My Explanation for the distribution fossils

ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தும் ஆர்க்டிக் புதைபடிவங்கள். ‘’ஆர்க்டிக் பகுதியில் தொடந்து ஐந்து மாதங்கள் இரவு நீடிக்கும் நிலையில், டைனோசர்கள் வாழ்ந்த அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி வார்ந்தன?’’ ( சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு சென்டிகிரேட் வெப்ப நிலை தேவை. . ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள எட்மாண்டோ சாரஸ்,என்ற டைனோசரின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதுபோன்ற பெரிய அளவு டைனோசர்கள் அடை காப்பது இல்லை.எனவே ஆர்க்டிக் பகுதியில் கால்பந்து அளவு உள்ள,டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.) பூமியானது தன் அட்சில் இருபத்திமூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச்சுற்றிக்கொண்டு இருப்பதால், துருவப்பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து பகலும், அதே போன்று, ஐந்து மதங்கள் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இவ்வாறு ஐந்து மாதங்கள் தொடர்ந்து நீடிக்கும் குளிர் காலத்தில், வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரி வரை செல்கிறது. இந்தநிலையில் தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச்சேர்க்கை செய்து தங்களின் வளர்ச்சிக்குத் தேவையான சர்க்கரை சத்துப்பொருளை உற்பத்தி செய்ய இயலாது. இந்த நிலையில் வட துருவப்பகுதியில் அமைந்து இருக்கும்எல்லில் மெர் தீவிலும், அச்சல் ஹை பர்க் தீவிலும் ஐந்துகோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த பசுமைக் காடுகள்வளர்ந்துஇருப்பதற்கு ஆதாரமாக பலவகையான ரங்களின்புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்தக் கண்டு பிடிப்பு குறித்து, லூசியானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, புவிவேதியல் மற்றும் புவி உயிரியல் வல்லுனரான, டாக்டர் ஹோப் ஜெகரன், நான்கு மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் ஆக்சல் ஹைபர்க் தீவில், செம்மரக் காடுகள் எப்படி வளர்ந்தன என்பது, மர்மமாக ருக்கிறது என்று வியப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த மரங்களை பார்க்கும் பொழுது, தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இப்பதைப் பார்ப்பது போல ஆச்சர்யமாக இருக்கிறது, என்றும் டாக்டர்,ஹோப்ஜெகரன் தெரிவித்து இருக்கிறார். 000000000 எல்லிஸ் மெர் தீவு புதைபடிவங்கள். குறிப்பாக பாலூட்டி விலங்கினங்கள், உணவை செரிப்பதன் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. அத்துடன் உடல் வெப்பத்தை பாதுகாக்க மயிர்த் தோலையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பாலூட்டிகளின் உடல் வெப்பமாக இருப்பதால், இரவிலும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க முடிகிறது. அத்துடன் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளிலும் பாலூட்டிகளால் வாழ முடிகிறது. ஆனால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக்கூடிய, பாம்புகள் பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகளால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே ஊர்வன வகை விலங்கினங்கள் உடல் வெப்பத்தை உயர்த்திக் கொள்ள சூரிய வெளிச்சத்தில் உடலை காய வைக்கின்றன. அதனால் துருவப் பகுதிகளில் ஊர்வன வகை விலங்கினங்கள் வசிப்பதில்லை. மாறாக ஊர்வன வகை விலங்கினங்கள் அதிக வெப்பம் நிலவக் கூடிய பூமத்தி யரேகைப் பகுதியிலயே அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில், கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில், நாலரை முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, ராட்சத பாம்புகள், முதலைகள், பல்லிகள், மற்றும் கால பாகஸ் தீவுகளில் "இந்தத் தீவு களுக்கு இந்த விலங்குகள் எப்படி வந்தன" என்று டார்வின் பார்த்து வியந்த, ராட்சத தரை வாழ் ஆமைகள், போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்றும் ஆதிகாலக் குரங்குகள், டபிர் என்று அழைக்கப்படும் பன்றி போன்ற விலங்கினம், ஐந்து டன் எடையுள்ள நீர் யானை போன்ற "கோரி போடன்" என்ற விலங்கு மற்றும் காண்டாமிருகம் போன்ற "பிராண்டோ தீரி" ஆகிய பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கண்டு பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த, கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விலங்கியல் வல்லுனரான டாக்டர், ஜெயலின் எபெர்லி, ‘’எல்லிஸ் மெர் தீவில், ராட்சத தரை வாழ் ஆமைகளின் புதை படிவங்கள் காணப்படுவது குழப்பமாக இருக்கிறது’’ என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பு,முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் தாவரங்களின் செல்களை ஆய்வு செய்த, விஞ்ஞானியான ராபர்ட் ஹூக், இங்கிலாந்தின் டோவர் பகுதியில் ராட்சத ஆமையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது "அப்படி என்றால் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அதிக வெப்ப நிலை இந்திருக்க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்தார். 00000000 ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எழுதிய கட்டுரையை,டைம் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரையை அலாஸ்கா பல்கலைக் கழகம் தனது இணையப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது. அந்தத் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் . இந்த மரங்களானது நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையானது என்றாலும் கூட அந்த மரங்களானது கல்மரங்களாக மாறாமல் இருக்கிறது. அதற்கு அந்த மரங்கள் மண்ணால் திடீரென்று மூடப்பட்ட பிறகு ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த மரங்கள் முதலில் வளர்ந்தன? ஏனென்றால், ஆண்டுக்கு நான்கு மாத காலம் தெரடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய அவசியமான சூரிய வெளிச்சம் இல்லாத சூழலில் எப்படி இந்த மரங்கள் வளர்ந்தன என்பதுதான் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் அலாஸ்காவில்,ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந் த டைனோசர்கள் உட்பட ஆயிரக் கணக்கான மற்ற விலங்கினங்களும் அழிந்தன, அதற்கான காரணம் இதுவரை அறியப் படவில்லை. அதே போன்று இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. ஆண்டில் பாதி காலம் இரவு நீடிக்கும் ஆர்க்டிக் பகுதியில், ஒருவேளை குளோபல் வார்மிங் காரணமாக வெப்பத்தை பெற்றாலும் கூட, எப்படி இந்த விலங்குகளும், தாவரங்களும், உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூரிய வெளிச்சத்தைப் பெற்றன. அதற்கு அந்த காலத்தில் அந்த நிலப் பகுதிகள் அதிக சூரியவெளிச்சம் விழக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு, துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து இருக்கலாம் என்று கூறப்படும் கண்டத்தட்டு நகர்ச்சி விளக்கம் இங்கே, அதிஉயர் ஆர்க்டிக் பகுதிக்கு பொருந்தாது. ஒருவேளை, பூமியின் அச்சு சாய்ந்ததால், ஆர்க்டிக் பகுதியில் அதிக வெளிச்சம் கிடைத்திருக்குமா? ஆனால் அதற்கு எந்த இயக்க செயல் பாடும் அறியப்பட வில்லை. எனவே நாம் தற்பொழுது, செய்யவேண்டிய தெல்லாம், முன் ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், ஒப்பீட்டளவில் வெப்பமான அடர்ந்த காடுகளில், டைனோசர்களும், மற்ற விலங்கினங்களும், இருளில் வாழ்ந்திருக்கிறது என்பதை நம்பியாக வேண்டும். எப்படி இந்த விலங்கினங்களும் தாவரங்களும் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்பது விடையளிக்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மம். -பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், ஆர்க்டிக் புதைபடிவப் புதிர்களுக்கு காரணம் என்ன? 00000000000000000000000000000000000000000000 ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தும் அண்டார்க்டிக் கண்டத்தின் புதைபடிவங்கள். கடந்த 2017 ஆண்டு, மில்வாக்கி-விஸ்கான்சிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் சூழலியல் வல்லுனரான டாக்டர். எரிக் குல்பிரான்சன் குழுவினர் அண்டார்க்டிக் கண்டத்தில் புதை படிவ ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது டிரான்ஸ் அண்டார்க்டிக் மலைப் பகுதில். மண்ணுக்கு அடியில் பாதி புதையுண்ட நிலையில் பதின்மூன்று மரங்களின் அடிப்பகுதி கல்லாக மாறி இப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த மரங்களானது, இருபத்தி ஆறு முதல் இருபத்தி எட்டு கோடி ஆண்டுகள் தொன்மையானது என்று தெரியவந்துள்ளது. புதைbபடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்ட இடமானது, தென் துருவப் பகுதியில் இருந்து, நானூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு ஒற்றைப் பெருங்கண்டமாக இந்த தாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்ட மானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்ததாக நம்பப்படுகிறது. எனவே எப்படி நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் சூழலில், காடுகள் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு டாக்டர் குல் பிரான்சன், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் குளிர் காலத்தை எப்படியோ சமாளித்து இந்தக் காடுகள் வளர்ந்து இருக்கின்றன, ஆனால் அதுபற்றி நாங்கள் இன்னமும் முழுதாகப் புரிந்து கொள்ள இயல வில்லை,என்று தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பாஞ்சியா கருத்தின்படி, பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சியா சூப்பர் கண்டமானது, பூமத்திய ரேகைப் பகுதியில் பிளவு படத் தொடங்கியது. அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கியும் அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென்பகுதியை நோக்கியும் நகர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அத்துடன் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பிரிந்து வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்டமானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, தென்துருவப் பகுதியிலேயே இருக்கிறது. இந்தநிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, முதன் முதலில் தாவரங்கள் நீரில் இருந்து நிலத்திற்கு வந்து வாழத்bதொடங்கியதில் இருந்து, அதாவது நாற்பதுகோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைபடிவங்கள் முதல், கடந்த ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் புதைபடிவங்கள் வரை அண்டார்க்டிக் கண்டத்தில் காணப்படுகிறது. அதாவது பூமியில், தாவரங்களின் மொத்த பரிணாம வளர்ச்சியே அண்டர்க்டிக் கண்டத்தில் புதைபடிவங்களாகக் காணப்படுகிறது என்று டாக்டர் எரிக் குல்பிரான்சன் தெரிவித்து இருக்கிறார். முதலிள் அண்டார்க்டிக் கண்டத்தில் சில தாவர மற்றும் விலங்கின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்களும் விலங்குகளும், அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும் குளிர் கால இரவுக்bகாலத்தை சமாளித்து வாழ்வதற்கு, சில சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் பல நூறு தாவர இனங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று நூற்றுக்கும் அதிகமான விலங்கினங்களின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அண்டர்க்டிக் கண்டத்தில் ஆரம்பத்தில் சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில், பூமியில் ஏற்பட்ட அதிக அளவிலான எரிமலைச் சீற்றங்களால், பூமியின் வெப்ப நிலை உயர்வால், அண்டார்க்டிக் கண்டத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் மூலம், கடந்த பத்து கோடி ஆண்டுகாலமாகவே அதிக வெப்ப நிலையும் சூரிய வெளிச்சமும் இருத்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற வெப்பமான கடல் தரைப் பகுதியில் வாழ்ந்த"டிரைலோபைட்" என்று அழைக்கப்படும் கடல் பூச்சியின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று இருபத்தி ஐந்து கோடி கண்டு களுக்கு முன்பு, அதாவது பெர்மியன் காலத்தில் வாழ்ந்த லிஸ்ட்ரோ சாரஸ், சைனோ நேதஸ், போன்ற ஆதிகால பாலூட்டிகளின் புதை படிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. முக்கியமாக டைனோசர் இனமானது பூமியில் இருபத்திமூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டிரையாசிக் என்று அழைக்கப்படும் காலத்தில் சிறிய ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து தோன்றியது. இந்த நிலையில் டிரையாசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்கள் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டு இருக்கின்றன.அதே போன்று டிரையாசிக் காலத்திற்கு அடுத்து வந்த ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று ஜுராசிக் காலத்திற்கு அடுத்து வந்த கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக டேனோசர் இனமானது பூமியில் பதினாறு கோடி ஆண்டுகள் வாழ்ந்து இருக்கின்றன. இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் "சாரோ போட்" என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. தாவர உண்ணி வகையான ‘சாரோ போட்’ டைனோசரின் புதைபடிவங்களானது ஏற்கனவே ஏழு கண்டங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் டைனோசர் காலத்தில் பூமியெங்கும் ஏறக்குறைய ஒரே விதமான காலநிலை இருந்திருக்கலாம் என்றும்vஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டின் ஆல்பிரட் வெக்னர் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் கிளேக் அண்டார்க்டிக் கண்டத்தின் கடற் கரைப் பகுதியில்,கடல் தரைக்கு அடியில் நூறு அடி ஆழம் வரைக்கும் துளையிட்டு படிவுகளை சேகரித்து, அதனை சி.டி.ஸ்கேன் முறையில் ஆய்வு செய்தனர். அப்பொழுது, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான அந்த படிவுகளில் தாவரங்களின் வேர்கள், மற்றும் மகரந்தத் துகள்களின் புதைபடிவங்கள் இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில். அடர்ந்த பகமைக் காடுகள் இருந்ததாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த புதைபடிவங்கள் எடுக்கப்பட்ட இடமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்துருவப் பகுதியிலேயே இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த படிவுகளில் முன்னூற்றி அறுபதுக்கும் அதிகமான தாவர இனங்கள் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் ஏன் குளிர்ச்சி ஏற்பட்டு, பனிப்படலங்கள் உருவானது என்ற கேள்விக்கு விடை காண தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் நாங்கள் செய்து பார்த்த "பல கால நிலை மாதிரி ஆய்வில்" திருப்திகரமான விளக்கம் கிடைக்க வில்லை என்று அந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜெரிட் லோக்மன் தெரிவித்து இருக்கிறார். அண்டார்க்டிக் கண்டத்தில், அல்லிப்பூக் குளத்தில் வாழ்ந்த தவளைகள். ஸ்வீடன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர்,தாமஸ் மோர்ஸ் குழுவினர், அண்டார்க்டிக் கண்டத்தில் மேற்கொண்ட ஆய்வில், அண்டார்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, தவளையின் புதைபடிவங்களைக் கண்டு பிடித்தனர். அத்துடன் அந்த புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் அல்லிப் பூக்களின் புதைபடிவங்களையும் கண்டுபிடித்தனர். முக்கியமாக அந்த தவளையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் "ஹெல்மெட் தலை" தவளை இனத்தைச் சேர்ந்தது என்பதையும் கண்டு பிடித்து இருக்கின்றனர்., அதன் அடிப்படையில் அண்டர்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மிதமான காலநிலை இருந்ததாகவும், அதே போன்று தென் அமெரிக்காக் கண்டத்திற்கும்,அண்டர்க்டிக் கண்டத்திற்கும் இடையே நிலத் தொடர்பு இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக்vகுழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டதற்கு விளக்கம் கூறும் முயற்சிகள் நூற்றிஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. 00000000000000000000000000000000000000000000 இதுபோன்றே பல புதைபடிவப் புதிர்கள் குறித்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பல ஆராய்ச்சியாளர்கள் |விளக்கங்கள் தெரிவித்து இருக்கின்றனர். உங்களுக்கு தெரிஞ்சா செல்லுங்க! சுருக்கமாக.... துருவப் பகுதிகளில்,ஐந்து மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும்நிலையில், வெப்பநிலையானது மைனஸ் எண்பது டிகிரி வரை கீழே செல்கிறது.இதுபோன்ற சூழல் பல மாதங்கள் நீடிக்கும் பொழுது,சூரிய ஒளியின்றி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்து தங்களின் வளர்ச்சிக்குத் தேவையான சர்க்கரைசத்துப்பொருளைஉற்பத்தி செய்து இருக்க இயலாது. எனவே துருவப்பகுதிகளில் காடுகள் வளர்ந்து இருக்க இயலாது. அதேபோன்று யானைக்கூட்டத்தைவிடபலமடங்கு தாவரங்களை உண்ணக்கூடிய டைனோசர்களும் மற்ற விலங்கினங்களும் துருவப்பகுதிகளில் வாழ்ந்து இருக்க சாத்தியம் இல்லை. ஆனால் அவற்றின் புதைபடிவங்கள் துருவப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தப் புதிருக்கு விடை காண, இன்றுவரை தாவரவியல் வல்லுனர்கள், விலங்கியல் வல்லுனர்கள், காலநிலை இயல் வல்லுனர்கள் மற்றும் புவியியல் வல்லுனர்கள்,குழப்பத்திலும், ஆச்சர் யத்திலும் மூழ்கி இருக்கின்றனர். Oooooooooooooooooooooooooo சுருக்கமாக.... துருவப் பகுதிகளில்,ஐந்து மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும்நிலையில், வெப்பநிலையானது மைனஸ் எண்பது டிகிரி வரை கீழே செல்கிறது.இதுபோன்ற சூழல் பல மாதங்கள் நீடிக்கும் பொழுது,சூரிய ஒளியின்றி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்து தங்களின் வளர்ச்சிக்குத் தேவையான சர்க்கரைசத்துப்பொருளைஉற்பத்தி செய்து இருக்க இயலாது. எனவே துருவப்பகுதிகளில் காடுகள் வளர்ந்து இருக்க இயலாது. அதேபோன்று யானைக்கூட்டத்தைவிடபலமடங்கு தாவரங்களை உண்ணக்கூடிய டைனோசர்களும் மற்ற விலங்கினங்களும் துருவப்பகுதிகளில் வாழ்ந்து இருக்க சாத்தியம் இல்லை. ஆனால் அவற்றின் புதைபடிவங்கள் துருவப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தப் புதிருக்கு விடை காண, இன்றுவரை தாவரவியல் வல்லுனர்கள், விலங்கியல் வல்லுனர்கள், காலநிலை இயல் வல்லுனர்கள் மற்றும் புவியியல் வல்லுனர்கள்,குழப்பத்திலும், ஆச்சர் யத்திலும் மூழ்கி இருக்கின்றனர். Oooooooooooooooooooooooo கண்டங்கள் நகர்கிறதா?அல்லது, பூமி விரிவடைகிறதா? முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை, 1570 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சேர்ந்த ஆபிரஹாம் ஆர்டெல்லியஸ் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்து வெளியிட்டார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஓரப் பகுதிகளானது, ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று,ஒன்றுக் கொன்று இணையான வடிவத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தப் புதிரானது 'மேட்சிங் கோஸ்ட் லைன்' என்று அழைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்து இருக்க வேண்டும் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஆர்டெல்லியஸ் விளக்கம் கூறினார். இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று, ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்களானது படிப் படியாக, பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும், ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது. அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது. அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது, சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது, மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும், அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் 1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர், ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு ‘’டெதிஸ்’’ என்றும் பெயர் சூட்டினார். அதன் பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் பாகங்களானது, தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு கண்டத்திற்கு இடைப் பட்ட நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார். இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர், ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. குறிப்பாக கண்டங்களானது, இலேசான கிரானைட் வகை பாறையால் ஆனது.கண்டங்களின் சராசரி தடிமனானது நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர். ஆனால் கடல் தளமானது அதிக கடினமான நீரை உறிஞ்சாத கடப்பாக கல்லால் ஆனது.கடல் தளத்தின் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர். அதன் அடிப்படையில்,வெக்னர்,கண்டங்களானது, இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருந்தால், அந்த தற்காலிக நிலப் பாலமானது, அதிக கனமான கடல் தரைக்குள் மூழ்கி இருக்க இயலாது. அவ்வாறு இன்றி தற்காலிக நிலப் பலமானது, அதிக கனமான கடல் தள பாறையால் ஆகி இருந்தால், அந்த பாலமானது, கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்து இருக்க இயலாது, எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று வெக்னர் வாதிட்டார். ஆனாலும் புவியியலாளர்கள் ஒரு வேளை கடல் பகுதிக்கு சுனாமி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு தற்செயலாக பரவி இருக்கலாம் என்றும் நம்பினார்கள். இந்த நிலையில் ஆக்ரோஷமான கடலால் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் ''லிஸ்டரோ சாரஸ் '' என்று அழைக்கப் படும் மெதுவாக நடக்கும் ஒரு மந்தமான மூதாதை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்களானது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. இந்த விலங்குக்கு பற்களுக்குப் பதிலாக யானையை போன்று தந்தங்கள் மட்டுமே உண்டு.அதன் அடிப்படையில் இந்த விலக்கானது தரைக்கு அடியில் இருக்கும் கிழங்கு மற்றும் வேர்களை தோண்டி எடுத்து உண்ணும் வாழ்க்கை முறையை கொண்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களானது ஏற்கனவே இந்தியா, சீனா, ரஸ்யா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சைனோ நேதஸ் என்ற விலங்கின் .புதை படிவங்களும் அண்டார்க்டிகாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இந்த விலங்கின் பல்லானது நாயின் பல்லை போன்று இருப்பதால் சைனோ நேதஸ் என்று அழைக்கப் படுகிறது.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களும் தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. லிஸ்டரோ சாரஸ் போன்ற ஒரு 'மந்தமான விலங்கால்' கடலில் பல நாட்கள் மரக் கிளைகள் மேல் இருந்தபடி கடலில் தத்தளித்தபடி ஆக்ரோஷமான கடல் பகுதியைக் கடந்து அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது. எனவே புவியியலாளர்கள் வெக்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர். 00000000000000000000000000000000000 00000000000000000000000000000000000 இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய சைகேட் மற்றும் பெரணி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். 00000000000000000000000000000000000 00000000000000000000000000000000000 எனவே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் நகர்வதற்கான சாத்தியங்கள் குறித்து யோசிக்கலாயினர். இந்த நிலையில்,வெக்னர், ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள், அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை, வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தைச் சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். முதல் பிரிவு. அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். இரண்டாவது பிரிவு. அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். மூன்றாவது பிரிவு. அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி, விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பணி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே, த்ராப் அந்த வரை படத்தை தயாரித்தார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில். வடக்கு தெற்கு திசையில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, எரிமலைத் தொடர் இருப்பதுடன், அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும், வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப், வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின், பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படத்தையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை, ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரை படத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது, ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது. இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம், ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. அமெரிக்க கடல் ஆய்வு மையம் வெளியிட்ட மிட் ஒசேன் ரிட்ஜ் படம். ( இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் ''மிட் ஒசேன் ரிட்ஜ்'' உருவாக்கி இருக்க வில்லை.அதே போன்று வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையிலும் ''மிட் ஒசேன் ரிட்ஜ்'' உருவாக்கி இருக்க வில்லை ) அதாவது கண்டங்கள் எல்லாம் வெக்னர் கூறியதை போன்று, தனித்த தனியாகக் கடல் தரையை பிளந்து கொண்டு நகர்ந்து கொண்டு இருக்க வில்லை, மாறாக கண்டங்களுக்கு அடியில், பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு, வெப்பமான பாறைக் குழம்பு வெளிப் பட்டு, குளிர்ந்து இருகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அதன் மேல் உள்ள கண்டங்களும் கடல் தளங்களுடன் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூப் படுகிறது. 00000000000000000 000000000000000000000000000000000 ஆர்க்டிக் புதைபடிவங்கள் ஏன் ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது? கண்டத்தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வடபகுதியான அலாஸ்காவின் வடபகுதி, ஆசியாவின் வடபகுதியான சைபீரியாவின் வட பகுதி. அதேபோன்று கனடாவின் வட பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர்தீவு, ஆக்சல் ஹைபர்க் தீவு, ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்வால் பார்ட் தீவுகளானது, கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங்குளிர் நிலவும் அச்ச ரேகைப்பகுதியான அறுபத்தி ஆறரை டிகிரியான, ஆர்க்டிக் வளையப்பகுதிக்குள் நகர்ந்து வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஆர்க்டிக் பகுதியில் ஒரு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்கள் மற்றும் ஐந்து கோடி ஆண்டுன் தொண்மையான,விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதைபடிவங்கள் காணப்படுவதற்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம்கூற இயலவில்லை. Oooooooooooooo ஸ்வால்பார்ட் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட முதல் காட்டின் புதை படிவங்கள். ஐரோப்பாவின் கார்டிப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் பெரி தலைமையிலான ஆராய்ச்சிக்கு குழுவினர் ஸ்வால்பார்ட் தீவில் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த காட்டின் புதை படிவங்களைக் கண்டு பிடித்தனர். முதன் முதலில் கடலில் இருந்து தரைக்கு வந்து வாழத் தொடங்கிய பாசிகள் போன்ற தாவரங்களானது காலப் போக்கில் வேர்களையும் கீரைகளையும் இலைகளையும் வளர்ந்து தற்பொழுது நாம் காணும் தாவரங்கள் மற்றும் மரங்களாக மாறின. இந்த நிலையில் ஸ்வால்பார்ட் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட மரங்களானது லைகோபிசிட் என்று அழைக்கப் படும் ஆதி கால மர வகையை சேர்ந்தது.12 அடி வரை வளரக் கூடியதாக இருந்தது.அந்த மரங்களானது 20 சென்டி மீட்டர் இடைவேளிகளுடன் அடர்த்தியாக இருந்தது.இந்த மரங்களானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் தேவை இருந்ததால்.ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் காலத்தை எப்படி சமாளித்து என்ற கேள்வி எழுகிறது.இந்த நிலையில் டாக்டர் கிறிஸ்டோபர் பெரி,36 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வால்பார்ட் தீவானது அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பிறகு வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் விளக்கம் கூறி இருக்கிறார். ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும்,ஸ்வால் பார்ட் தீவில்,முப்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்களின் புதைபடிவங்களுக்கு, கண்டத்தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூறும் ஆராய்சியாள்களால், ஏன் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களின் புதைபடிவங்களுக்கும் , ஐந்து மேப் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்த காடுகளின் புதைபடிவங்களுக்கும். விலங்குகளின்புதைபடிவங்களுக்கும் விளக்கம் கூற இயலவில்லை? Ooooooooooooooooooo கடல் தரையின் மேலும் கண்டங்களின் மேலும் ஒன்றுக்கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத்தொடர்கள் மூலம் கடல் தரையும்கண்டங்களும் நிலையாத இருப்பது ஆதாரப்பூர்வமாககத் தெரியவந்துள்ளது. oooooooooooooooooo 0000000000000000000000000000000000000000000000000000 கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு-தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிதாகக் கடல் தளம் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில்,அட்லாண்டிக் கடல் தரையின் மேல், கரிபியன் தீவு எரிமலைகள், கிழக்கு திசையில் இருந்து,மேற்கு திசையை நோக்கி உருவாகாமல்,வடக்கு-தெற்கு, திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலம், அட்லாண்டிக் கடல் தரையானது, நிலையாக இருப்பது ஆதரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அட்லாண்டிக் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு-தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிதாகக் கடல் தளம் உருவாகி, கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில்,அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, குறைவாகவும், அதே நேரத்தில் அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, அதாவது கண்டங்களுக்கு அருகில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில், அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகிக் கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உருவாகி இருக்கும், புனித பீட்டர் பாறை, மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் இருந்து, சேகரிக்கப் பட்ட, பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, ராண்டல் ரைட் என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார். இந்த ததவல், அமெரிக்க புவியியல் கழக பத்திரிக்கையிலும் வெளியிடப் பட்டு இருக்கிறது. இவ்வாறு புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்படும், அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலேயே நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் இருப்பதன் மூலம், கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாகவே, அதாவது, பூமி தோன்றிய காலம் முதலே, அட்லாண்டிக் கடல் தரையானது, நிலையாக இருப்பது, ஆதரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று, அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிவாரப் பகுதிக்கு, அதாவது புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்படும் பகுதிக்கு "ஆல்வின்" என்ற ஆழ்கடல் கலன் மூலம், சென்று, ஆய்வு செய்த பொழுது, அந்தப் பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த "பேலியோடிக்டைன்" என்று அழைக்கப்படும், கடல் உயிரினத்தின் கூட்டின் சுவடுகள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இவ்வாறு புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்படும் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த "பேலியோடிக்டைன்" என்று அழைக்கப் படும், கடல் உயிரினத்தின் கூட்டின் சுவடுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமாகவும், அட்லாண்டிக் கடல் தரையானது, நிலையாக இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. மேலே குறிப்பிட்ட ஆதாரங்கள் மூலம், "கண்டத்.தட்டு நகர்ச்சி கருத்து" என்பது, ஒரு அடிப்படை ஆதாரமற்ற கற்பனை, என்பதும் தெளிவாகிறது. 0000000000000000000000000000000000000000000 பசிபிக் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன. கண்டங்களின் மேலும், கடல் தளத்தின் மேலும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலம்,கண்டங்களும் கடல் தளமும் நிலையாக இருப்பது, ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக,ஹவாய் எரிமலைத் தீவுகளானது, தென் கிழக்கு திசையில் இருந்து, வடமேற்கு திசையை நோக்கி, உருவாகி இருப்பதைப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது பசிபிக் கடல் தளமானது, தென் கிழக்கு திசையில் இருந்து, வடமேற்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்குள் இருந்து எரிமலைப் பிழம்புகளால் தொடர்ந்து துளைக்கப் பட்டதால்,ஹவாய் எரிமலைத் தீவுகளானது,தென் கிழக்கு திசையில் இருந்து, வடமேற்கு திசையை நோக்கி,உருவாகி இருப்பதாக விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் உண்மை என்றால் அதே பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் மற்ற எரிமலைத் தீவுகளும்,ஹவாய் தீவுகளுக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும். குறிப்பாகப் பசிபிக் கடல் தளத்தின் மேல்,ஹவாய் எரிமலைத் தீவுகளானது,ஒரு இடத்தில் அறுபது டிகிரி கோணத்தில் வளைந்து உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும்,கில்பெர்ட் மேடு மற்றும் தொக்கிலா கடல் மலைகள் மட்டுமே, ஹவாய் எரிமலைத் தொடரின்,அறுபது டிகிரி வளைவுக்கு இணையாக உருவாகி இருக்கின்றன. மற்ற எரிமலைத் தொடர்கள் அவ்வாறு உருவாகி இருக்க வில்லை. இந்த நிகழ்வானது,''ஏசிங்கரனைஸ் பெண்ட்''என்று அழைக்கப் படுகிறது. இதன் மூலம்,பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்து,ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரும்,கேமரோன் எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடல் தளமும்,ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பசிபிக் கடல் தளமானது வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,வட அமெரிக்கக் கண்டத்தை பொத்துக் கொண்டு,வட அமெரிக்க கண்டத்தின் மேல் ,குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில்,எரிமலைத் தொடர்களாக உருவாக்கி இருப்பதாக ஒரு விளக்கம் கூறப் பட்டது. இந்த விளக்கம் உண்மை என்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல்,வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. கண்டங்களின் மேலும் கடல் தளத்தின் மேலும் வெவ்வேறு திசைகளை நோக்கி எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு காரணம் என்ன? கண்டங்களின் மேலும் கடல் தளத்தின் மேலும் வெவ்வேறு திசைகளை நோக்கி எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு காரணம் என்ன? பூமி விரிவடையும் பொழுது பூமியின் மேற்பரப்பில் பிளவுகள் விரிசல்கள் ஏறடுகின்றன.அதன் வழியாக பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பானது கசித்தபடி மேற்பரப்பு வருவதால், புவிப் பரப்பின் மேலும், கடல் பரப்பின் மேலும், வரிசையாக எரிமலைத் தொடர்கள் உருவாகுகின்றன.உதாரணம் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடர்கள்,லைன் எரிமலைத் தொடர்கள், டைனோசர் புதிருக்கு எனது விளக்கம். பல ஆதாரங்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று,ஆர்க்டிக் பகுதியில், டைனோசர்கள் உள்பட வெப்ப மண்டலக் கால நிலையில் காணப் படக் கூடிய தாவரங்கள் மாறும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும், தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவம். நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள். குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது, குளிர்ந்து இறுகுவதால்,பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன. அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன. இவ்வாறு,கடல் தரையின் உருவாகக் கூடிய, தலையனைப் பாறைகள் மற்றும் ஒப்பியோலைட் என்று அழைக்கப் படும், பாம்புப் பாறைகள், கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும், காணப் படுவதுடன் மூலம், கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது. இதன் மூலம் மேட்சிங் கோஸ்ட் லைனுக்கு ஐடென்டிகிள் பாசில்ஸ்களுக்கும்,நிலப் பகுதிகள் உயர்ந்ததால் பிளவு பட்டதும்,கடல் மட்ட உயர்வும் காரணம் என்பது, ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுக்கு கண்டங்களில் காணப் படுவதற்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000000000000000000000000 எனது விளக்கம். பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. டைனோசர் காலத்தில், கடல்மட்டமும், நில மட்டமும், குறைவாக இருந்திருக்கிறது. அதாவது பூமியின் அளவானது சிறியதாக இருந்து இருக்கிறது. கடல் மட்டம் குறைவாக இருந்ததால், கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. சிறிய அளவில் பூமி இருந்ததால், துருவங்களில் அதிக அளவில் சூரிய வெளிச்சம் விழுந்து இருக்கிறது. எனவே , துருவப் பகுதிகளில்,வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததும்,பூமியின் அளவானது சிறிதாக இருந்ததால்,துருவப் பகுதிகளில் அதிக அளவில் சூரிய வெளிச்சம் விழுந்ததும் காரணம். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால், கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்பநிலை குறைந்ததால், துருவங்களில் குளிர்ச்சி அதிகரித்து, பனிப் படலங்கள் உருவாகியது. அத்துடன், பூமியின் அளவும் அதிகரித்ததால்,துருவப் பகுதிகளில் விழுந்த, சூரியனின் வெளிச்சமும் குறைந்ததால் துருவப் பகுதிகளில், குளிர்ச்சி அதிகரித்து, பனிப் படலங்கள் உருவாகியது. இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால், அதாவது, பூமி குளிர்ந்ததால், துருவங்களில் காடுகளும், விலங்கினங்களும் அழிந்தன. 00000000000000000000000000000000 00000000000000 0000000000000000000000000000000000000000000 கண்டங்கள் நகர வில்லை.உயர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் இருக்கும் கடல் தரையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போலவே,எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு காரணம் என்ன? உண்மையில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் பகுதியில் ,கடலுக்கு அடியில் கண்டங்களை சுற்றிலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்குள் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்,அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் நம்பப் படுகிறது.எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது, தவறான கருத்து என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் மூலம் தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் இருக்கும் கடல் தளத்தின் மேல்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடைவதை போன்றே, எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன. இந்த நிலையில் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்குள் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி ,ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கி, கடல் தளங்கள் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும், அதிக சுற்றளவுப் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி ,குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கி கடல் தளங்கள் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும், அதிக சுற்றளவுப் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி ,குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கி கடல் தளங்கள் நகர்ந்தாள்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு, கடல் தளப் பாறைகள் நொறுங்கி விடும். அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும், குறைந்த சுற்றளவுப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி , ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும்,அதிக சுற்று வட்டப் பகுதியை நோக்கி கடல் தளங்கள் நகர்ந்தாலும், ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்,கடல் தளத்தில் இடைவெளிகள் ஏற்பட்டு, அதன் வழியாகவும் பூமிக்குள் இருந்து, பாறைக் குழம்பு வெளி வந்து எரிமலைகள் உருவாகும்.ஆனால் அவ்வாறு இல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும், இருக்கும் கடல் தரையின் மேலே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போலவே, சற்று பெரிய அளவில் ,எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போலவே, பெரிய அளவில் ,எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆபிரிக்கக் கண்டத்தின் மேல் பரவலாக கடல் உயிரினங்களும் புதை படிவங்கள் உள்பட கடல்தரையில் உருவாகும் பாறை வகைகளும் காணப் படுகின்றன.இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமானது, கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது நிரூபணம் ஆகிறது. இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டமானது, கடல் தரையில் இருந்து, மேல் நோக்கி உயர்ந்த பொழுது,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் இருக்கும் கடல் தரையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போலவே, விரிசல்கள் ஏற்பட்டு இருக்கின்றன.அந்த விரிசல்கள் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பு வெளிப் பட்டதால், ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் இருக்கும் கடல் தரையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போன்றே எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதாலேயே,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து அரேபிய நிலப் பகுதியானது பிரிந்து இருக்கிறது.அதன் காரணமாகவே அரேபிய நிலப் பகுதியின் வடிவமும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒர பகுதிக்கு இணையாக இருக்கிறது. அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதாலேயே,ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் பிளவுப் பள்ளத் தாக்கு ஏற்பட்டு இருப்பதுடன், அந்தப் பகுதியில் எரிமலைத் தொடர்களும் உருவாகி இருக்கின்றன. 0000000000000000000 தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த, நில அதிர்ச்சி இயல் நிபுணர்களான டாக்டர் டேனியல் ப்ராஸ்ட் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் .பூமிக்குள் நில அதிர்ச்சி அலைகள் பரவும் தன்மையை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில்,பூமியின் மையாக கோளமானது, ஆண்டுக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் வளர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த வளர்ச்சியானது எல்லா இடத்திலும் ஒரே சீராக இல்லாமல் இந்தோனேசியாத் தீவுக்கு அடியில் சிறிது வேகமாகவும்,பிரேசிலுக்கு அடியில் குறைவான வேகத்திலும் வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ( 000000000000000 பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. ரூடிஸ்ட் சிப்பியின் புதை படிவங்களானது, நிலத்தின் மேல் உள்ள மலைகளின் மேலும், கடலடி மலைகளின் மேலும் காணப் படுவதற்கு காரணம் என்ன? ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் ஒரு வகை சிப்பி வகை உயிரினமானது டைனோசர் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினம் ஆகும். இதன் புதை படிவங்களானது, பூமத்திய ரேகைப் பகுதியில் அதாவது வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள மலைகளின் மேல் காணப் படுகிறது. இதே போன்று ரூடிஸ்டின் படிவங்களானது, பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் குறிப்பாக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி சம தள மலைகளின் மேலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ரூடிஸ்டின் புதை படிவங்களானது, நிலத்தின் மேல் உள்ள மலைகளின் மேலும், கடலடி மலைகளின் மேலும், காணப் படுவதற்கு காரணம் என்ன? ஆரம்பத்தில் நமது பூமியானது ஒரு பாறைக் குழம்பு கோளமாக இருந்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல குளிர்ந்ததால்,பூமியின் புற ஓடு உருவானது. பாறைக்கு குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையானது பொழுது அதில் இருந்து பிரிந்த நீரால்,புவித் பரப்பில் சிறிய சிறிய நீர் நிலைகள் உருவானது. இதே போன்று பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்களால் மெலிதான வளி மண்டலம் உருவானது. தொடர்ந்து பூமிக்குள் இருந்த பாறைக்கு குழம்பானது குளிர்ந்த பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்ததால் பூமிக்கு மேல் கடல் உருவானது.இந்த நிகழ்வில் உருவான வாயுக்களால் வளி மண்டலத்தின் அளவும் பெரிதானது. அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில், பாறைத்த தட்டுகள் உருவான பொழுது, பாறைக் குழம்பில் இருந்து, நீரும் வாயுக்களும் பிரிந்ததால்,பாறைக் குழம்பில் உருவான பாறைத் தட்டுகளின் அடர்த்தியானது குறைவாக இருந்தது. இவ்வாறு, அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான, அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகளானது, மேல் நோக்கி உயர்ந்ததால்,புவிப் பரப்பில் கண்டங்கள் உருவானது. அதே போன்று,பூமிக்கு அடியில் பாறைத் தட்டுகள் உருவான பொழுது, பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் தொடர்ந்து கடலில் சேர்ந்ததால்,கடல் மட்டமும் உயர்ந்தது. அதனால் கடலின் ஆழமும் அதிகமானது. இவ்வாறு,ஆழமற்ற கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து மலைகள் உருவானதற்கு ஆதாரமாக நிலத்தின் மேல் காணப் படும் மலைகளின் மேல், ரூடிஸ்டின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. அதே போன்று கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு ஆதாரமாகக் கடலடி மலைகளின் மேல், ரூடிஸ்டின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. 00000000000000000000000000000000000000 00000000000000000000000000000000000000 கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கு இடையில் இருந்த காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்கள், ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் எல்லாம் கடலால் பிரிக்கப் பட்டது. ஆனால், தற்பொழுது அண்டார்க்டிகா ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில், டைனோசர்களின் புதை படிவங்ககள் காணப் படுவதற்கு, கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறாக நம்பப் படுகிறது. 0000000000000000000 பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குக்கிறேன். ( கண்டங்களானது இலேசான கிரானைட் வகைப் பாறையால் ஆனது இதத்தாடினம் சராசரியாக நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர்.கடல் தள பாறையானது கடினமான,நீரை உறிஞ்சாத, கடப்பாக் கல்லால் ஆனது இதன் தடிமன் சராசரியாக ஏழு கிலோ மீட்டர். கண்டங்களின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள்.ஆனால் கடல் தள பாறைகளின் தொன்மையோ அதிக பட்சம், இருநூறு கோடி ஆண்டுகள் மட்டுமே.அதாவது கண்டங்களை விட கடல் தளமானது, மிகவும் இளமையானது. ஏனென்றால் கடல் தளமானது புதிதாக உருவாகி இருக்கிறது.) பூமியின் மையமானது, ஒரு அடர்த்தியான வெண்ணெய்யால் ஆன கோளம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.அதனைச் சுற்றிலும் கிரீம் பிஸ்கெட்டில் அல்லது கேக்கில் இருக்கும் கிரீம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மேற்புறமானது பொருக்கு போன்ற பிஸ்கெட்டால் ஆனது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது மையக் கோளம் விரிவடைவடைந்தால் என்ன ஆகும்.அதனை சுற்றி இருக்கும் கிரீம் போன்ற பகுதி விரிவடையும்.அதனால் அதனை சுற்றி இருக்கும் மேற்புற பொருக்கு போன்ற பிஸ்கெட் பகுதியானது, உடைந்து சிதறி பல பகுதிகளாக பிரிந்து,ஒன்றில் இருந்து ஒன்று விலகும்.இதனை கண்டங்களாக கற்பனை செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்த அடுக்காக இருக்கும் கிரீமை, கடல் தளமாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படித்தான் நமது பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக மேற்பகுதி விரிவடையும் பொழுது, அதில் ஏற்படும் பிளவுகள் மற்றும் இங்கு இடுக்குகள் வழியாக, பூமிக்குள் இருந்து வெளிப் படும் பாறைக் குழம்பால் நிரப்பப் படும் பொழுது, மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பால், பாறை அடுக்குகள் உடையும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுகிறது. மேலும் மேலும் பாறைக் குழம்பு உயரும் பொழுது, எரிமலையாக வெடித்து வெளியேறுகிறது. கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடிக்கும் பொழுது சுனாமி அலைகள் உருவாகுகிறது. பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதால் விரிவடைகிறது.குளிரும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணையும் வெளியேறுகிறது.வெளியேறிய நீரால் கடல் உருவானது. வெளியேறிய வாயுக்களால் வளி மண்டலம் உருவானது. 000000000000000000000000000000000000000000000000 000000000000000000000000000000000000000000000000 மத்திய தரைக் கடலுக்கு அடியில,ராட்சத உப்புப் படிவுகள் எப்படி உருவானது ? (அப்பெண்ணிஸ் மலை உப்புப்படிவு) பொதுவாக வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் நாடுகளில், கடல் நீரை நிலத்தில் பாத்தி கட்டி அதில் பாய்ச்சி, அந்த நீர் ஆவியாகும் பொழுது, கணுக் கால் அளவு உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து, பயன்பாட்டுக்கு அனுப்பப் படுகிறது. இந்த முறையில் கோடை காலத்திலேயே உப்பு சேகரிக்க முடியும். இந்த நிலையில் மத்திய தரைக் கடலை சுற்றி இருக்கும் பகுதிகளில், இருபது முப்பது அடி உயரத்திற்கு உருவாகி இருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இத்தாலி அப்பெண்ணிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்துக்கு அதிக உயரத்தில் ஜிப்சம் உப்பு படிவுகள் உருவாகி இருக்கிறது. தற்பொழுது இந்த ராட்சத உப்புப் படிவுகள் எப்படி உருவாகி இருக்கும் என்று அறிவதற்காக, 1970 ஆம் ஆண்டு, குலோமர் சேலஞ்சர் என்ற கப்பல் மூலம் ,மத்திய தரைக் கடலுக்கு அடியில், நீண்ட குழாய்கள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் துளையிட்டனர். அப்பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியில், ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கும், மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கும், உப்புப் படிவுகள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும், ஆராய்ச்சியாளர்கள் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. தற்பொழுது இந்த புதிருக்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.குறிப்பாக தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தரையுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எனவே அந்தக் கருத்தின் அடிப்படையில் ஒரு விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். குறிப்பாக மத்திய தரைக் கடலானது, ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் ஐரோப்பாக் கனத்துக்கும் இடையில் அமைந்து இருக்கிறது.மத்திய தரைக் கடலுக்கு மேற்கு பகுதியில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும், இந்த இரண்டு கடல் பகுதிக்கும் இடையில், கடலுக்கு அடியில் இருக்கும், இரண்டு கண்டங்களின், சுவர் போன்ற அமைப்பால், பிரிக்கப் பட்டு இருக்கின்றன. ஆனாலும் மேற்பகுதியில் மட்டும் ஜிப்ரால்டர் நீரிணைப்பு என்று அழைக்கப் படும் நீரிணைப்பால், இணைக்கப் பட்டு இருக்கிறது.இதனால் சில சமயம் கடல் நீரானது, அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கும், அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் பெருங் கடலுக்கும் நீர் பாய்கிறது. இந்த நிலையில், கண்டங்களின் நகர்ச்சியால், சில சமயம் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடியதாகவும் , அதனால் அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் இருந்து, மத்திய தரைக் கடலுக்கு நீர் வருவது தடை பட்டதாகவும், அப்பொழுது மத்திய தரைக் கடலில் இருந்து, நீர், பெருமளவில் ஆவியானதாகவும், அதனால் மத்திய தரைக் கடலுக்கு அடியில், ராட்சத உப்புப் படிவுகள் உருவானதாகவும், ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக மத்திய தரைக் கடலானது, ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வடக்கில், சகாரா பாலை வனத்தை ஒட்டி அமைந்து இருப்பதால், அதிக வெப்பத்தில், அதிக அளவில் நீர் ஆவியாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதே போன்று, கண்டங்களின் நகர்ச்சியால், மறுபடியும் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பொழுது, கடல் நீரானது மறுபடியும் அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் இருந்து, மத்திய தரைக் கடலுக்கு வந்ததாகவும்,நம்பப் படுகிறது. இதே போன்று கண்டங்களின் நகர்ச்சியால், பல முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்து மூடியதால், பல முறை, மத்திய தரைக் கடலுக்குள் அட்லாண்டிக் கடல் நீர் வந்து ஆவியானதால், ராட்சத உப்புப் படிவுகள் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது. இது போன்று மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு உப்புப் படிவுகள் உருவாக வேண்டும் என்றால், குறைந்த பட்சம் பதினேழு முறை, ஜிப்ரால்டர் நீரிணைப்பு தினத்தும் முடியும் இருக்க வேண்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக இந்த ராட்சத உப்புப் படிவுகளானது, அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கணிக்கப் பட்டு இருக்கிறது.அதே போன்று, ஏழு லட்சம் ஆண்டு காலத்தில் உருவானதாக கணிக்கப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில்,இன்னொரு முக்கியமான கண்டு பிடிப்பு, ஆராய்ச்சியாளர்களின் விளக்கத்தை கேள்விக் குறியாக்கி விட்டது. மத்திய தரைக் கடலுக்கு அடியில் இருப்பதை போன்றே, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியிலும், ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் கிழக்குப் பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியும் அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் மேற்குப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டத்தை ஒட்டி வால்விஸ் கடலடி மேட்டுப் பகுதியிலும் ,ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருக்கின்றன. (மத்திய தரைக் கடலுக்கு அடியில் இருப்பதை போன்றே, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியிலும், ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. -படத்தில் ரோஸ் கலரில் காட்டப் பட்டுள்ளது.) இந்த காலத்தில் கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதை போன்று நான்கு கிலோ மீட்டர் ஆழத்துடன் இருந்திருப்பதாக நம்பப் படுகிறது. எனவே தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் ராட்சத உப்புப் படிவுகள். எப்படி உருவாகின என்ற கேள்வி சரியான விளக்கம் கூறப் படாத நிலையில் இருக்கிறது. 000000 எனது விளக்கம். கடல் பூமிக்குள் இருந்து வந்த நீரால் உருவானது. தரையில் வாழ்ந்த டைனோசர்கள் மற்றும் மரங்கள் தாவரங்களின் புதை படிவங்கள், கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கடலில் நீர் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது, கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருக்கிறது. அதன் வழியாக விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன, அதன் பிறகு பூமிக்குள் இருந்து மேற் பகுதிக்கு வந்த நீரால்,கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது. இதே போன்று கண்டங்களின் மேல் பரவலாக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களும், கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கடல் மட்டமும், நில மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கடல் மட்டம் குறைவாக இருந்த பொழுது,நில மட்டம் உயர்ந்த பொழுது, நிலத்தின் மேல், கடல் நீர் மட்டம் குறைவாக இருந்த பொழுது, அங்கு இருந்த கடல் நீர் ஆவியானதால், உப்புப் படிவுகள் உருவானது. இந்த நிலையில் கடல் மட்டம் மறுபடியும் உயர்ந்ததால், நிலப் பகுதிக்கு வந்த நீர், மறுபடியும் நில மட்டம் உயர்ந்ததால், மறுபடியும், அங்கு இருந்த கடல் நீர் ஆவியானது.இதே போன்று பலமுறை, நில மட்டமும் கடல் மட்டமும் மாறி மாறி உயர்ந்ததால், பல முறை கடல் நீர் நிலப் பகுதிக்கு வந்து ஆவியானதால், ராட்சத உப்புப் படிவுகள் உருவானது. 0000000000000000000000000000000000000000000000 மடகாஸ்கர் தீவுக்கு சைவ முதலை எப்படி வந்தது? கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது. எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது. ஏற்கனவே சீமோ சூக்கஸ் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை. சாத்தான் தவளை புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது நம்பிக் கொண்டு இருக்கும் புவியியல் கருத்துக்களைப் புரட்டிப் போட்டு விட்டது மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு தவளையின் புதை படிவம். 1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் ,ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கிராவுஸ் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமயிலான குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில்,ஆறரைக் கோடி முதல் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் தவளையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனாலும் சில எலும்புகளே கிடைத்ததால் அந்த எலும்புகளைக் கொண்டு முழுதாக ஒரு தவளையை உருவாக்க இயலவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வில், அறுபதுக்கும் அதிகமான எலும்புகள் கிடைத்தது. ஆனாலும் 2008 ஆண்டுதான் ஓரளவு ஒரு முழுத் தவளையைக் உருவாக்கும் அளவுக்கு எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனாலும் தலைப் பகுதி முழுதாக இருந்தது. அந்த எலும்புகளைப் பொருத்திப் பார்த்ததில் அந்தத் தவளையானது பத்து அங்குலம் நீளத்துடன் நாலு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்தது. குறிப்பாக அதன் தலையில் கண்களுக்கு அருகில் எலும்புகள் புடைத்துக் கொண்டு கொம்பு போன்று நீண்டு இருந்தது.அதன் வாய்ப் பகுதியானது அளவுக்கு அதிகமாக அகன்று இருந்ததுடன், அதன் தாடையில் கூரிய பற்களும் இருந்தது. அதன் அடிவயிற்றுப் பகுதியில், ஆமைக்கு இருப்பதைப் போன்று கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.முதுகுப் பகுதியில் முள் போன்ற நீட்ச்சிகளுடன் பார்க்கப் பயங்கராமாக இருந்ததால் அந்தத் தவளை சாத்தான் தவளை என்ற பொருளைத் தரும் பிளிசிபூபோ அபிங்ணா என்று பெயர் சூட்டப் பட்டது. இது போன்ற கொம்பு உடைய தவளைகள் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப் படுகிறது. மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளையின் எலும்புகளை சி டி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர் சூசன் இவான் மற்றும் மார்க் ஜோன்ஸ் ஆகியோர்,மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளை தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் கொம்புகளுடன் காணப் படும் செரட்டோபைரிடே என்று அழைக்கப் படும் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தனர். தவளையினம் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் தோன்றி விட்டது. தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி, வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி, தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனாலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது, அண்டார்க்டிக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாகவும், ஆனால் பதினோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவும், இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே, கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும், எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவில் இருந்து, இந்தியாவும் பிரிந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது. ஆனால் டாக்டர் சூசன் இவான் மேற்கொண்ட மரபணு ஆய்வில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளையானது தென் அமெரிக்கக் கண்டத்தின் கொம்புத் தவளைக் குடும்பத்தில் இருந்து, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தீவாக இருந்த தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு சாத்தான் தவளைகள் எப்படி வந்திருக்க முடியும்? என்று வல்லுனர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாகக் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் ஒரே வகையான விலங்கினங்கள் காணப் படுவதற்கு, காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி விலங்கினங்கள் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி தற்செயலாக மற்ற கண்டங்களையும் தீவுகளையும் அடைந்திருக்கலாம் என்று நமபப் படுகிறது. ஆனால் தென் அமெரிக்காவும் மடகாஸ்கர் தீவும் அதிகத் தொலைவில், உலகின் எதிரெதிர் பகுதியில் அமைந்து இருப்பதாலும், தவளைகளின் தோல் நீர் புகக் கூடியதாக இருப்பதாலும், கடல் வழியாக சாத்தான் தவளைகள் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கும் என்ற விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது. இதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எழுதிரோ டாக்டைல்ஸ் என்று அழைக்கப் படும் தவளையின் இன வகைகள் ,தென் அமெரிக்கக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும், கரீபியன் தீவுகள் காணப் படுவதற்கு,அந்தத் தவளையின் மூதாதைகள் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, கடலில் மிதந்து சென்ற தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் தவளைகள் கடலில் தத்தளித்த படி கரீபியன் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று,அந்தத் தவளைகளின் மரபணுவை ஆய்வு செய்த, பென்சில் வேனியாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார். அத்துடன் கரீபியன் தீவுக்கு, தவளைகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் கடல் பயணம் செய்த பொழுது, அந்த மிதவைத் தாவரங்களில், தவளைகள் உண்பதற்கு பூச்சிகளும், குடிப்பதற்கு தூய குடி நீரும் இருந்திருக்கலாம் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளைகள் குறித்து டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ,தோற்றத்தில் மடகாஸ்கர் தீவுத் தவளைகள் தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகளைப் போன்று இருந்தாலும் அவைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சில சமயங்களின் வெவ்வேறு பகுதிகளில் விலங்கினங்கள் ஒரே உருவ அமைப்பில் பரிணாம வளர்ச்சி அடையும் என்று தெரிவித்து இருக்கிறார். அப்படியே அந்தத் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவகையாக இருந்தாலும் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் டாக்டர் சூசம் இவான் சாத்தான் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் என்பதில் சந்தேகம் இல்லை.என்றும் தென் அமெரிக்க் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் சூசன் இவான் நம்புகிறார். ஆனால் அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் ரிச்சர்ட் லேன் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுவதானது, கோண்டுவானாக் கண்டமானது, லேட் கிரேட்டேசியஸ் காலத்தில் பிரிந்திருப்பதையே ஆதரிக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார். 000000000000000000000 கடந்த 2014 ஆண்டு, கடலில் இருக்கும் நீரை விட ,மூன்று மடங்கு அதிகமான நீர், பூமிக்கு அடியில், குறிப்பாக அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில், ரிங்க்வூடைட் என்று அழைக்கப் படும் கனிம வடிவில் கலந்து இருப்பதாக, அமெரிக்காவின், நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, ஸ்டீவ் ஜாக்கப்சென் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்யும் கருவிகள் மூலமாக, பூமிக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், பூமிக்கு மேலே இருக்கும் கடல் நீரை விட மூன்று மடங்கு அதிக அளவில் நீர் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்ததாகவும், அவர் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு மேல் இருக்கும் கடலானது , பூமிக்கு அடியில் இருந்தே மேற்பகுதிக்கு வந்திருக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில் இருக்கும் நீரானது பூமியின் மேற்பரப்பில் இருந்தே பூமிக்கு அடியில் சென்று இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றனர். இதற்கு முன்பு கடலானது, விண்வெளியில் இருந்து, பூமியில் மேல் விழுந்த லட்சக் கணக்கான பனிப் பாறைகாளால் உருவானது என்று நம்பப் பட்டது. எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட பனிப் படலங்கள் எப்படி உருவாகின? சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில், நீர் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அந்த நீர் எப்படி உருவனதென்றால்...நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது, அதில் இருந்து பிரிந்த நீரானது,நிலவின் மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்ததால் பனியாக உருவாகி இருக்கிறது. இது போன்று பாறைக் குழம்பில் இருந்து உருவாகும் நீரானது பாறைக் குழம்பு நீர் என்றும், மாக்மாட்டிக் வாட்டர் என்றும், அழைக்கப் படுகிறது. நம் பூமியும், ஆரம்பத்தில் கொதிக்கும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு மெதுவாகக் குளிர்ந்ததால்,பூமியின் மேலோடு உருவானது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது படிப் படியாகக் குளிர்ந்ததால்,பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில், பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது. இந்த நிலையில்,பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக, பூமிக்கு மேலே திரண்டதால் கடல் உருவானது. இந்த நிகழ்வில் பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள் பூமியின் மேல் திரண்டதால் வளி மண்டலம் உருவானது. இன்றும் கூட, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து கொண்டு இருப்பதால், அதில் இருந்து உருவாகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால், கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது, அதன் கன அளவானது அதிகரிக்கிறது. அதனால் புவிப் பரப்பின் மேல், கண்டங்கள் புடைத்துக் கொண்டு உருவாகின. இவ்வாறு கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்தபொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, தற்பொழுது கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் புதை படிவங்களாகக் காணப் படுகிறது. இந்த நிலையில் ,எரிமலைகள் மூலம் வெளிப்படும் வாயுக்களால், பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் , நீர் உற்பத்தி ஆகுவதும் தொடரும்.எனவே பூமிக்கு அடியில் உற்பத்தி ஆகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப் பதும் தொடரும். எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும். இதனால் நிலப் பகுதிகள் யாவும், கடலில் மூழ்கும்,அத்துடன் தரையில் வாழும் தாவரங்கள்,மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும். உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும். அனால், உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம். பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும். பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. தற்பொழுது, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் ஓரிரு கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதிலும் குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அந்த அதிகப் படியான பனியானது கடலில் இருந்து வந்த நீரால் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டமானது, நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகு, பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு கடல் மட்டமானது, அதிக ஆழத்துடன் இருந்ததற்கு,அதிகப் படியான கடல் நீர் ஆவியானதே காரணம் என்றும், அதற்குப் பூமியின் சுற்றுப் பாதையில் ஏற்பட்ட மாற்றமே காரணம், என்றும் டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். அதாவது,முன் ஒரு காலத்தில்,பூமியானது, சூரியனை சற்று நெருக்கமாக வலம் வந்ததாகவும்,அப்பொழுது பூமியின் வெப்ப நிலையானது அதிகரித்ததாகவும்,அதனால் கடல் நீரானது அதிக அளவில் ஆவியானதாகவும்,அதனால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வானதாகவும், டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகு,பழைய படி,பூமியானது, சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வந்ததாகவும்,அதனால் நிலத்தின் மேல் இருந்த பனியானது உருகி நீராகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை உயர்ந்ததாகவும்,ட்ராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால்,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு. ஏனென்றால்,பூமியானது,சூரியனை நெருங்கிச் சென்று சிறிய சுற்றுப் பாதையில் வலம் வந்தால்,கடலில் இருக்கும் நீரானது, ஆவியாகத் தொடங்கும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் பனியும், உருகி நீராகிக் கடலில் கலக்கும்.எனவே கடல் மட்டமானது அப்படியேதான் இருக்கும். அதே போன்று, பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வரும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் நீரானது பனியாகப் படியும் பொழுது,கடல் நீரும் ஆவியாகுவது நின்று விடும். எனவே, கடல் மட்டதில் மாற்றம் ஏற்படாது. எனவே,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு. பனிப் பந்து பூமி. கண்டங்களின் மேல் அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உருவான சுண்ணாம்புப் படிவங்கள் காணப் படுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், அதே போன்று எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், பூமி முழுவதும் 1 முதல் 2 கிலோ மீட்டர் உயரத்துக்கு,பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்புகின்றனர். அதன் பிறகு பல எரிமலைகளில் இருந்து வெளிவந்த கரிய மில வாயு, வளி மண்டலத்தில் திரண்டதால், வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும் ஆதனால் பூமியின் மேல் இருந்த பனிப் படலங்களானது உருகி பனிப் பாறைகளாக நகர்ந்து சென்று, கடலில் கலந்ததாகவும், அதனால் கடல் நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததால், கடல் நீரானது, கண்டங்களின் மேல் வந்த பொழுது, அதில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள், கண்டங்களின் மேல் படிந்ததாகவும் நம்புகின்றனர். மேலும் வளி மண்டலத்தில் இருந்த அதிகப் படியான கரிய மில, வாயு கடலில் கலந்ததும் காரணம் என்று நம்பப் படுகிறது, ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பனிப் பந்து பூமி கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை. ஏனென்றால் பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பனியால் மூடப் பட்டு இருந்தால் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி உதவியுடன் வாழ்ந்து வந்த பலவகை நுண்ணுயிரிகளும் பாசிகளையும் முற்றிலும் அழிந்திருக்கும்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை . பல லட்சம் ஆண்டு காலமாக பூமியின் மேல் பனிப் படலங்கள் நகர்ந்து சென்று இருந்தால் , பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்ட படிவுகளும்,புதை படிவங்களும் அழிந்து இருக்கும். அதுவும் நடக்க வில்லை. எனவே பனிப் பந்து பூமி கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை. இந்த நிலையில்,ஜப்பானின் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் யோஷிதா ,ஜப்பானில் உள்ள மாச்சுஹிரோ நகரில் உள்ள சூடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவந்த நீரை சேகரித்து பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில்,அந்த நீரானது,பூமியின் ஆழமான பகுதியில் இருந்த பாறைக்கு குழம்பில் இருந்து வெளிவந்த நீர் (magmatic water) என்று தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நிலவில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அந்த நீரானது.நிலவின் ஆழத்தில் இருக்கும் பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீர் மேற்பகுதிக்கு வந்து பணிக்கு கட்டியாக மாறி இருப்பதாக நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியின் மேற்பகுதி குளிர்ந்ததால்,புவித் தரை உருவானது.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் மற்றும் வாயுக்களால், ஆழமற்ற கடலும் ,மெலிதான வளி மண்டலமும் உருவானது. அதன் பிறகு, புவிப் பரப்புக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்த பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் கலந்ததால் ,கடல் ஆழமானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள் புவியின் மேற்பகுதிக்கு வந்ததால்,வளி மண்டலத்தின் அடர்த்தியும் அதிகமானது. இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக்கு குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத்த தட்டுகளின் அடர்த்தியானது குறைவாக இருந்தது. அடர்த்தி அதிகமான கடல் நீரில் உருவாகும் பனிப் பாறைகளும் அடர்த்தியானது குறைவாக இருப்பதால்,அந்தப் பாறைகளானது கடலின் மேற்பரப்பின் மேல் உயர்கிறது. அதே போன்று பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத்த தட்டுகள் மேல் நோக்கி உயந்ததால்,கண்டங்கள் உருவாகின. கடலின் ஆழமும் அதிகரித்தது. எனவே ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும் ,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்துமே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. சமீபத்தில் பூமியின் மையாக கோளம் விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் ஆனால் அதன் காரணம் தெரியவில்லை என்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேனியல் புரொஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். மையக் கோளம் விரிவடைவதால் கீழடுக்கான கடல் தள அடுக்கு விரிவடைவதால் மேலெடுக்கான புவியோடது பிளவு பட்டு பிரிந்து நகர்ந்தாள் கண்டங்கள் உருவாகின. மையக் கோளம் விரிவடைவதால் கடல் தள அடுக்கு விரிவடைவதால் பூமி பெரிதாகிக் கொண்டு இருக்கிறது. மற்றபடி கண்டங்களானது கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் பாறைத்த தட்டுகளுக்கு டையில் உரசல் ஏற்படுவதாகவும் தன்னால் நிலா அதிர்ச்சிகள் சுனாமிகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் ஆகும். 00000000000000000000000000000000000000000000 பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட, குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள், நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம். குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன், கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து, இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த, ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து, பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள், இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால், அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த, பெரிய நீர் யானை, தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால், குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும், நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும், குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள், ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஐந்து தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம், நில மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். 00000000000000000000000000000000000000000000 பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆர்க்டிக் அஜோலா புதிர் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் கடலுக்கு அடியில் கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்த பொழுது அதில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான அஜோலா என்ற தாவரத்தின் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பு பல நாட்டு ஆராய்ச்சியாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.காரணம்,அஜோலா என்பது வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் உள்ள நன்னீர் நிலைகளான குளம் குட்டை மற்றும் ஏரிகளில் மேற்பரப்பில் வளரக் கூடிய சிறிய மிதவைத் தாவரம் ஆகும். இதன் இலைகள் அரிசியின் அளவே இருக்கும் அதில் இருந்து தூவிகள் போன்ற வேர்ப் பகுதியின் உதவியால் நீர்ப் பரப்பின் மேல் மிதந்தபடி வாழக் கூடிய ஒரு மிதவைத் தாவரம் ஆகும்.இதன் இலைகளில் உள்ள குழிகளில் அனபீனா என்று அழைக்கப் படும் நீலப் பசும் பாசி வகையை சேர்ந்த சயனோ பாக்டீரியா வாழ்கிறது.இந்த பாக்டீரியா காற்றில் இருக்கும் நைட்ரஜனை சிதைத்து தாவரங்கள் பயன் படுத்தக் கூடிய நைட்ரஜனாக மாற்றுகிறது அதனை அஜோலா பயன் படுத்திக் கொள்கிறது அதே நேரத்தில் அஜோலா பாக்டீரியாவுக்கு வாழ இடமும் பாது காப்பும் அளிக்கிறது. அஜோலாவின் இந்த பண்பால் அஜோலா சிறந்த தழை உரமாக சீனாவில் அரிசி வயல்களில் பதினோராம் நூற்றாண்டு முதல் பயன் படுத்தப் பட்டு வருகிறது கால் நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தப் படுகிறது.முக்கியமாக அஜோலா ஓரிரு நாட்களிலேயே இரு மடங்கு பெருக்க கூடியது.ஆனால் அஜோலாவுக்கு உப்பு நீரும் ஒத்துக் கொள்ளாது பனியும் ஒத்துக் கொள்ளாது. எனவே அஜோலா எப்படி ஆர்க்டிக் கடலின் மத்திய பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஏற்கனவே ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆக்ஸல் ஹை பெர்க் தீவில் ஒம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்த பொழுதும் இதே கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்பம் இருந்திருக்கிறது என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் பாய்ந்து இருக்கிறது என்றும் அதனால் அந்த நீரோட்டத்துடன் ஆசிய வகை நன்னீர் ஆமைகள் ஆசியப் பகுதியில் இருந்து ஆர்க்டிக் கடல் வழியாக வட அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருந்தார். குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு மேலே பல இடங்களில் நன்னீர் பரப்பு இருந்திருக்கலாம் என்றும் அல்லது ஆர்க்டிக் கடலில் பல எரிமலைத் தீவுகள் வரிசையாக இருந்து அதன் வழியாகவும் ஆமைகள் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் டாக்டர் ஜான் டார்டுனோ விளக்கம் தெரிவித்து இருந்தார். அதே போன்று தற்பொழுது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் கடலானது கண்டத் தட்டுகளின் நகர்ச்சியால் மற்ற கடல் பகுதியில் இருந்து பிரிக்கப் பட்டு மத்திய தரைக் கடலைப் போன்று முற்றிலும் நிலத்தால் சூழப் பட்டு இருக்கலாம் என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலில் மேற்பரப்பில் உப்புத் தன்மை குறைந்த நீர்ப் பரப்பும் அதற்கு அடுத்து உப்புத் தன்மை அதிகமான நீரால் ஆன அடுக்குகளும் உருவாகி இருக்கலாம் என்றும் இந்த நிலையில் ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் வேகமாக பாய்ந்து இருக்கலாம் என்றும் அதன் வழியாக அஜோலா ஆர்க்டிக் கடலின் மத்தியப் பகுதிக்கு வந்த பிறகு இறந்து மூழ்கி லாமனோவ் கடலடி மேடு மேல் படிவுகளாக உருவாகி இருக்கிறது என்று தற்பொழுது அராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். உதாரணமாக அட்லாண்டிக் கடலுக்குள் பாயும் அமேசான் ஆறானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நன்னீர் பரப்பைக் கொண்டுள்ளது என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.குறிப்பாக மற்ற தாவரங்களை விட அஜோலா பத்து மடங்கு அதிக அளவு கரிய மில வாயுக்களை உரிஞ்ஜக் கூடியது. குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட அஜோலா படிவுகளானது இருபது மீட்டருக்கும் அதிக தடிமனுடன் இருந்தது.அதன் அடிப்படையில் அந்தப் படிவுகள் உருவாக 800,000 ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது. இவ்வாறு நீண்ட காலம் ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்த அஜோலா தாவரமானது வளி மண்டலத்தில் இருந்து பெரும் பகுதி கரிய மில வாயுவை கிரகித்த பிறகு இறந்து ஆர்க்டிக் கடலுக்கு அடியில் வீழ்ந்து படிவுகளாக மாறியதால் வளி மண்டலத்தில் இருந்த கரிய மில வாயுவின் அளவு குறைந்ததால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் பனிப் படலங்கள் உருவாகியதால் டைனோசர்கள் காலம் முதல் வெப்பக் காடாக இருந்த வெப்ப பூமி குளிர்ந்து பனிப் படலங்கள் சூழ்ந்த குளிர் பூமியாக மாறி விட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனாலும் இந்த விளக்கத்தை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. அஜோலா புதிருக்கு எனது விளக்கம். இந்திய பெருங் கடலின் கிழக்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி 5000 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது,இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு இணையாக இருப்பதால், இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படுகிறது.இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 4000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.இந்த நிலையில் இந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்தப் படிவுகளில் ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் பாகங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.குறிப்பாக 15 வகையான பூக்கும் தாவரங்கள்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் அரிகேசியே,குளோரான்தேசியே, ,லாரேசியே,குன்னேரா,கில்பீயா,ஆகிய தாவரக் குடும்பங்களை சேர்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது சில காலம் கடல் மட்டத்துக்கு மேலே எரிமலைத் தீவுகளாக இருந்து இருக்கின்றன என்று ரெய்மண்ட் கார்பென்டர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஆர்க்டிக் கடலுக்கு அடியில் லாமனோவ் கடலடி மேட்டுத் தொடருக்கு அருகில் இருக்கும் மெண்டலீவ் கடலடி மேட்டுத் தொடரில் துளையிட்டு சேகரித்த பாறைப் படிவுகளை ஆய்வு செய்த ரஷ்ய அகடெமியை சேர்ந்த செர்ஜி ஸ்கோலோட்னோவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் அதில் ஆழமற்ற வெப்பமான கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவுகள் உள்பட தாவரங்களின் மகரந்தத் துகள்கள் மற்றும் பாகங்களின் புதை படிவங்களை கண்டதன் அடிப்படையில், அந்த புதை படிவங்களானது, ஆழம் குறைந்த கடல் பகுதியில் படிந்தது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலுக்கு அடியில் தற்பொழுது மூழ்கிக் கிடைக்கும் பல கடலரி எரிமலைத் தொடர்கள் கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக இருந்த பொழுது, அதில் நன்னீர் நிலைகளும் அதில் தாவரங்களும் வளர்ந்து இருக்கின்றன.கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்து இருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால், வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து பனிப் படலங்கள் உருவாகிப் பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. Ooooooooooooooooooooooo Oooooooooooooooooooooooooooo பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.புதிய ஆதாரம். ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் கடற் கரையோரத்தில் காணப் படும் பனிரெண்டு ராட்சத சுண்ணாம்பு படிவத் தூண்கள் எப்படி உருவாகின? ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் கடற் கரையோரத்தில் 150 அடி உயரமுள்ள பனிரெண்டு ராட்சத சுண்ணாம்பு படிவத் தூண்கள் காணப் படுகின்றன. இந்த அமைப்பானது இயேசுவின் பனிரெண்டு சீடர்களைக் குறிக்கும் வண்ணம், பனிரெண்டு அப்பொஸ்டெல்ஸ் என்று அழைக்கப் படுகிறது.சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.இந்த சுண்ணாம்புத் திட்டுகளானது, ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவானது . குறிப்பாக ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதன் மூலம், பூமி உயர்ந்ததால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் பிளவுகள் ஏற்பட்டு பிரிந்ததால் இந்த அமைப்புகள் உருவாகி இருக்கிறது, என்பதே எனது விளக்கம். கடல் நீர் அரிப்பால் சில தூண்களின் மத்திய அடிப்பகுதி மட்டும் அரிக்கப் பட்டதால் பாலம் போன்றும் உருவாகி இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 2005 மற்றும் 2009 ஆண்டுகளில், இந்த தூண் பால அமைப்பு நொறுக்கிக் கடலில் விழுந்தது. இந்த நிலையில்,கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் பேராசிரியர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் சோனார் அலைகள் மூலம் கடலுக்கு அடியில் ஆய்வு செய்த பொழுது, கடற் கரையை ஒட்டிய பகுதியில், கடலுக்கு அடியில் நூற்றி ஐம்பது அடி ஆழத்தில், மேலும் ஐந்து சுண்ணாம்புப் படிவத் தூண்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இப்படி அடி உயரமுள்ள அந்த சுண்ணாம்புப் படிவத் தூண்களானது, 60,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று மதிப்பிடப் பட்டுள்ளது.20,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனி பெரும் பகுதி இருந்ததாகவும் பின்னர் அந்தப் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடல் கலந்ததாகவும் அதனால் கடல் நீர் மட்டம் 400 அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது அதன் அடிப்படையில் இந்த மூழ்கிய சுண்ணாம்பு படிவத் தூண்கள் விளக்கப் படுகிறது. ஆனால் எனது ஆய்வில் இந்த சுண்ணாம்பு படிவத் தூண்களானது பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையும் பூமிக்குள் சுரக்கும் நீரால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. 0000000000000000000000 ஜிலாந்தியா. கண்டங்களானது சராசரியாக முப்பது முதல் நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வரை தடிமன் உடையது. அத்துடன் கண்டங்களானது. அடர்த்தி குறைந்த இலேசான கிரானைட் பாறையால் ஆனது.ஆனால் கடல் தளப் பாறையானது, நீரை உறிஞ்சாத அடர்த்தி அதிகமான கடினமான கடப்பாக் கல்லால் ஆனது.கடல் தளப் பாறைகளின் தடிமனானது, சராசரியாக ஏழு கிலோ மீட்டர் ஆகும். இந்த நிலையில் நியூ சிலாந்து தீவை சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்ககச் சில எண்ணெய் நிறுவனங்கள், கடலுக்கு அடியில் துளையிட்ட இடங்களில், கண்டங்களில் காணப் படும், கிரானைட் பாறைகள் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில், நியூ சிலாந்து தீவை சுற்றி, ஐம்பது லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்தியாவை விடப் பெரிய நிலப் பரப்பு, மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது தெரிய வந்தது. அந்த நிலப் பகுதியானது, ஜிலாந்தியா என்று அழைக்கப் படுகிறது.சில ஆராய்ச்சியாளர்கள் ஜிலாந்தியாவை கண்டம் என்றும் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஜிலாந்தியாவை கண்டத்தின் பகுதி என்றும் மற்றும் சிலர் ஜிலாந்தியாவை குறுங் கண்டம் என்றும் வகைப் படுத்துகின்றனர். இந்த நிலையில் ஜிலாந்தியாவின் கடந்த காலம் குறித்து அறிந்து கொள்வதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ரைஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியரான ஜெரால்டு டிக்கென்ஸ் தலைமையில் 12 நாட்டைச் சேர்ந்த 32 ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சிக் கப்பலில் சென்று, ஜிலாந்தியாவில் குறிப்பிட்ட ஆறு இடங்களைத் தேர்வு செய்து, துளையிட்டு பாறை மாதிரிகளையும் படிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது கடந்த ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில், ஜிலாந்தியாவின் நில மட்டத்தில் பெரிய அளவில் மாறுபாடுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக ஜிலாந்தியாவின் வட பகுதியில், ஆழம் குறைந்த வெப்பமான கடல் பகுதியில் வாழ்ந்த கடல் நுண்ணுயிரிகளின் ஓடுகளும் ,தரை மேல் வளர்ந்த தாவரங்களின் மகரந்தத் துகள்களும், பாகங்களும் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஜிலாந்தியாவின் வடபகுதியானது, ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் உயர்ந்ததாகவும்,அதே நேரத்தில் ஜிலாந்தியாவின் மற்ற பகுதிகள், அதே அளவுக்கு கீழே இறங்கியதாகவும், அதன் பிறகு மொத்த ஜிலாந்தியாவும், மேலும் ஒரு கிலோ மீட்டர் ஆழத்துக்கு மூழ்கியதாகவும், அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ஜிலாந்தியாவின் வட பகுதி, கடல் மட்ட்டத்துக்கு அருகில் இருந்த பொழுது, சில பகுதிகள், கடல் மட்டத்துக்கு மேல் தீவுகளாக இருந்ததாகவும், அதன் வழியாக விலங்கினங்களின் போக்குவரத்து நிகழ்ந்ததாகவும் ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு ஜிலாந்தியாவின் நில மட்டத்தில் பெரும் அளவில் மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு, அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். அதாவது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் உரசிய படி நகர்ந்து சென்றதால், கடல் தளத்தின் மேல் இருந்த ஜிலாந்தியாவின் நில மட்டத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதன் அப்படிப்படையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில், அந்தக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே ஜிலாந்தியாவின் நிலமட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது, ஜிலாந்தியாவின் வட பகுதியானது, கடல் மட்டம் உயர உய,ர கடல் மட்டத்துடன், நில மட்டமும் உயர்ந்து இருக்கிறது.அதன் பிறகு ஜிலாந்தியாவின் வட பகுதி உயராமல் நின்று விட்ட நிலையில், கடல் மட்டம் மட்டும் உயர்ந்து இருக்கிறது. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அண்டார்க்டிகா ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நிலப் பகுதிகள் ஒன்றாக இருந்து இருக்கின்றன. அதன் பிறகு பூமியானது விரிவடைந்ததால் இந்த நிலப் பகுதிகளுக்கு இடையில் புதிதாக கடல் தளம் உருவாகி விரிவடைந்ததால், நிலப் பகுதிகள் பிரிந்து இருக்கின்றன. அதாவது பூமி விரிவடைந்ததால், நிலப் பகுதிகள் பிரிந்து இருக்கின்றன.இதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் ஒன்றாக இருந்த நிலையில், பூமி விரிவடைந்ததால் இன்று நாம் காணும் நிலப் பகுதிகளாக பிரிந்து இருக்கின்றன. பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதை எடுத்துக் காட்டும் கிராண்ட் கன்யன் அடுக்கு பாறைத்த தட்டு அமைப்பு. தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்து இருக்கும் கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்குப் பகுதியில், அடுக்குப் பாறைத் தட்டுகளானது, ஒன்றரை கிலோ மீட்டர் ஆழம் உடையதாக இருக்கிறது.இவ்வளவு ஆழமான அடுக்குப் பாறை அமைப்பானது, கொலராடோ நதியால், அரிக்கப் பட்டதால் உருவானது, என்று தவறாக நம்பப் படுகிறது. கிராண்ட் கன்யான் அடுக்குப் பாறைத்த தட்டு அமைப்பானது, ஆறால் அரிக்கப் பட்டு உருவாகி இருந்தால், அதன் பிளவுகளானது, ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும் . ஆனால் அவ்வாறு இல்லாமல், கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்குப் பகுதியில், உள்ள பிளவுகளானது, வெல்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கிறது. முக்கியமாக கிராண்ட் கன்யன் அடுக்குப் பாறைத்த தட்டு பகுதியில், ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த, ட்ரைலோ பைட் போன்ற கடல் உயிரினங்களின் புதை படிவங்களும், கடல் பஞ்சு,அமொனைடிஸ் போன்ற கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் காணப் படுகின்றன. இதே போன்று கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்குப் பகுதியி்ன், மேல் அடுக்கில் ஆழமற்ற கடல் பகுதியில், உருவான சுண்ணாம்புப் படிவுகளும் காணப் படுகின்றன. இதன் மூலம். கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்ததால், புவிப் பரப்பில் பிளவுகள் ஏற்பட்டு, கிராண்ட் கன்யன் அடுக்குப் பாறைத் தட்டு அமைப்பு, உருவாகி இருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. முக்கியமாகக் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கை விட. பல மடங்கு பெரிய அளவில். செவ்வாய் கிரகத்தில் பிளவுப் ஒரு பள்ளத் தாக்கு அமைப்பு உருவாகி இருக்கிறது.அதன் அளவானது, வட அமெரிக்காவை விட பெரிதாக இருக்கிறது. குறிப்பாக வேலெஸ் மாரினேர்ஸ் என்று அழைக்கப் படும், அந்தப் பிளவுப் பள்ளத் தாக்கனது, நாலாயிரம் கிலோ மீட்டர் நீளமும், இருநூறு கிலோ மீட்டர் அகலமும், ஏழு கிலோ மீட்டர் ஆழத்துடனும் இருக்கிறது, இப்படிப் பட்ட பிரமாண்டமான பிளவுப் பள்ளத் தாக்கானது, நிச்சயம் ஆறால் உருவாகி இருக்க முடியாது.முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் நீரே இல்லை. இந்த நிலையில் இதே போன்ற பிளவுப் பள்ளத் தாக்கானது, சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் இருக்கும், புளுட்டோவில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.சூரியனிடம் இருந்து அதிக தொலைவில் இருக்கும் புளூட்டோவில், நீர் இருப்பதற்கே சாத்தியம் இல்லை. ஏனென்றால் புளூட்டோவில் வெப்ப நிலையானது, எப்பொழுதுமே மைனஸ் டிகிரியில்தான் இருக்கிறது.எனவே அந்த புளூட்டோவின் ஆறு அல்லது நதிகள் இருப்பதற்கே சாத்தியம் இல்லை. எனவே பூமி உள்பட செவ்வாய், புளூட்டோ போன்ற கிரகங்களில், இருக்கும் பிரமாண்டமான பிளவுப் பள்ளத் தாக்குகாளாது, அந்த கிரகங்கள் விரிவடைந்து கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. 0000000000000000000000000000000000000000 0000000000000000000000000000000000000000000000000

Comments

Popular posts from this blog

fossils study

Abcd report

tsunami science