால் உருவாகும் தலையணை வடிவப் பாறைகள் காணப் படுகின்றன.எனவே அந்த நிலப் பகுதியானது ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்திருப்பதுடன் தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று கலிபோர்னியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமான சான் பிரான்சிஸ் கோவில் இருந்து கிழக்கே ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் டியாப்லோ என்ற மலையின் உச்சிப் பகுதியில் எரிமலைப் பாறைகள்,ஒபியோ லைட் என்று அழைக்கப் படும் கடல் தளப் பாறைகள் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மற்றும் சிப்பிகளின் புதை படிவங்களும் காணப் படுகின்றன.
ஆனால் தற்பொழுது இந்த நிலப் பிளவுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் கடற்கரை நகரங்கள் எல்லாம் பசிபிக் கடல்தளத்தின் மேல் இருப்பதாகவும்,ஆண்டுக்கு ஒரு அங்குலம் வீதம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
குறிப்பாக சில லட்சம் ஆண்டுகளில் கலிபோர்னியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரபல ஹாலி வுட் நகரம் இருக்கும்,லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சான் டியாகோ போன்ற நகரங்கள் எல்லாம் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து தீவாக உருவாகி விடும் என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மேலும் சில கோடி ஆண்டுகளில் அந்த நகரங்கள் எல்லாம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது ரஷ்யாவுக்கு அருகில் இருக்கும் அலூசியன் தீவுப் பகுதிக்கு வந்து சேரும் என்றும் தெரிவித்து தெரிவித்து இருக்கிறார்கள்.
முக்கியமாக இவ்வாறு கலிபோர்னியாவின் மேற்குப் பகுதியானது தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதால்தான் பாறைத் தட்டுகளுக்கு இடையில் அழுத்தமான உரசல் ஏற்பட்டு அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதி மட்டும் தனியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஒரு ஆதாரத்தையும் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக கலிபோர்னியாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹோலிஸ்டர் என்ற நகரத்தில் பின்னாக்கிள் என்ற எரிமலை உருவாகி இருக்கிறது.
குறிப்பாக பின்னாகிள் எரிமலையானது பூமிக்குள் இருந்து பல நூறு அடி உயரத்திற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் துருத்திக் கொண்டு இருக்கும் செங்குத்து கிரானைட் பாறைகளால் ஆன மலைப் பகுதியாகும்.
அந்த பின்னாக்கிள் எரிமலைப் பகுதியைப் போலவே கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள லான்காஸ்டர் என்ற நகரத்திலும் ஒரு எரிமலை உருவாகி இருக்கிறது.
நீனாக் எரிமலை என்று அழைக்கப் படும் அந்த எரிமலையும் பின்னாக்கிள் எரிமலையும் தற்பொழுது முன்னூற்று பதினான்கு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.
ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு எரிமலைகளும் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் ஆனால் அந்த எரிமலையின் மேற்குப் பகுதியானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் பசிபிக் கடல் தளத்தின் மேல் இருந்ததால் தனியாகப் பிரிந்து வட மேற்கு திசையை நோக்கி 314 கிலோ மீட்டர் தொலைவு நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் இன்றும் கூட நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இதன் அடிப்படையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கலிபோர்னியாவின் சான் ஆண்டிராஸ் பிளவுப் பகுதியானது 314 கிலோ மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து இருக்கிறது என்று மாத்யூ என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் 1976 ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதே போன்று 1973 ஆம் ஆண்டு ராஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டு ஆங்கர் பே என்ற இடத்தில் உள்ள மலைப் பகுதிப் பாறைகளும் ஈகிள் ரெஸ்ட் பீக் மலைப் பகுதிப் பாறைகளும் ஒன்றாக இருந்து பிரிந்து இருக்கின்றன என்று கூறி அதன் அடிப் படையில் சான் ஆண்டிராஸ் பிளவுப் பகுதியானது 563 கிலோ மீட்டர் நகர்ந்து இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறார்.
அதே போன்று 1966 ஆம் ஆண்டு M.l ஹில் மற்றும் T.W டிப்லே என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கலிபோர்னியாப் பகுதியில் ஆறு இடங்களில் ஒரே வகையான பாறைகள் இருப்பதாகக் கூறி அதன் அடிப் படையில் சான் ஆண்டிராஸ் பிளவுப் பகுதியானது இருபது முதல் முப்பது கிலோ மீட்டர் மட்டுமே நகர்ந்து இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
முக்கியமாக கண்டங்கள் எல்லாம் நகம் வளரும் வேகத்தில் ஆண்டுக்கு ஒரு அங்குலம் வீதம் மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
கலிபோர்னியா பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படும் பகுதி என்பதுடன் அந்த நாட்டில் நில அதிர்ச்சி குறித்த ஆராய்ச்சிகளும் பெரிய அளவில் மேற்கொள்ளப் படுகிறது.ஜி.பி.எஸ்.செயற்கை
இந்த நிலையில் பாறைகளின் தொண்மை மற்றும் அவற்றுக்கு இடையில் உள்ள தொலைவின் அடிப்படியில் புவியியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டு வெவ்வேறு முடிவுகளை தெரிவித்து இருப்பதன் மூலம் கண்டங்களின் நகர்ச்சி எந்த அளவுக்கு உண்மை என்பது தெளிவாகப் புலனாகிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் குறிப்பாக கலிபோர்னியாவின் உள் நாட்டுப் பகுதியில் மலைப் பகுதிகளில் கடல்தளப் பாறைகளும் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் காணப் படுவதன் மூலம் நிலப் பகுதிகள் உயர்ந்து கொண்டு இருப்பதாலேயே நிலத்தில் பிளவுகள் ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
முக்கியமாக நில முறிவானது கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதிக்கு இணையாக வளைந்து இருப்பதும் அந்த நில முறிவானது நிலப் பகுதியானது உயர்ந்ததால் ஏற்பட்டு இருப்பதைப் புலப் படுத்துகிறது.
முக்கியமாக நேர்கோட்டுப் பாதையில்தான் நிலமானது தனித் தனியாக உரசியபடி நகர்ந்து செல்ல முடியும்.
ஆனால்,கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நில முறிவானது நேர் கோட்டுப் பாதையில் இருப்பதாகவும்,ஆனால் கலிபோர்னியாவின் தென் பகுதியில் அந்த நில முறிவின் தொடர்ச்சியானது தென் கிழக்கு திசையை நோக்கி வளைந்து இருக்கிறது.
இந்த நிலையில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது முரண்பாடாக இருக்கிறது.
முக்கியமாக கலிபோர்னியாவின் நில அதிர்ச்சி ஏற்படும் இடங்களைக் குறிப்பிடும் வரைபடத்தில் சான் ஆண்ட்ரியாஸ் நில முறிவும் பகுதி மட்டுமின்றி கலிபோர்னியாவில் உள்ள பேசின் என்று அழைக்கப் படும் பகுதியைச் சுற்றிலும் நில அதிர்ச்சி ஏற்படும் பகுதியாக இருப்பது தெரியவருகிறது.
எனவே நிலப் பகுதியானது நகர்ந்து கொண்டு இருப்பதால்தான் கலிபோர்னியாவில் நில அதிர்ச்சி ஏற்படுவதாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் காஸ்காடியா எரிமலைத் தொடர் உள்ளது.அதில் பதின் மூன்று எரிமலைகள் இருக்கிறது.
அந்த எரிமலைத் தொடரானது வடக்கில் வான் கூவர் தீவிற்கு தென் பகுதியில் இருந்து கலிபோர்னியாவின் வட பகுதி வரை நீண்டு இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகவே, கலிபோர்னியாவிண் வடபகுதியில் நில முறிவுப் பகுதி இருக்கிறது.
அத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவின் தென் பகுதியில் சால்டன் எரிக்குத் தெற்கில் முப்பத்தி மூன்று சேற்று எரிமலைகள் நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
சேற்று எரிமாலைகள் பெரும்பாலும் இந்தோனேசியா, நியூ சிலாந்து ,அந்தமான்,பிலிப்பைன்ஸ்,மற்
எனவே கலிபோர்னியாவில் தென் பகுதியில் நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்கும் சேற்று எரிமலைகளானது அந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் எரிமலைகள் உருவாகிக் கொண்டு இருப்பதை உறுதிப் படுத்துகிறது.
அது மட்டுமின்றி கலிபோர்னியாவின் வட பகுதி வரை நீண்டு இருக்கும் காஸ் கேட் எரிமலைத் தொடரானது தற்பொழுது கலிபோர்னியா பகுதி வரை நீண்டு கொண்டு இருப்பதும் அதனால் கலிபோர்னியாவின் வட பகுதியில் நிலத்தில் முறிவு ஏற்பட்டு இருப்பதையும் புலப் படுத்துகிறது
Comments