நாசாவின் விளக்கம் சரியா?

( ஜெப்ரி ஸ்டில்வெல் )

( சாதம் தீவு )
நம் பூமி இதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதை புதை படிவங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
சாதம் தீவு என்பது நியூ சிலாந்து தீவிற்கு கிழக்கே எண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய தீவு ஆகும்.குறிப்பாக இந்தத் தீவானது சாதம் மேடு என்று அழைக்கப் படும் ஒரு கடலடி மேட்டுப் பகுதியில் அமைந்து இருக்கிறது.

(சாதம் கடலடி மேடு )
இந்தத் தீவின் வட பகுதியில் உள்ள டாக்கா டிக்கா பகுதியில் ,எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதைபடிவங்களை ,ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெப்ரி ஸ்டில்வெல் என்பவர் கண்டு பிடித்து இருக்கிறார்.

( கடல் மட்டத்தை காட்டும் வரைபடம் )

( கடல் மட்டத்தை காட்டும் வரைபடம் )
ஆனால் இந்த சாதம் தீவானது 500 மீட்டர் (1640 ,அடி )முதல் 1000மீட்டர் (3280 அடி )வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதுடன் ,தீவுகளுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதும், அதன் வழியாக டைனோசர்கள் ஒரு தீவில் இருந்து மற்ற தீவுகளுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 

( அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் புதை படிவங்கள் )

( ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் )
இதே போன்று டைனோசர்களின் புதை படிவங்கள், தென் துருவத் தீவுக் கண்டமான அண்டார்க்டிக்காவிலும், வடதுருவப் பகுதியில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் உள்ள அலாஸ்கா பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்துக்குப் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருப்பது டன், கடலின் பரப்பளவு அதிகரித்து இருப்பதும் அதனால் , பூமியின் வெப்ப நிலை குளிர்ந்து துருவப் பகுதிகளில் பனியடுக்குகள் உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக அண்டார்க்டிக் கண்டமானது பதின்மூன்றாயிரம் முதல் பதினாறாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும் நிலையில் அந்தக் கண்டத்தில் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலமும் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
அதே போன்று டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் தற்பொழுது இருப்பதைப் போன்று பனி அடுக்குகள் இருப்பதற்குப் பதிலாக அடர்ந்த காடுகள் இருந்திருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
கடல் மட்டம் உயர்ந்ததற்கு, கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வழியாக வெளிவரும் நீராவியானது, கடல் நீரால் குளிர்விக்கப் படும் பொழுது நீராகிக் கடலில் கலந்ததே காரணம்.
ஆனால் துருவப் பகுதிகளில் பனி உருவானதற்கும் ,கடல் மட்டமானது தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கும், புவியியல் வல்லுனர்கள் தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

( மிலன்கோவிட்ச் சுழற்சி )

( பூமியின் சுற்றுப் பாதையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடல் மட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டது )
ஆதாவது பூமியானது சில காலம் சூரியனை விட்டு விலகிச் சென்று சற்று பெரிதான நீள் வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் பனி உருவானதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
பின்னர் மறுபடியும் பூமி சூரியனை நெருங்கி வலம் வந்ததாகவும் , அப்பொழுது பூமியின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும், அதனால் துருவப் பகுதியில் இருந்த பனியானது உருகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் உயர்ந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இவ்வாறு பூமியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் சூரியனை நெருங்கியும் விலகியும் சுற்றி வருவதாக மிலன்கோவிட்ச் என்பவர் ஒரு கருத்தை தெரிவித்தார்.இந்தக் கருத்து 'மிலன்கோவிட்ச் சுழற்சி' என்று அழைக்கப் படுகிறது.

அதாவது பூமியில் உள்ள கடல் நீர் அளவு மாறாமல் இருப்பதாகவும், கடலில் உள்ள நீர்தான் நிலத்தின் மேல் பனியாகப் படிந்தது என்றும் புவியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அத்துடன் நிலத்தின் மேல் பனி இல்லாத காலத்தில் கடல் மட்டமானது அதிக பட்சமாக அறுநூற்றி அறுபது அடி மட்டுமே தாழ்வாக இருந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

( நீர் சுழற்சி )
இந்த விளக்கத்தில் உள்ள தவறு என்னவென்றால் பூமியின் வெப்ப நிலை குளிர்ந்தால், துருவப் பகுதிகளில் பனி உருவாகும் என்பது சரியான விளக்கம்.ஆனால் பூமியின் வெப்ப நிலை குளிர்ந்தால் கடல் நீர் ஆவியாவதும் நின்று விடும்.
எனவே கடலில் உள்ள நீர் கடலிலேயே இருக்கும்.
அதே போன்று பூமியின் வெப்ப நிலை அதிகரித்தால், துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கடல் மட்டம் உயரும் என்பதும் சரியே.
ஆனால் அதே நேரத்தில் பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால், கடல் நீரானது ஆவியாகத் தொடங்கி ,வளி மண்டலத்தில் கலந்து மறுபடியும் நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து கடலிலேயே கலந்து விடும்
எனவே கடல் மட்டமானது தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப் படும் விளக்கம் தவறு.
Comments