ஆர்க்டிக் மர்மம்--துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி வளர்ந்தன?
துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி வளர்ந்தன?
தாவரவியல் வல்லுனர்கள் தலைகீழாக நின்று யோசிக்கிறார்கள்.
விலங்கியல் வல்லுனர்கள் விட்டத்தைப் பார்த்து யோசிக்கிறார்கள்.
புவியியல் வல்லுனர்களோ... புஜங்காசனம் செய்தபடி யோசிக்கிறார்கள்.
ஆனாலும் , தற்பொழுது பனிப் படலங்களால் மூடப்பட்டு இருக்கும். துருவப் பகுதிகளில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி வளர்ந்தன என்ற புதிருக்கு விடை கண்டு பிடித்து உலக அளவில் பெயர் பெற வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரவும் பக்கம் கணிப் பொறி உதவியுடன் தீவிர ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விடை தெரிந்த பாடில்லை.
இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள பிரச்சினையின் பற்றி ஆதியோடந்தம் வரை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு சின்ன பிளாஷ் பேக்...
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று அடி நீளமுள்ள, உடும்பு போன்ற,மெசோ சாரஸ் என்று பெயரிடப் பட்ட, துடுப்புக் கால்களுடன், கடற் கரை ஓரத்தில் வாழ்ந்து மடிந்த. ஊர்வன வகை விலங்கின், எலும்புப் புதைபடிவங்களானது அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நிச்சயம் இந்த சிறிய பிராணியால் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து, இந்த இண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,டாக்டர் ஆல்பிரட் வெக்னர், என்ற கால நிலை ஆராய்ச்சியாளர், ஒரு விளக்கத்தைக் கூறினர்.
அதே போன்று, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் பகுதிகளில் காணப் படக் கூடிய, கள்ளி மற்றும் பெரணி வகைத் தாவரங்களின் புதை படிவங்களானது, வட துருவப் பகுதியில், குறிப்பாக கடுங் குளிர் நிலவும், அறுபத்தி ஆறரை அட்ச ரேகைப் பகுதியில், அமைந்து இருக்கும் ஸ்வால் பார்ட் என்ற தீவில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த தீவானாது, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும், அதன் பிறகு, வடதுருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது என்றும், வெக்னர் விளக்கம் கூறினார்.
முக்கியமாக வெக்னர் ஒரு கால நிலை ஆராய்ச்சியாளர். எனவே வெக்னர், ஒத்த கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரைபடத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார்.அதன் அடிப்படையில் அவர்,ஒரு புதிய உலக வரை படத்தைத் தயாரித்தார்.
அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும், அந்த கண்டத்தைச் சுற்றிலும், பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு, பதின்மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பாஞ்சியா கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததாகவும், அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி, வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும், அதே போன்று, கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி, தென்பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும், இதனால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,பூமத்திய ரேகைப் பகுதியில், டெதிஸ் என்ற புதிய கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, லாரேசியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால், வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையிலும், யுரேசியாக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையிலும் நகர்ந்ததால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில். வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இந்தக் கருத்தின்படி, வட அமெரிக்காவின் வடபகுதி, ஐரோப்பாவின் வட பகுதி, மாற்றும் ஆசியாவின் வட பகுதிகள் யாவும், கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, கடுங் குளிர் நிலவும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.
இதே போன்று தென்பகுதியை நோக்கி நகர்ந்த கோண்டுவானா கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக்கண்டமானது, பிரிந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் விலங்குகளின் போக்கு வரத்து நடை பெற்றதாகவும், அந்த நிகழ்வானது "தி கிரேட் அமெரிக்கன் இன்டர் சேஞ்"என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டமானது, கோண்டுவானாவில் இருந்து பிரிந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவின் தென் பகுதியுடன் மோதியதில், டெதிஸ் கடலுக்கு அடியில் இருந்த நிலம் புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும், அந்த மலைப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம்,என்று வெக்னர் கூறினார்.
இவ்வாறு தென் அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் பிரிந்ததில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில், தெற்கு அட்லாண்டிக் கடல் உருவானதாகவும், வெக்னர் கூறினார்.
இந்த நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து, வடகிழக்கு திசையில் நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் குறிப்பாக இந்திய நிலப் பகுதியானது, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியப் பெருங் கடல் பகுதியில் தீவுக் கண்டமாக இருந்ததாகவும், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதில் டெதிஸ் கடல் முடப்பட்டதாகவும், இமயமலைத் தொடர் புடைத்துக் கொண்டு உயர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இமய மலைப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுவதற்கும், நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்று வெக்னர் கூறினார். '
குறிப்பாக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்களானது தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து விட்டதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின்படி,அண்டார்க்டிக் கண்டமானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,தென் துருவப் பகுதிக்கு நகர்ந்து வந்து விட்டது.
ஆனால் வெக்னர் கூறியபடி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும், கடல் தரையில் காணப் படவில்லை.
இந்த நிலையில்,கண்டங்களைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் எரிமலைகள் தொடர்ச்சியாக இருப்பதுடன், அப்பகுதியில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும், நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில்,வெக்னரின் விளக்கம் சிறிது மாற்றி அமைக்கப் பட்டது.
அதாவது கண்டங்களை சுற்றி கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்த கடல் தளங்களுடன், கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கருத்தானது" கண்டத் தட்டு நகர்ச்சி" என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும்,புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளைநோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி, விலகிப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவு அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் புதிதாக உருவாகி நகரும் கடல் தளங்களானது, மறுபடியும் கண்டங்களுக்கு அடியிலும், தீவுகளுக்கு அடியிலும்,உரசியபடி நகர்ந்து சென்று, பூமிக்குள் சென்ற பிறகு, வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொண்டு எரிமலைகளாகஉருவாகுகின்றன. அதனால் பூமியின் அளவானது மாறாமல் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு கடல் தளங்களானது, தனித் தனியாக நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும். ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று, கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது, பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால், கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அதனால் அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் படுவதால், சுனாமி அலைகள் உருவாகுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இந்தியப் பெருங் கடல் பகுதியில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இவ்வாறு கடல் தளம் பூமிக்குள் செல்கிறது என்றும், அதே போன்று பசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் கடல் தளங்கள் உரசிப் படி நகர்ந்து, பூமிக்குள் செல்கிறது என்றும், அதனால்தான் அந்தப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறனர்.
இந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்டமானது,. கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தென் துருவப்பகுதிக்கு நகர்ந்து வந்து விட்டது. ஆனாலும், அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்த பிறகே.அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும், வேகமான கடல் நீரோட்டம் உருவாகி ஓடியதால், அண்டார்க்டிக் கண்டமானது, மற்ற வெப்பக் கடல் நீரோட்டங்களில் இருந்து பிரிக்கப் பட்டதால், அண்டார்க்டிக் கண்டத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு,அண்டார்க்டிக் கண்டத்தில் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான், பனிப்படலங்கள் உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நன்னீரில் வாழக் கூடிய தவளையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும், உயிர் வாழ, வெளிச்சமும் வெப்பமும் அவசியம்.
அண்டார்க்டிக் கண்டமானது, தென் துருவப் பகுதியில் இருப்பதால், ஐந்து மாதங்கள் நீடிக்கும் இரவுக் காலத்தில், மைனஸ் எண்பது டிகிரி வரை செல்லும். இப்படிப் பட்ட குளிர் காலத்தில் தவளைகள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு எரிமலைகள் அதிகமாக சீறியதால் வளி மண்டலத்தில், கரியமில வாயு அதிகரித்ததால் குளோபல் வார்மிங் ஏற்பட்டு வெப்பம் கிடைத்து இருக்கும் என்றாலும்,சூரிய வெளிச்சம் இல்லாமல் தவளைகள் வாழ்ந்து இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனாலும் அண்டார்க்டிக் கண்டத்தில் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை காடுகள் இருந்து இருப்பது புதைபடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே சூரிய ஒளியின்றி தாவரங்கள் எப்படி காடுகளாக வளர்ந்தன என்ற கேள்வி விடையளிக்கப்படாத நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் அண்டார்க்டிக்கண்டத்தில் ஏழு கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. டைனோசர்களானது யானக் கூட்டத்தை விடப் பல மடங்கு அதிக அளவிலான தாவரங்களை உணவாக உட்கொள்ளக் கூடியது. எனவே அண்டார்க்டிக் கண்டத்தில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு காடுகள் எப்படி வளர்ந்தன என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதைபடிவங்களும், அடர்ந்த பசுமைக்காடுகள் வளர்ந்ததற்கு ஆதாரமாக, தாவரங்களின் வேர்கள், மகரந்தத் துகள்கள். தாவரங்களின் பாகங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதன் மூலம் கடந்த ஐந்து கோடி ஆண்டுகாலமாக ,அண்டார்க்டிக் கண்டத்தில் தாவரங்களும். விலங்கினங்களும், காடுகளும் டைனோசர்களும் வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே அந்த தாவரங்களுக்கும் விளங்களுக்கும், எப்படி வெப்பமும் வெளிச்சமும் கிடைத்தன என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
"ஐந்து கோடி ஆண்டு காலமாக'' எரிமலைகள் அதிக அளவில் சீறி, குளோபல் வார்மிங் ஏற்பட்டு வெப்பம் உருவாகி இருக்க சாத்தியம் இல்லை. எனவேதான் இந்தப் புதிருக்கு விடைகாண ஆராய்சியாளர்கள் கணிப் பொறியில் செயற்கையாக தூண்டல்கள் மூலம், பல காலநிலை மாதிரிகளை உருவாக்கி ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் இன்றளவும் துருவப்பகுதிகளில் கடந்த பத்து கோடி ஆண்டுகாலமாக தாவரங்கள், விலங்கினங்கள், மற்றும் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்பது ஒரு விடுபடாத மர்மமாகவே இருக்கிறது.
ஐந்து மாதங்கள் சூரிய வெளிச்சம் இல்லா விட்டால் தாவரங்களால் தங்களின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் தேவையான,சர்க்கரைச் சத்துப் பொருளை, பச்சயம் மூலம், சூரிய ஒளியில், ஒளிச் சேர்க்கை செய்து, தயாரிக்க சாத்தியம் இல்லை. எனவே ஐந்துகோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில், அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி வளர்ந்தன என்ற முக்கியமான" "கால நிலை" தொடர்பான கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் தாவரவியல் வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஆர்க்டிக் பகுதியில், எண்பத்தி மூன்று இன வகைகளைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் மரவகைகள் வளர்ந்து இருப்பது புதைபடிவங்கள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக மரங்கள் நூற்றி ஐம்பது அடி உயரம் வளர்ந்து இருப்பதும், ஆயிரம் ஆண்டு காலம் வாழ்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஆர்க்டிக் பகுதியில் சேகரிக்கப் பட்ட, தாவரங்களின் பாகங்கள், விதைகள், மகரந்தத் துகள்கள், மற்றும் புதைபடிவங்கள் மூலம், ஆர்க்டிக் பகுதியில், அதிக அளவில் ஆதி செம்மரங்கள் வளர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மரம் முற்றாக அழிந்துவிட்டது என்று நம்பப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இந்த மரங்கள் சீனாவின் சில பகுதிகளில் வளர்ந்து இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரங்களானது, வட அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியாவின் வட பகுதிகளில் வளர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் புதைபடிவங்ககள் மூலம் ஆர்க்டிக் பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகளுகக்கு முன்பு, ஹெம்லாக், ஸ்பர்ச், எல்ம், லார்ச், பர்சி, ஆல்டர், ஒக், வால்நட் செஸ்நட், சைகேமோ, சிடார், ஹிக்கோரிஸ், ஜிங்கோ மற்றும் பெரணி வகைத்.தாவரங்களும் மரங்களும் வளர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
Comments