காஸ்பியன் கடல் எப்படி உருவானது?
ஈரானுக்கு வட பகுதியில் உள்ள உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடல் உருவானதற்குப் புவியியல் வல்லுனர்கள் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது இருபத்திஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும் அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால் தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே காஸ்பியன் கடலாக உருவானது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது பெருங் கடலில் இருப்பதை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும் காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை.
காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது ஆவியாகி இருக்கிறது.
குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மாட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது.எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது மற்ற கடல் நீரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.
எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம் கஸ்பியன் கடலானது கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது.அத்துடன்காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்ட்சங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால் இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியே காஸ்பியன் கடலாக உருவானது என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு.
அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.
கண்டங்கள் நிலையாக இருந்த நிலையில் .காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது.
Comments