காஸ்பியன் கடல் எப்படி உருவானது?
casp3.jpg ஈரானுக்கு வட பகுதியில் உள்ள உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடல் உருவானதற்குப் புவியியல் வல்லுனர்கள் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது இருபத்திஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. casp6.png அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும் அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். caspseaformation1.png பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால் தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே காஸ்பியன் கடலாக உருவானது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது பெருங...