smart report

Smart தெற்காசிய சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயலாததைப் போலவே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும்,ஹைத்தி தீவில், 12.01.2010 அன்று, ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும்,USGS என்று அழைக்கப்படும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டமானது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு,தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இதில் குறிப்பாக,அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் வட பகுதியில்,புதிய கடல் தளம் உருவாகி,மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும், கடல் தளத்துடன்,வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று,அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் தென் பகுதியில்,புதிய கடல் தளம் உருவாகி,வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும், கடல் தளத்துடன்,தென் அமெரிக்கக் கண்டமானது, வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. ஆனால்,கரீபியன் பாறைத் தட்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததா,அல்லது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி,கிழக்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததா,என்று ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.இந்தக் கருத்தானது, ''அட்லாண்டிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது.வேறு சில ஆராய்ச்சியாளர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.இந்தக் கருத்தானது, ''பசிபிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளாக கியூபா,ஹிஸ்பானொலியா,போர்டோ ரிக்கா,மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது கண்டங்களை போன்று இலேசான கிரானைட் வகைப் பாறையால் ஆகி இருக்கிறது. ஆனால்,கரீபியன் தீவுக்கு கூட்டத்தில், கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் தீவுகளானதுஎரிமலை செயல்பாட்டால் உருவாகி இருக்கிறது.அத்துடன் அந்த எரிமலைத் தீவுகளானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி சற்றே வளைந்து 'வில்' போன்ற வடிவில் உருவாகி இருக்கிறது. உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருந்தால்,அட்லாண்டிக் கடல் தளமானது, கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில்,அந்தக் கடல் தளமானது, பூமிக்கு அடியில் இருந்து, எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டு இருந்தால்,கரீபியன் எரிமலைத் தீவுகளானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். ஆனால்,அந்தத் தீவுகளானது, வடக்கு தெற்கு திசையை நோக்கி சற்றே வளைந்து 'வில்' போன்ற வடிவில் உருவாகி இருக்கிறது.எனவே பல ஆராய்ச்சியாளர்கள் அட்லாண்டிக் கடல் மாதிரியை ஏற்காமல்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்தக் கருத்தின்படி,கரீபியன் தீவுக்கு கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,காலபாகஸ் எரிமலைத் தீவுக்கு கூட்டம் இருக்கும் இடத்தில உருவாகி,இலேசான பாறைத்த தட்டாக உருவாக்கி,கிழக்கு திசையில் நகர்ந்ததாக நம்புகின்றனர். அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வந்து கொண்டு இருந்த பொழுது,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதனால்,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்த கரீபியன் தீவுக்கு கூட்டமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்புகின்றனர்.குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் பாலம் போன்ற மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் அமிழ்ந்து இருந்ததாகவும்,கரீபியன் தீவுக்கு கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகே,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து உயர்ந்ததாகவும் நம்பினார்கள். குறிப்பாக மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், இவ்வாறு உருவானதாகவும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்.அதிக எண்ணிக்கையில், விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்றதாகவும் நம்பிக் கொண்டு இருந்தனர்.இந்த நிகழ்வானது ''தி கிரேட் அமெரிக்கன் இன்டெர் சேஞ் ''என்று வர்ணிக்கப் படுகிறது. இந்த நிலையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை, புருஸ் சிம்ப்சன்ஸ் என்ற ஆராய்சியாளர் கண்டு பிடித்தார். இதன் அடிப் படையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பத்து கோடி ஆண்டுகளாகவே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகக் கூறப் படும் "பசிபிக் கடல் மாதிரி" விளக்கமும் சாத்தியம் இல்லாத விளக்கம் ஆகும். முக்கியமாகக் கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, பெரிய தீவுகளான கியூபா,ஹிஸ்பானேலியா, போர்டோ ரிகா. மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது, கண்டங்களைப் போன்று கிரானைட் வகைப் பாறையால் ஆனது. இந்த நிலையில் கியூபா தீவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசரின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக, டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவானதாகக் கூறப் படும் விளக்கமும் முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். இந்த நிலையில்,ஜெர்மனில் உள்ள பெர்லினில் உள்ள டெக்னீஸ்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ராய்க் பாக்மன் என்ற புவியியலாளர்,கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் பற்றிய, இரண்டு கருத்துக்களைப் பற்றியும், ஆய்வு செய்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் ஆய்வுக் கட்டுரையானது ,அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களான,லோத்தார் ராட்ச் பாகர் மற்றும் க்ளாஸ் ஸ்டாநக் ஆகியோர்களால் மீளாய்வு செய்யப் பட்டு,இணையத்தில் வெளியிடப் பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்தக் கட்டுரையின் முடிவில் ,கரிபியன் பாறைத்த தட்டின் தோற்றம் குறித்து,தீர்க்கமாக, எந்த ஒரு கோட்பாட்டினாலும் கூற முடியாது,இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்து இருக்கிறார். . இவ்வாறு கரீபியன் பாறைத் தட்டு, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததா,அல்லது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி,கிழக்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததா,என்று உறுதியாகத் தெரியாத நிலையில்,அன்று ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும், சுனாமிக்கும் ,என்று அழைக்கப் படும், ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில், விளக்கம் கூற வேண்டிய, ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் ,குறிப்பாகக் கரீபியன் பாறைத் தட்டு, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறினால்,பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூறும் சிக்கலான நிலைமை ஏற்பட்டு விடும் என்பதால்,ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு சாமர்த்தியமான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எனவே வட அமெரிக்கக் கண்டமானது வேகமாக மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் ''வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்'',கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று ஒரு மறைமுகமான விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். இந்தநிலையில்,லயில்,12.02.2010 அன்று, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சியும்சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், குமுறும் எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப்போன்று, பல கிலோமீட்டர்சுற்றளவுக்கு சில சென்டிமீட்டர், உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ளவளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம், ஹைத்தி தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயே, 12.01.2010, அன்று ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, ஆதாரப்பூர்வமாகமாகவும், ஆணித்த தரமாகவும், முக்கியமாக இரண்டாவது முறையாகவும், நிரூபணம் ஆகி இருக்கிறது. 0000000000000000000000000000000000000000000000000 அட்லாண்டிக் கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருக்கிறது. 0000000000000000000000000000000000000000000000 குறிப்பாக அந்த கடலடி எரிமலைத் தொடரின் வட பகுதியில், உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையிலும், கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், யுரேசியக் கண்டமானது, கிழக்கு திசையிலும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று, அந்த கடலடி எரிமலைத் தொடரின் தென் பகுதியில், உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது, வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. அத்துடன் அந்த எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது, வட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கருத்தின்படி,வட அமெரிக்கக் கண்டமும், தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும் தனித்த தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு,அட்லாண்டிக் கடல் தரையின் மேல் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் நாசா வெளியிட்ட "உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. ஆனால் நாசா வெளியிட்ட "உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், அவ்வாறு இந்த இரண்டு க ண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையிலான எல்லைக் கோட்டை, ஆராய்ச்சியார்களால் ‘’வரையரை’’ செய்ய இயல வில்லை. எனவே இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது" "வரையருக்கப் படாத எல்லைப் பகுதி" என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் மூலம், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரையானது,தொடர்ச்சியாக இருப்பதுடன், இந்த இரண்டு கண்டங்களும் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம், இரண்டாவது முறையாகவும் ஆதாரபூர்வமாகவும், ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று, அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிவாரப் பகுதிக்கு, அதாவது புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்படும் பகுதிக்கு "ஆல்வின்" என்ற ஆழ்கடல் கலன் மூலம், சென்று, ஆய்வு செய்த பொழுது, அந்தப் பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த "பேலியோடிக்டைன்" என்று அழைக்கப்படும், கடல் உயிரினத்தின் கூட்டின் சுவடுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். இவ்வாறு புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்படும் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த "பேலியோடிக்டைன்" என்று அழைக்கப் படும், கடல் உயிரினத்தின் கூட்டின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலமாக கடந்த ஐந்து கோடி ஆண்டு காலமாகவே நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு-தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிதாகக் கடல் தளம் உருவாகி, கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில்,அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, குறைவாகவும், அதே நேரத்தில் அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, அதாவது கண்டங்களுக்கு அருகில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில், அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகிக் கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உருவாகி இருக்கும், புனித பீட்டர் பாறை, மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் இருந்து, சேகரிக்கப் பட்ட, பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, ராண்டல் ரைட் என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார். இந்தத் ததவல், அமெரிக்க புவியியல் கழக பத்திரிக்கையிலும் வெளியிடப் பட்டு இருக்கிறது. இவ்வாறு புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்படும், அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலேயே நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் இருப்பதன் மூலம், கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாகவே, அதாவது, பூமி தோன்றிய காலம் முதலே, அட்லாண்டிக் கடல் தரையானது, நிலையாக இருப்பது, ஆதரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000 பசிபிக் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன. கண்டங்களின் மேலும், கடல் தளத்தின் மேலும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலம்,கண்டங்களும் கடல் தளமும் நிலையாக இருப்பது, ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக,ஹவாய் எரிமலைத் தீவுகளானது, தென் கிழக்கு திசையில் இருந்து, வடமேற்கு திசையை நோக்கி, உருவாகி இருப்பதைப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது பசிபிக் கடல் தளமானது, தென் கிழக்கு திசையில் இருந்து, வடமேற்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்குள் இருந்து எரிமலைப் பிழம்புகளால் தொடர்ந்து துளைக்கப் பட்டதால்,ஹவாய் எரிமலைத் தீவுகளானது,தென் கிழக்கு திசையில் இருந்து, வடமேற்கு திசையை நோக்கி,உருவாகி இருப்பதாக விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் உண்மை என்றால் அதே பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் மற்ற எரிமலைத் தீவுகளும்,ஹவாய் தீவுகளுக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும். குறிப்பாகப் பசிபிக் கடல் தளத்தின் மேல்,ஹவாய் எரிமளித் தீவுகளானது,ஒரு இடத்தில் அறுபது டிகிரி கோணத்தில் வளைந்து உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும்,கில்பெர்ட் மேடு மற்றும் தொக்கிலா கடல் மலைகள் மட்டுமே, ஹவாய் எரிமலைத் தொடரின்,அறுபது டிகிரி வளைவுக்கு இணையாக உருவாகி இருக்கின்றன. மற்ற எரிமலைத் தொடர்கள் அவ்வாறு உருவாகி இருக்க வில்லை. இந்த நிகழ்வானது,''ஏசிங்கரனைஸ் பெண்ட்''என்று அழைக்கப் படுகிறது. இதன் மூலம்,பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000 இதே போன்று வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பசிபிக் கடல் தளமானது வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,வட அமெரிக்கக் கண்டத்தை பொத்துக் கொண்டு,வட அமெரிக்க கண்டத்தின் மேல் ,குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில்,எரிமலைத் தொடர்களாக உருவாக்கி இருப்பதாக ஒரு விளக்கம் கூறப் பட்டது. இந்த விளக்கம் உண்மை என்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல்,வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு பசிபிக் கடல் தளத்தின் மேலும்,வட அமெரிக்கக் கண்டத்தின் மேலும் ஒன்றுக் கொன்று இணையான முறையில், ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி,ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 0000000000000000000000000000 அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, நில அதிர்ச்சி இயல் வல்லுனரான டாக்டர் சேத் ஸ்டெயின், ஒரு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் கட்டுரையில், அவர், கண்டத்தட்டு நகர்ச்சி கோட்பாடானது. கண்டத்தட்டுகளின் எல்லைப்பகுதிகளில் ஏற்படும் நில அதிர்சிகளை சிறப்பாக விளக்குகிறது. ஆனால் அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதி போன்ற, கண்டத் தட்டுகளின் எல்லைப் பகுதிகளில் இருந்து, தொலைவில் இருக்கும் பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு விளக்கம் அளிக்க இயலவில்லை. அதனால் அமெரிக்காவின் மத்தியப்பகுதி, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பணிபுரியும் புவியியலாளர்களுக்கு அப்பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கான காரணம் தெரியவில்லை என்றும், அதனால் அது போன்ற நில அதிர்ச்சிகளானது "தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை" என்றும்டாக்டர் சேத் ஸ்டெயின், தெரிவித்து இருக்கிறார். ooooooo ஆனால் உண்மைநிலை என்னவென்றால், கண்டத்தட்டு நகர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில், கண்டத்தட்டுகளின் எல்லைப்பகுதி என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பும், சுமத்ரா தீவு, குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டுகளின் எல்லைப் பகுதி என்று நம்பப் படும் பகுதியில் ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கும், அதேபோன்று, அமெரிக்கக் கண்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்து இருப்பதாக நம்பப்படும் ஹைத்தி தீவுகளில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் கூட, கண்டத் தட்டு நகர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இந்த இடத்தில் ஒருமுக்கியமான கேள்வி எழுகிறது. அப்படி என்றால் கண்டத்தட்டுகளின் எல்லைப் பகுதி என்று நம்பப் படும் பகுதிகளில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன? கண்டங்களானது கடல்பரப்பில் இருந்து உயரும் பொழுது, கண்டத்தின் ஒரப் பகுதிகளில் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் கண்டத்தின் ஒரப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதேபோன்று,கண்டத்தைச் சுற்றி இருக்கும் கடல் தளப்பரப்பும் சிறிய அளவுக்கு உயர்கிறது. அதனால் கடல் பரப்பில் அந்த கண்டத்தைப் போன்ற வடிவத்திலேயே விளிம்புப் பகுதி உருவாகுவதுடன், அந்த விளிம்புப் பகுதிகளிலும் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால், கடல் தரையில் கண்டங்களால் உருவாக்கப்படும் விளிம்புப் பகுதிகளிலும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது, உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரப் பகுதிகளிலும் அதே போன்று, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி இருக்கும் கடல் தளப் பகுதியில், ஆப்பரிக்கக் கண்டத்தின் பெரிய அளவில் இருக்கும் விளிம்புப் பகுதிகளிலும் ஏற்படும் நில அதிரிச்சிகள். 00000000000000000000000 ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்இருக்கும் கடல் தரையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போலவே,எரிமலைத் தொடர்கள் உருவாகிஇருப்பதற்கு காரணம் என்ன? உண்மையில் கண்டங்களுக்கு இடையில்இருக்கும் கடல் பகுதியில்,கடலுக்குஅடியில்கண்டங்களை சுற்றிலும் உருவாகி இருக்கும் எரிமலைத்தொடர் நெடுகிலும்,பூமிக்குள் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி,நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்,அந்தக் கடல் தளங்களுடன்கண்டங்களும் நம்பப் படுகிறது. எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது,தவறான கருத்து என்பது,ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும்உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் மூலம் தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் இருக்கும் கடல் தளத்தின் மேல்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போன்றே, எரிமலைத் தொடர்கள் உருவாகிஇருக்கின்றன. இந்த நிலையில்அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்குள் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு, தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்,புதிய கடல் தளம் உருவாகி,ஆப்பிரிக்கக் கண்டத்தைநோக்கி, கடல் தளங்கள் நகர்ந்துகொண்டு இருக்க வேண்டும். அதாவது ஆப்பிரிக் கக்கண்டத்தை சுற்றிலும்,அதிக சுற்றளவுப் பகுதியில்,புதிய கடல் தளம் உருவாகிக்,குறைந்தசுற்று வட்டப் பகுதியை நோக்கி கடல் தளங்கள் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறுஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும்,அதிக சுற்றளவுப் பகுதியில்,புதிய கடல் தளம் உருவாகி, குறைந்த சுற்று வட்டப் பகுதியை நோக்கி கடல் தளங்கள் நகர்ந்தால்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு,கடல் தளப் பாறைகள்நொறுங்கி விடும். அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்,குறைந்த சுற்றளவுப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி, ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும்,அதிக சுற்று வட்டப் பகுதியைநோக்கி கடல் தளங்கள் நகர்ந்தாலும்,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்,கடல் தளத்தில் இடைவெளிகள்ஏற்பட்டு,அதன் வழியாகவும்பூமிக்குள்இருந்துபாறைக் குழம்பு வெளி வந்து எரிமலைகள் உருவாகும். ஆனால்அவ்வாறுஇல்லாமல்ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும்,இருக்கும்கடல் தரையின் மேலே, ஆப்பிரிக்கக்கண்டத்தின் வடிவத்தைப் போலவே, சற்றுபெரிய அளவில் ,எரிமலைத் தொடர்கள்உருவாகி இருக்கின்றன. இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போலவே, பெரியஅளவில் ,எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்குகாரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆபிரிக்கக் கண்டத்தின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் உள்பட, கடல் தரையில் உருவாகும் பாறை வகைகளும் காணப் படுகின்றன.இதன்மூலம் ஆப்பிரிக்கக் கண்டமானது, கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது நிரூபணம்ஆகிறது. இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டமானது,கடல் தரையில் இருந்து,மேல்நோக்கி உயர்ந்த பொழுது, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் இருக்கும் கடல் தரையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போலவே, விரிசல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அந்த விரிசல்கள் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பு வெளிப் பட்டதால்,ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் இருக்கும் கடல் தரையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்தைப் போன்றே எரிமலைத்தொடர்கள் உருவாகி இருக்கின்றன. 0000000000000000000000000

Comments

Popular posts from this blog

Abcd report

tsunami science

vivi