கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய கண்டங்களிலும் ஒரே வகையான விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிளவு பட்டுப் பிரிந்து விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் பூமியின் வட துருவப் பகுதியில் இருந்து தெற்கில் தென் அமெரிக்காவின் தென் பகுதி வரை பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.
அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது தொடர்ச்சியாக மேல் நோக்கி உயர்ந்து புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.
இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பாறைக் குழம்பானது வருவதாகவும் அவ்வாறு வரும் பாறைக் குழம்பானது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை பக்க வாட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் தொடர்ச்சியாக புதிய கடல் தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாக பூமியின் வட கோளப் பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி முறையே மேற்கு மற்றும் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இதனால் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று பூமியின் தென் கோ ள ப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி முறையே வடமேற்கு மற்றும் வட கிழக்கு என இரு வேறு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதனால் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு மேற்குப் பகுதியில் உள்ள தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும்,அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
முக்கியமாக கடல் தளமும் கண்டங்களும் பத்து முதல் நாற்பது கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் பாறைகளால் ஆனது.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது பாறைப் பகுதிகளைத் துளைத்துக் கொண்டு கடல் தளத்துக்கு மேலும் கண்டங்களுக்கு மேலும் எரிமலைகளாக உருவாகின்றன.
இதே போன்று அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேலும் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருக்கின்றன,
இந்த நிலையில் உண்மையில் அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும் நகர்ந்து கொண்டு இருந்தால்,அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேலும் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் அட்லாண்டிக் கடலின் வட பகுதியில் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டு என்று அழைக்கப் படும் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கானரி எரிமலைத் தொடரானது மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசை நோக்கி உருவாகி இருக்கிறது.
குறிப்பாக பூமியின் வட கோளப் பகுதியில் உள்ள கண்டங்கள் மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் தென் பகுதியில் கடல் தளத்தின் மேல் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கேமரூன் எரிமலைத் தொடரானது,தென் மேற்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
இப்பகுதியில் கண்டங்களானது முறையே வடமேற்கு மற்றும் வட கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
எப்படி ஆப்பிரிக்கக் கண்டமானது ஒரே நேரத்தில் கிழக்கு மற்றும் வட கிழக்கு என இரண்டு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயம் ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியாது.
இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலம் அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று அட்லாண்டிக் கடலின் வட பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும் கூட ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தளமும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையிலும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கடல் தளங்களுடன் கண்டங்கள் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத் தட்டுகள் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்படுவதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ச்சியாக கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்தே தவிர உண்மையல்ல.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது.
எனவே எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
Comments