ரிசர்ச் ரிப்போர்ட்

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளத்துடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு கண்டங்களானது கடல் தளத்துடன் நகரும் பொழுது பாறைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று கடலுக்கு அடியில், ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது மேற்பகுதியில் உள்ள பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்வதாகவும் அதனால் சுனாமி அலைகள் உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது பல்வேறு வகையான ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு உருவாகி இருக்கும் ஒரு கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் ,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.
இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று தொடர்ந்து நடைபெறுவதாகவும், அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக பூமியின் வட கோளப் பகுதியில் உள்ள கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்வதாகக் கூறப் படும்  கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்வதாகக் கூறப் படும்  கடல் தளத்துடன் ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்கள் கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று பூமியின் தென் கோளப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், அதே போன்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
உணமையில் வட அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல்தளத்துடன் மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல்தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் நில அதிர்சிகளானது தொடர்ச்சியாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை ஏற்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட நில அதிர்ச்சி வரைபடத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரை படம் ஒன்றைத் தாயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமானது  தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல்தளத்துடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பாறைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
ஆனால் தற்பொழுது ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு தனிப் பெருங் கண்டமாக இருந்ததாகவும் பின்னர் அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டத்திற்கு அடிபகுதியில், பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகியதாகவும் அதனால் கணம் அதிகரித்து மறுபடியும் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்றதால் பாஞ்சியாக் கண்டத்திற்கு அடியில் பாறைக் குழம்பானது எதிரெதிர் திசைகளை நோக்கி சக்கரங்கள் போன்று சுழன்றதாகவும் அதனால் பாஞ்சியாப் பெருங்கண்டமானது இரண்டாகப் பிளவு பட்டுப் பிரிந்ததால் பூமியின் வடபகுதியில் லாரேசியா என்ற வடபெருங் கண்டமும் அதே போன்று தென் பகுதியில் கோண்டுவாணா என்ற தென் பெருங் கண்டமும் உருவானதாக நம்பப் படுகிறது.
இதே போன்று மறுபடியும் வடபகுதி லாரேசியாக் கண்டத்திற்கு அடியிலும் பாறைக் குழம்பானது எதிரெதிர் திசைகளை நோக்கி சக்கரங்கள் போன்று சுழன்றதால் லாரேசியாக் கண்டமானது இரண்டாகப் பிளவு பட்டுப் பிரிந்ததால் மேற்குப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டம் உருவாகியதாகவும் அதே போன்று கிழக்குப் பகுதியில் ஐரோப்பா மற்றும் ஆசியாக் கண்டங்கள் அடங்கிய யூரேசியாக் கண்டம் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
தற்பொழுது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பாறைக் குழம்பானது சுழன்று கொண்டு இருப்பதால் அப்பகுதியில் தொடர்ந்து புதிய கடல்தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் கடல்தளத்துடன் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாவும் விளக்கம் கூறப் படுகிறது.

இதே போன்று தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டத்திற்கு அடியிலும் பாறைக் குழம்பானது சக்கரங்கள் போன்று சுழன்றதாகவும் அதனால் கோண்டுவாணாக் கண்டமும் பிளவு பட்டுப் பிரிந்ததால் மத்தியில் அண்டார்க்டிக் கண்டமும் அதைச் சுற்றி தென்அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இன்றும் கூட அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் பாறைக் குழம்பானது சக்கரங்கள் போன்று சுழண்டு கொண்டு இருப்பதாகவும் அதனால் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி வடபகுதியை நோக்கியும் தென் பகுதியை நோக்கியும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதனால் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்து அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும், பின்னர் அதில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்தகாவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தானது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.
எப்படியென்றால் அண்டார்க்டிக் கண்டமானது பூமியின் தென் துருவப் பகுதியில் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அதாவது குறைந்த சுற்று வட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தளத்தால் வட பகுதியை நோக்கி நகர்ந்து அதாவது அதிக சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து அப்பகுதியை நிரப்ப இயலாது.
இதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அதாவது அதிக சுற்று வட்டப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி குறைந்த சுற்று வட்டப் பகுதியில் உள்ள அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமும் முற்றிலும் தவறு.
ஏனென்றால் அதிக சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தளமானது குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்தால் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி விடும்.
எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறான விளக்கம்.
அதுமட்டுமல்லாது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்து அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் இன்றும் கூட இந்த இரண்டு கண்டங்களும் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது.
இவ்வாறு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்பொழுது இருப்பது போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு விலகி நகர்ந்து இருந்தால் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்தின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அவ்வாறு நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் அண்டார்க்டிக் கண்டத்தின் வட பகுதி வரை ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் அண்டார்க்டிக் கண்டத்தின் வடபகுதி வரை பதிவாகி இருக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் கடலடி எரிமலைத் தொடர் எதுவும் உருவாகி இருக்கவில்லை.
எனவே இந்த இரண்டு கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்திருப்பதாகக் கூறுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.
இவ்வாறு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் அப்பகுதியில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன் இந்த இரண்டு கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

ஆனால் இந்த உண்மைக்கு மாறாக இந்திய நிலப் பகுதியானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும் பின்னர் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகவும், அப்பொழுது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியதால் இடையில் இருந்த நிலப் பகுதியானது புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்தான் இமய மலை உருவானதாகவும் நம்பப் படுகிறது.
மேலும் இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தை அழுத்திக் கொண்டு நகர்ந்து கொண்டு இருப்பதால்தான் இமய மலைப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் தவறான விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று இந்திய கடல் தளமும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து இறுதியாக சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு தென் பகுதியில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதாகவும் அதனால் அப்பகுதியில் உள்ள கடல்தரையில் அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதாகவும் தவறான விளக்கம் கூறப் படுகிறது.
மேலும் இவ்வாறு இந்தியக் கடல் தளமானது சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு அருகே பூமிக்குள் உரசிய படி நகர்ந்து கொண்டு இருப்பதால் அப்பகுதியில் பாறைத் தட்டுகளுக்கு இடையில் அழுத்தம் அதிகரித்து பின்னர் திடீரென்று விடுபட்டு, இந்தியக் கடல் தளம் பூமிக்குள் செல்லும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் அப்பொழுது மேற்பகுதியில் உள்ள ஆசியக் கண்டத் தட்டானது மேல் நோக்கி உயர்வதால் சுனாமி அலைகள் உருவாகுவதாகவும்  புவியியல் வல்லுனர்கள் கற்பனையான விளக்கத்தைக் கூறுகின்றனர்.
அது மட்டுமின்றி சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு அருகில் பூமிக்குள் சென்ற கடல் தளமானது பூமிக்குள் இருக்கும் வெப்பத்தால் உருகி இலேசான பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயரும் பொழுது சுமத்ரா மற்றும் ஜாவாத் தீவுகளின் நிலப் பகுதியை பொத்துக் கொண்டு நிலத்திற்கு மேலே வரிசையாக எரிமலையாக உருவாகி இருப்பதாகவும் ஒரு கற்பனை விளக்கத்தைப் புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக கடந்த பத்து கோடி ஆண்டுகளாக அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் வட பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தளமானது இறுதியாக சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு அருகில் பூமிக்குள் செல்வதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் இதே போன்று கடந்த பத்து கோடி ஆண்டுகளாக அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அதிக சுற்று வட்டப் பகுதியில் உருவாகி அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது இறுதியாக என்ன ஆகிறது என்று இது வரை எந்த ஒரு புவியியல் வல்லுனரும் விளக்கம் கூற முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஏனென்றால் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் கடல்தரையில் அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்களும் உருவாகி இருக்கவில்லை.அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி எரிமலைகளும் உருவாகி இருக்கவில்லை.முக்கியமாக அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகளும் ஏற்படாமல் இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலமாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே மலைகள் உருவாகுவதற்கும்,எரிமலைகள் உருவாகுவதற்கும் கடல் தரையில் பள்ளங்கள் உருவாகுவதற்கும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கங்களேயன்றி உண்மையல்ல.

இதே போன்று இந்தியப் பெருங் கடல் தளமானது நிலையாக இருப்பது இந்தியாவிற்கு மேற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உருவாகி இருக்கும் இரண்டு எரிமலைத் தொடர் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக இந்தியாவிற்கு மேற்குப் பகுதியில் அரபிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் லட்சத் தீவுகள் மற்றும் தீகோ கார்சிகாத் தீவுகளானது ஒரு வளை கோட்டுப் பாதையில் உருவாகி இருக்கின்றன.
அதே போன்று இந்தியாவிற்கு கிழக்குப் பகுதியிலும் வங்காள விரிகுடாக் கடலுக்கு அடியில் நேர் கோட்டுப் பாதையில் ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.
குறிப்பாக கடல் தளமானது சராசரியாக பத்து கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் பாறைகளால ஆனது.இந்த நிலையில் கடல் தளத்திற்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது கடல் தளப் பாறைகளைப் பொத்துக் கொண்டு கடல் தளத்திற்கு மேலாக எரிமலையாக உருவாகின்றன.
இவ்வாறு கடல் தளத்திற்கு மேலே எரிமலைகள் உருவாகும் பொழுது உண்மையில் இந்தியக் கடல் தளமானது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்தியாவிற்கு இரு புறமும் உள்ள கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் இரண்டு கடலடி எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவிற்கு மேற்கிலும் கிழக்கிலும் உள்ள கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் இந்தியக் கடல் தளமும் இந்தியக் கண்டமும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி ‘’கிழக்கு’’ திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் ‘’வடகிழக்கு’’ திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டின் மேல் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கானரி எரிமலைத் தொடரானது மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
இதன் படி ஆப்பிரிக்கக் கண்டமானது மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.
ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கினியா வளை குடாப் பகுதியில் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் இருந்து தொடர்ச்சியாக ஆப்பிரிக்காக் கண்டத்திற்கு மேல் பகுதி வரை உருவாகி இருக்கும் கேமரூன் எரிமலைத் தொடரானது தென் மேற்கு திசையில் இருந்து வட கிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
இதன் படி ஆப்பிரிக்கக் கண்டமானது தென் மேற்கு திசையில் இருந்து வாடா கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.
எப்படி ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியும்?
இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரின் மூலம் அட்லாண்டிக் கடல்தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரே கால கட்டத்தில் உருவாகி இருக்கும் அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.இதன் மூலம் வட அமெரிக்கக் கண்டமானது நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும்,லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும் கூட ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தளமும் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இந்த நிலையில் பசிபிக் கடல் பகுதியில் தென் கிழக்குப் பகுதியில் குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள ‘கிழக்கு பசிபிக் கடலடி மேடு’ என்று அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியிலும் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி ( அட்லாண்டிக் கடல் பகுதியில் கூறப் பட்டதைப் போன்றே ) வடமேற்கு மற்றும் தென் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி கடல் தளமனது நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் வடமேற்கு திசையை நோக்கி நகரும் கடல் தளமனது இறுதியில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு அருகில் பூமிக்குள் சென்ற பிறகு, பாறைக் குழம்பாக உருகி மேல் நோக்கி உயர்ந்து புவித் தரையைப் பொத்துக் கொண்டு மேலே எரிமலைகளாக உருவாகுவதகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று கிழக்கு பசிபிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது இறுதியாக, தென் அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் பூமிக்குள் சென்ற பிறகு பாறைக் குழம்பாகி உயர்ந்து தென் அமெரிக்கக் கண்டத்தைப் பொத்துக் கொண்டு அந்தக் கண்டத்திற்கு மேலே ஆண்டிஸ் மலைப் பகுதியில் வரிசையாக எரிமலைகளாக உருவாகி இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

மேலும் இவ்வாறு பிலிப்பைன்ஸ் ஜப்பான் போன்ற தீவுகளுக்கு அருகிலும்  தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் கடல் தளமானது பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதால்தான் அப்பகுதியில் உள்ள கடல் தரையின் மேல் அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதாகவும் அதே போன்று ஜப்பான் பிலிப்பைன்ஸ் தீவுகளிலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலும் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் சுனாமிகள் ஏற்படுவதற்கும் இவ்வாறு கடல் தளமானது அப்பகுதியில் பூமிக்குள் உரசியபடி நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று தவறாக நம்பப் படுகிறது.
குறிப்பாக கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் புதிய கடல் தளமானது வேகமாக உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் டோங்கா தீவுக்கு அருகிலும் கடல் தரையின் மேல் நீண்டு குறுகிய பள்ளம் உருவாகி இருக்கிறது.
இதன் அடிப்படையில்  அண்டார்க்டிக் கண்டத்திற்கு வடபகுதியில் புதிய கடல் தளம் உருவாகி வடமேற்கு தென் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி கடல் தளமானது விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் வடமேற்கு திசையை நோக்கி செல்லும் கடல் தளமானது இறுதியாக டோங்கா தீவுக்கு அருகில், பூமிக்கு அடியில் செல்வதாக விளக்கம் கூறப் படுகிறது.
இது போன்று அண்டார்க்டிக் கண்டத்தின் வட பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிழக்கு பசிபிக் கடலடி கடலடி மேட்டுப் பகுதியிலும் புதிய கடல்தளம் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இப்பகுதியில் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருக்கும் கடல்தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு அண்டார்க்டிக் கண்டத்தின் வட பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் அவ்வாறு கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதிக்கும் டோங்கா பகுதிக்கும் இடையில் உள்ள கடல்தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் அண்டார்க்டிக் கண்டத்தின் வட பகுதி வரை பதிவாகி இருக்க வில்லை.
எனவே பசிபிக் கடல் பகுதியில் தனித் தனியாக கடல்தளங்கள் உருவாகி நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன் கடல்தளமானது நிலையாக இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
முக்கியமாக பிலிப்பைன்ஸ் ,ஜப்பான் டோங்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் பூமிக்கு அடியில் கடல் தளம் நகர்ந்து சென்று கொண்டு இருப்பதால் அப்பகுதிகளில் கடல் தரையில் பள்ளங்கள் உருவாகி இருப்பதாக விளக்கம் கூறும் புவியியல் வல்லுனர்கள் ஏன் அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் கடல் தளமானது இறுதியாக என்ன ஆகிறது? ஏன் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளங்களும் எரிமலைகளும் உருவாகி இருக்க வில்லை? என்பதற்கும், ஏன் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வில்லை/ என்பதற்கும் ஏன் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூற முன் வரவில்லை? என்பது புரியவில்லை.
இவ்வாறு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் கடல் தரையின் மேல் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகாமல் இருப்பதன் அடிப்படையிலும், அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும் எரிமலைகள் உருவாகாமல் இருப்பதன் அடிப்படையிலும், அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையிலும், அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் தளமும் அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியுள்ள கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.
எனவே கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது அடிப்படையில் ஆதாரமற்ற விளக்கம் என்பதுடன் முற்றிலும் தவறான விளக்கமும் ஆகும்.
சுருக்கமாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள அட்லாண்டிக் கடல் பகுதியிலும்,இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள இந்தியப் பெருங் கடல் பகுதியிலும்.பசிபிக் பெருங் கடல் பகுதியிலும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையிலும், அந்தக் கடல் தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் அந்த கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபட ஆதாரம் மூலமாக தெரியவந்துள்ளது.எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரை பட ஆதாரம் மூலமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று தரை மட்ட மாறுபாடுகளை நுட்பமாகப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள ஆரிகன் மாகாணத்தில் ‘மூன்று சகோதரிகள்’ என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
அந்த எரிமலைப் பகுதியை எரிமலை இயல் வல்லுனர்கள், தரை மட்ட மாறுபாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வந்தனர்.
குறிப்பாக அந்த எரிமலையின் மேல் செயற்கைக் கோள் பறந்து செல்லும் பொழுது செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டன.
அந்த ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான கருவிகள் மூலம் தரையின் ஏற்றத் தாழ்வுகள் நீலம்,சிவப்பு,மஞ்சள் போன்ற வண்ணங்களாக பதிவு செய்யப் பட்டது.
இதே போன்று மறுபடியும் அதே எரிமலைப் பகுதியின் மேல் செயற்கைக் கோள் பறந்து சென்ற பொழுதும், ரேடியோ கதிர்கள் மூலம் தரையின் மேடுபள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.
இவ்வாறு ஒரு எரிமலைப் பகுதியின் மேல் வெவ்வேறு காலத்தில் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம் பதிவு செய்யப் பட்ட தரை மட்ட மேடு பள்ளப் பதிவுகளை, கணினி உதவியுடன் ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில் அந்த எரிமலைப் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான மாற்றம் கூட பதிவாகிறது.
உதாரணமாக இந்த முறையில் ஒரு வயல் வெளியை உழுதிருந்தால் கூட கண்டு பிடித்து விட முடியும்.
இதே முறையில் ஆரிகன் மாகாணத்தில் உள்ள எரிமலைப் பகுதியின் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்து பார்த்த பொழுது அந்தப் பகுதியில் அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையானது பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.
‘ஆரிகன் புடைப்பு’ என்று அழைக்கப் பட்ட அந்தப் பகுதிக்கு எரிமலை இயல் வல்லுனர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, அப்பகுதியில் பூமிக்கு அடியில் ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிற்கு பாறைக் குழம்பு திரண்டு இருந்ததாகவும், அப்பகுதியில் பூமிக்கு அடியில் புதிதாக ஒரு எரிமலை உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2004  ஆம் ஆண்டு ஒரே மாதத்தில் அந்த புடைத்த பகுதியின் மத்தியப் பகுதியில் மட்டும் முன்னூற்றி ஐம்பதுக்கும் அதிகமான முறை சிறிய அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எரிமலைகளைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்
மியாமி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், தரை மட்ட மாறுபாடுகளை ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை ஆய்வு செய்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
இவ்வாறு எரிமலையைச் சுற்றியுள்ள தரையில் வளைய வடிவில் மேடு பள்ளங்கள் உருவாகுவதற்கு, அந்த எரிமலையானது உயர்ந்து இறங்குவதே காரணமே என்று டாக்டர் ஜூலியட் பிக் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு திரண்டு அந்த எரிமலை உயரும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் எரிமலையுடன் சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இதே போன்று அந்த எரிமலையில் இருந்து வாயுக்களும் நீராவியும் வெளியேறி எரிமலையின் உயரம் மறுபடியும் இறங்கும் பொழுது எரிமலையுடன் வட்ட வடிவில் உயர்ந்த தரைப் பகுதியானது, மறுபடியும் தாழ்வடையும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக வடுக்கள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.
இந்த நிலையில் கடந்த 2009  ஆண்டு இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போலவே சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும் கதிர் வீச்சுத் தன்மை உடைய வாயு வெளிப் பட்டு இருந்ததை நில அதிர்ச்சி ஏற்படுவதை முன் கூட்டியே கணிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.
முக்கியமாக ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப்படும் வாயுவாகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே இத்தாலி நாட்டில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 11.03.2011  அன்று ஜப்பானின் ஹோண்சு தீவுக்கு அருகில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி ஏற்பட்டது.
அப்பொழுது ஹோண்சு தீவில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இதற்கு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.
குறிப்பாக ரேடான் வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால் அந்த எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான் மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருகிக்ன்றனர்.
மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 12.01.2010  அன்று ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்சிக்குப் பிறகு ஹைத்தி தீவின் கடற் கரையானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது.அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்து உயர்ந்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 26.12.2004 அன்று,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி உருவானது.
அந்த நில அதிர்சிக்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன.
இந்த நிலையில் அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் 20.02.2008 அன்று கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஐம்பத்தி ஒன்பது சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்திருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே தெற்காசிய சுனாமி உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.




பல்வேறு வகையான ஆதாரங்களின் அடிப்படையில் கண்டங்கள் நிலையாக இருப்பது நிரூபனமாகியுள்ளது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் மலைப் பகுதிகள் உள்பட பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இவ்வாறு தீவுகளும் கண்டங்களும், கோளமான புவிப் பரப்பில் இருந்து செங்குத்தாக உயர்வதால், புவிப் பரப்பில் தீவுகளுக்கு அருகிலும் கண்டங்களுக்கு அருகிலும் கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகின்றன.இதே போன்று கண்டங்களின் மேல் உள்ள மலைத் தொடர்களும் எரிமலைத் தொடர்களைப் போலவே உருவாகி இருக்கின்றன.
இதே போன்று பல்லாயிரம் கிலோ எடையுள்ள டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்களானது மடகாஸ்கர்,நியூசிலாந்து,,கியூபா போன்ற தீவுகள் உள்பட ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக் ஆகிய கண்டங்களிலும் காணப் படுவதன் அடிப்படையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதுடன் பின்னர் உயர்ந்து இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
இதற்கு கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளின் வழியாக வெளியேறும் நீராவி குளிர்வதால் உருவாகும் நீர் கடலில் கலப்பதே காரணம்.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவாலாக வாழ்ந்து மடிந்த பிளேட்டியோசாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதே போன்று இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடி பீட பூமியின் தொன்மையை அறிவதற்காக துளையிட்டு சேகரிக்கப் பட்ட பாறைப்பகுதிகளானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருப்பது தெரியவந்தது.
அது மட்டுமல்லாது அந்தப் பாறைகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது  இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பதுடன், அதன் வழியாகவே டைனோசர்களும் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 
குறிப்பாக தற்பொழுது பல கிலோ மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப் பட்டுள்ள அண்டார்க்டிக் கண்டத்தில் காணப் படும் டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் டைனோசர்கள் காலத்தில் அண்டார்க்டிக் கண்டத்தில் அடர்ந்த காடுகளுடன் வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருந்திருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்தாதால், பூமியின் வெப்ப நிலை குளிர்ந்து கொண்டு இருப்பதும் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருப்பதும் நிரூபனமாகிறது.
எனவே பூமியின் வெப்ப நிலை குளிர்ந்ததால் டைனோசர்கள் உண்ட தவர வகைகளும் டைனோசர்களும் அழிந்திருப்பதும் நிரூபனகிறது.
இன்றும் கூட கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றே காரணம்.கடல் மட்ட உயர்ந்து கொண்டு இருப்பதாலும் கடலின் பரப்பளவு அதிகரித்துக் கொண்டு இருப்பதாலும் பூமியானது உண்மையில் குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
அது மட்டுமல்லாது பூமியின் அச்சுச் சாய்வால் தற்பொழுது துருவப் பகுதிகளில் நான்கு மாதம் தொடர்ந்து பகலும் நான்கு மாதம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இவ்வாறு நான்கு மாதம் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.எனவே துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகளும் உருவாகி இருக்க இயலாது.எனவே டைனோசர்கள் காலத்திற்கு பிறகே பூமியின் அச்சுச் சாய்வு ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமியை நெருக்கமாக கடந்து சென்ற குருங்கோள் காரணமாக இருந்திருக்கலாம்.ஒரு வேளை அந்த குருங்கோளானது தற்பொழுதும் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கலாம்.அல்லது செவ்வாய்,புதன் வெள்ளி போன்ற கிரகங்களும் கூட காரணமாக இருக்கலாம்.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
சென்னை.
11.08.2023


Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?