Delta report
Delta
அடிப்படை ஆதாரம் இல்லாததா காரணத்தால், கண்டத் தட்டு நகர்ச்சி தியரியின் அடிப்படையில், தெற்காசிய சுனாமிக்கும், ஹைத்தி தீவில் ஏற்பட்ட சுனாமிக்கும், அமெரிக்காவின் முன்னனி புவியியல் ஆய்வு மையங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை.
இந்த நிலையில், பூமிக்கு அடியில் ஏற்பட்ட, எரிமலை வெடிப்புகளால், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளும், ஹைத்தி தீவில், சுனாமியை உருவாக்கிய, நில அதிர்ச்சிகளும், ஏற்பட்டு இருப்பதைத் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களின் அடிப்படையில், நான் கண்டு பிடித்து இருக்கிறேன்.
- விஞ்ஞானி.க.பொன்முடி.
நான் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்த தகவல்களை இணையத்தில் திரட்டி ஆய்வு செய்துகொண்டு இருக்கிறேன். இங்கேஅந்த தகவல்களை உங்களுக்குத் தெரிவித்து, உங்களிடம் ஒரு எளிமையான கேள்வியை முன்வைக்கிறேன்.
தற்பொழுது, உலகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில், கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கற்பிக்கப்படுகிறது.
அவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் நகரும்பொழுது, கடல் தளப்பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடல்தளங்களின் மேல், பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோன்றுஒரு கண்டத்திற்கு அடியிலோ அல்லது தீவுக்கு அடியிலோ, கடல்தளமானது, உரசிய படி நகர்ந்து செல்லும்பொழுது, கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானதுமேல் நோக்கி தள்ளப்பட்டு சுனாமி உருவாகுவதாகவும் நம்பப்படுகிறது.
அதேபோன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது தனித்தனியாகக் கடல் தளங்களுடன் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
'அதேபோன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் தனித்தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தநிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருக்கும்கரீபியன் தீவுக்கூட்டமானது, ஒரு பாறைத்தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் இன்று வரை கரீபியன் பாறைத்தட்டு எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்க ளுக்கு இடையில் கருத்துவேறுபாடு நிலவுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னனி ஆய்வு மையமான நாசா, கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து ஒரு "உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்" ஒன்றை, இணையத்தில் வெளியிட்டது.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப்bபட்ட கடல் தரைப்bபகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலா மீட்டர் தொலைவுக்கு, நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
ஆராய்ச்சியாளர்கள் கண்டத் தட்டு. களின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி, இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்தில். இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய கண்டங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட கடல் தரையில், சிறு சிறு கோடுகளை வரைந்து, அந்த இடத்தில் என்ன செயல் பாடு நடக்கிறது என்று "உறுதியாகத் தெரிய வில்லை" என்றும், விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 26.12.2004,அன்று.சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் தெற்காசிய சுனாமி உருவானது.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த நிகழ்வுக்கு, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது,
இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து சென்றதால், அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று நாசா இணையதளத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அதே நாசாவைச் சேர்ந்தஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியக் கண்டத்தின் கடல் தளமானது,
இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து சென்றதால், அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று இரண்டாவதாகஒரு விளக்கத்தையும் தெரிவித்து இருக்கின்றனர்.
அதேபோன்று, கடந்த12.01.2010, அன்று, கரிபியன் தீவுக்கூட்டத்தில் உள்ள, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சிகளும்சுனாமியும் ஏற்பட்டது.
அந்த நிகழ்விலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானார் உயிரிழந்தனர்.
அந்த நிகழ்வுக்கு USGS என்று அழைக்கப்படும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் கரீபியன் தீவுகள் எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாத நிலையில், குறிப்பாகக் கரிபியன் பாறைத்தட்டு எந்த திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதுஎன்பதை நேரிடையாகக்கூறாமல், வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்தமட்டில், கரிபியன் பாறைத்தட்டு, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்,பாறைத்தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையிலான எல்லைக் கோட்டை, ஆராய்ச்சியார்களால் ‘’வரையரை’’ செய்ய இயல வில்லை. எனவே இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது" "வரையருக்கப் படாத எல்லைப் பகுதி" என்று அழைக்கப் படுகிறது.
சுருக்கமாக் கூறவேண்டும் என்றால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப்பகுதியில் என்ன நடக்கிறது என்று "உறுதியாகத் தெரியாத நிலையிலேயே" நாசா ஆராய்ச்சியாளர்கள் தெற்காசிய சுனாமிக்கு இரண்டு விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை.
அதேபோன்று, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரிபியன் தீவுக்கூட்டம் உண்மையில் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாத நிலையிலேயே,USGS என்று அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை.
எனவே, உண்மையில். தெற்காசியசுனாமியை உருவாக்கிய நிலஅதிர்ச்சிகளுக்கும், அதேபோன்று, ஹைத்தி தீவில், உருவான சுனாமியை, உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கும் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்தநிலையில், தெற்காசிய சுனாமிக்குப் பிறகு, சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் "சிமிலு" என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல்மட்டத்துக்கு மேலே நான்கு அடிவரை உயர்ந்து இருந்தது.
அதனால் அந்தப் பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்ததுடன், அந்தப் பகுதியில் கடலுக்குள் மூழ்கி இருந்த கடல் தாவரங்கள், கடல் மட்டத்துக்கு மேலே தெரிந்தன.
எனவே சிமிலு தீவு ஏன் உயர்ந்தது என்ற கேள்வி எழுகிறது.
அதே சிமிலு தீவில்,20.02.2008அன்று, நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோமீட்டர்சுற்றளவுக்கு, சில சென்டிமீட்டர் உயரமும்தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததை, தரைமட்டமாறுபாடுகளைப் பதிவு செய்த,ஜப்பான் நாட்டின் "ஆலோஸ்" என்ற செயற்கைக்கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதேபோன்ற தரைமட்ட மாறுபாடுகளானது, குமுறும் எரிமலைகளைச் சுற்றி, பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு இருக்கும் தரைப்பகுதியானது சில சென்டிமீட்டர் உயர்ந்து இறங்கும்பொழுது, உருவாகுவதும், தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக்கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
எனவே சிமிலு தீவுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சிமிலு தீவு உயர்ந்து இருப்பதுடன், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கும் காரணம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இதேபோன்று,12.02.2010 அன்று, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சியும்சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், குமுறும் எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப்போன்று, பல கிலோமீட்டர்சுற்றளவுக்கு சில சென்டிமீட்டர், உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ளவளையங்கள் உருவாகி இருப்பது, தரைமட்டமாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதன்மூலம், ஹைத்தி தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயேooooo அன்று ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்தநிலையில், நான் உங்கள் முன் ஒரு எளிமையான கேள்வியை முன்வைக்கிறேன்.
தெற்காசிய சுனாமியும், ஹைத்தி தீவு சுனாமியும், எரிமலை வெடித்ததால் உருவானது என்ற விளக்கத்திற்கு ஆதாரம் இருக்கிறதா அல்லது, தீவுகளுக்கு அடியில் கடல் தளம் நகர்ந்து சென்றதால் உருவானது என்ற விளக்கத்திற்கு ஆதாரம் இருக்கிறதா?
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்
தெற்காசிய சுனாமிக்கும் ஹைத்தி தீவு சுனாமிக்கும், காரணம் எரிமலை வெடிப்பு காரணமா அல்லது கண்டத்தட்டு நகர்ச்சி காரணமா?
எந்த விளக்கம் ஆதாரபூர்வமான விளக்கம்?
இந்த இடத்தில் நான் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அடிப்படை ஆதாரமில்லாத கண்டத்தட்டு நகர்ச்சி கருத்தை பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி விட வேண்டும்.
000000000000000000000000
பல மாதங்கள் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரிய வெளிச்சம் இன்றி தாவரங்களால்ஒளிச்சேர்க்கை செய்து உயிர் வாழத் தேவையான சக்கரை உணவுப் பொருளை தயாரிக்க இயலாது. இந்த நிலையில் துருவப் பகுதிகளில்bஅடர்ந்த காடுகள் வளர்ந்து இருப்பதற்கு ஆதாரமாக மரங்களின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பது, ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திலும் பெரும் குழப்பத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.
இதே போன்று அந்தக் காடுகளில் டைனோசர்கள் உட்பட பல விலங்கினங்கள் வாழ்ந்து இருப்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் துருவப் பகுதிகளில் டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்து இருப்பதால் துருவப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வட துருவப் பகுதியில், குறிப்பாக கிரீன்லாந்து தீவிற்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவு மற்றும் ஆக்சல் ஹைபர்க் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த பசுமைக் காடுகள் வளர்ந்திருப்பது, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மரங்களின் புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு தீவுகளும் வடதுருவப் பகுதியில் இருந்து ௭௦௦ கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பனியாறுகளுடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் ஆக்சல் ஹைபர்க் தீவில், சில மரங்களின் அடிப் பாகங்கள் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருப்பதை தற்செயலாக அந்த தீவின் மேல் பறந்துசென்ற ஒரு ஹெலி காப்டர் விமானி கண்டார்.
உடனே அதுகுறித்து தனது நண்பரும், கனடாவின் சஸ்கட் செவன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ,புளியியல் ஆராய்ச்சியாளரான,டாக்டர், ஜேம்ஸ் பேசிங்கருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, டாக்டர் ஜேம்ஸ் பேசிங்கர் தனது குழுவினருடன் ஆ க்சல் ஹைபர்க் தீவிற்கு சென்று, அந்த மரங்களின் புதைந்த பகுதிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் அந்த மரங்களானது, நூற்றி ஐம்பது அடி உயரம் வரை வளரக் கூடியது என்பதும் ஆயிரம் ஆண்டு காலம் வாழக் கூடிய செம்மரங்கள் என்பதும் தெரிய வந்தது.
இந்தக் கண்டுbபிடிப்பு குறித்து லூசியானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, புவிவேதியல் மற்றும் புவி உயிரியல் வல்லுனரான, டாக்டர் ஹோப் ஜெகரன், நான்கு மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் ஆக்சல் ஹைபர்க் தீவில் செம்மரக்காடுகள் எப்படி வளர்ந்தன என்பது மர்மமாக இருக்கிறது என்று வியப்பு தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இந்த மரங்களை பார்க்கும்பொழுது தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இப்பதைப் பார்ப்பது போல ஆச்சர்யமாக இருக்கிறது என்றும் டாக்டர்,ஹோப்ஜெகரன் தெரிவித்து இருக்கிறார்.
எல்லிஸ் மெர் தீவு புதைபடிவங்கள்.
குறிப்பாக பாலூட்டி விலங்கினங்கள், உணவை செரிப்பதன் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்து சொற்கின்றன. அத்துடன் உடல் வெப்பத்தை பாதுகாக்க மயிர்த் தோலையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பாலூட்டிகளின் உடல் வெப்பமாக இருப்பதால் இரவிலும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க முடிகிறது.அத்துடன் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளிலும் பாலூட்டிகளால் வாழ முடிகிறது.
ஆனால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக்கூடிய பாம்புகள் பல்லிகள் முதலைகள் மற்றும் ஆமைகளால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.
எனவே ஊர்வன வகை விலங்கினங்கள் உடல் வெப்பத்தை உயர்த்திக் கொள்ள சூரிய வெளிச்சத்தில் உடலை காய வைக்கின்றன.
அதனால் துருவப் பகுதிகளில் ஊர்வன வகை விலங்கினங்கள் வசிப்பதில்லை.மாறாக ஊர்வன வகை விலங்கினங்கள் அதிக வெப்பம் நிலவக் கூடிய பூமத்தி யரேகைப் பகுதியிலயே அதிகம் காணப்படுகின்றன.
இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில், கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில், நாலரை முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, ராட்சத பாம்புகள், முதலைகள், பல்லிகள், மற்றும் கால பாகஸ் தீவுகளில் "இந்தத் தீவு களுக்கு இந்த விலங்குகள் எப்படி வந்தன" என்று டார்வின் பார்த்து வியந்த, ராட்சத தரை வாழ் ஆமைகள், போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்றும் ஆதிகாலக் குரங்குகள், டபிர் என்று அழைக்கப்படும் பன்றி போன்ற விலங்கினம், ஐந்து டன் எடையுள்ள நீர்யானை போன்ற "கோரி போடன்" என்ற விலங்கு மற்றும் காண்டாமிருகம் போன்ற "பிராண்டோ தீரி" ஆகிய பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கண்டு பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த, கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விலங்கியல் வல்லுனரான டாக்டர், ஜெயலின் எபெர்லி, எல்லிஸ் மெர் தீவில், ராட்சத தரை வாழ் ஆமைகளின் புதை படிவங்கள் காணப்படுவது குழப்பமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்
இதற்கு முன்பு,முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் தாவரங்களின் செல்களை ஆய்வு செய்த, விஞ்ஞானியான ராபர்ட் ஹூக், இங்கிலாந்தின் டோவர் பகுதியில் ராட்சத ஆமையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது "அப்படி என்றால் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அதிக வெப்பநிலை இந்திருக்க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எழுதிய கட்டுரையை,டைம் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது.
அந்தக் கட்டுரையை அலாஸ்கா பல்கலைக் கழகம் தனது இணையப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது.
அந்தத் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.
இந்த மரங்களானது நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையானது என்றாலும் கூட அந்த மரங்களானது கல்மரங்களாக மாறாமல் இருக்கிறது. அதற்கு அந்த மரங்கள் மண்ணால் திடீரென்று மூடப்பட்ட பிறகு ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த மரங்கள் முதலில் வளர்ந்தன? ஏனென்றால், ஆண்டுக்கு நான்கு மாத காலம் தெரடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய அவசியமான சூரிய வெளிச்சம் இல்லாத சூழலில் எப்படி இந்த மரங்கள் வளர்ந்தன என்பதுதான் மிகப் பெரிய புதிராக இருக்கிறது.
இதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் அலாஸ்காவில்,ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந் த டைனோசர்கள் உட்பட ஆயிரக் கணக்கான மற்ற விலங்கினங்களும் அழிந்தன அதற்கான காரணம் இதுவரை அறியப் படவில்லை.
அதே போன்று இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. ஆண்டில் பாதி காலம் இரவு நீடிக்கும் ஆர்க்டிக் பகுதியில், ஒருவேளை குளோபல் வார்மிங் காரணமாக வெப்பத்தை பெற்றாலும் கூட, எப்படி இந்த விலங்குகளும், தாவரங்களும், உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூரிய வெளிச்சத்தைப் பெற்றன. அதற்கு அந்த காலத்தில் அந்த நிலப் பகுதிகள் அதிக சூரியவெளிச்சம் விழக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு, துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து இருக்கலாம் என்று கூறப்படும் கண்டத்தட்டு நகர்ச்சி விளக்கம் இங்கே, அதிஉயர் ஆர்க்டிக் பகுதிக்கு பொருந்தாது.
ஒருவேளை, பூமியின் அச்சு சாய்ந்ததால், ஆர்க்டிக் பகுதியில் அதிக வெளிச்சம் கிடைத்திருக்குமா? ஆனால் அதற்கு எந்த இயக்க செயல் பாடும் அறியப்பட வில்லை.
எனவே நாம் தற்பொழுது, செய்யவேண்டிய தெல்லாம், முன் ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், ஒப்பீட்டளவில் வெப்பமான அடர்ந்த காடுகளில், டைனோசர்களும், மற்ற விலங்கினங்களும், இருளில் வாழ்ந்திருக்கிறது என்பதை நம்பியாக வேண்டும்.
எப்படி இந்த விலங்கினங்களும் தாவரங்களும் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்பது விடையளிக்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மம்.
அண்டார்க்டிக் கண்டத்தின் புதைபடிவங்கள்.
கடந்த_2017, ஆம் ஆண்டு, மில்வாக்கி-விஸ்கான்சிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் சூழலியல் வல்லுனரான டாக்டர். எரிக் குல்பிரான்சன் குழுவினர், அண்டார்க்டிக் கண்டத்தில் புதை படிவ ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது டிரான்ஸ் அண்டார்க்டிக் மலைப் பகுதில். மண்ணுக்கு அடியில் பாதி புதையுண்ட நிலையில் பதின்மூன்று மரங்களின் அடிப்பகுதி கல்லாக மாறி இப்பதைக் கண்டுபிடித்தனர்.
அந்த மரங்களானது, இருபத்தி ஆறு முதல் இருபத்தி எட்டு கோடி ஆண்டுகள் தொன்மையானது என்று தெரியவந்துள்ளது.
புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்ட இடமானது, தென் துருவப் பகுதியில் இருந்து, நானூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு ஒற்றைப் பெருங்கண்டமாக இந்த தாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்ட மானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்ததாக நம்பப்படுகிறது.
எனவே எப்படி நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் சூழலில், காடுகள் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்விக்கு டாக்டர் குல் பிரான்சன், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் குளிர் காலத்தை எப்படியோ சமாளித்து இந்தக் காடுகள் வளர்ந்து இருக்கின்றன, ஆனால் அதுபற்றி நாங்கள் இன்னமும் முழுதாகப் புரிந்து கொள்ள இயல வில்லை,என்று தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக பாஞ்சியா கருத்தின்படி, பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சியா சூப்பர் கண்டமானது, பூமத்திய ரேகைப் பகுதியில் பிளவு படத் தொடங்கியது. அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கியும் அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென்பகுதியை நோக்கியும் நகர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அத்துடன் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பிரிந்து வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்டமானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, தென் துருவப் பகுதியிலேயே இருக்கிறது.
இந்தநிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக, முதன் முதலில் தாவரங்கள் நீரில் இருந்து நிலத்திற்கு வந்து வாழத்bதொடங்கியதில் இருந்து, அதாவது நாற்பதுகோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைபடிவங்கள் முதல், கடந்த ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் புதைபடிவங்கள் வரை அண்டார்க்டிக் கண்டத்தில் காணப்படுகிறது.
அதாவது பூமியில், தாவரங்களின் மொத்த பரிணாம வளர்ச்சியே அண்டர்க்டிக் கண்டத்தில் புதைபடிவங்களாகக் காணப்படுகிறது என்று டாக்டர் எரிக் குல்பிரான்சன் தெரிவித்து இருக்கிறார்.
முதலில் அண்டார்க்டிக் கண்டத்தில் சில தாவர மற்றும் விலங்கின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்களும் விலங்குகளும், அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும் குளிர் கால இரவுக்bகாலத்தை சமாளித்து வாழ்வதற்கு, சில சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்பெழுது அண்டார்க்டிக் கண்டத்தில் பலநூறு தாவர இனங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று நூற்றுக்கும் அதிகமான விலங்கினங்களின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன.
அண்டர்க்டிக் கண்டத்தில் ஆரம்பத்தில் சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில், பூமியில் ஏற்பட்ட அதிக அளவிலான எரிமலைச் சீற்றங்களால், பூமியின் வெப்ப நிலை உயர்வால், அண்டார்க்டிக் கண்டத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் மூலம், கடந்த பத்து கோடி ஆண்டுகாலமாகவே அதிக வெப்ப நிலையும் சூரிய வெளிச்சமும் இருத்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற வெப்பமான கடல் தரைப் பகுதியில் வாழ்ந்த"டிரைலோபைட்" என்று அழைக்கப்படும் கடல் பூச்சியின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன.
அதேபோன்று இருபத்தி ஐந்து கோடி கண்டு களுக்கு முன்பு, அதாவது பெர்மியன் காலத்தில் வாழ்ந்த லிஸ்ட்ரோ சாரஸ், சைனோ நேதஸ், போன்ற ஆதிகால பாலூட்டிகளின் புதை படிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
முக்கியமாக டைனோசர் இனமானது பூமியில் இருபத்திமூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டிரையாசிக் என்று அழைக்கப்படும் காலத்தில் சிறிய ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து தோன்றியது.
இந்த நிலையில் டிரையாசிக்காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்கள் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டு இருக்கின்றன.
அதே போன்று டிரையாசிக் காலத்திற்கு அடுத்து வந்த ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன.
அதேபோன்று ஜுராசிக் காலத்திற்கு அடுத்து வந்த கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக டேனோசர் இனமானது பூமியில் பதினாறு கோடி ஆண்டுகள் வாழ்ந்து இருக்கின்றன.
இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் "சாரோ போட்" என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. தாவர உண்ணி வகையான சாரோ போட் டைனோசரின் புதைபடிவங்களானது ஏற்கனவே ஏழு கண்டங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் டைனோசர் காலத்தில் பூமியெங்கும் ஏறக்குறைய ஒரேவிதமான காலநிலை இருந்திருக்கலாம் என்றும்vஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் ஜெர்மன் நாட்டின் ஆல்பிரட் வெக்னர் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் கிளேக் அண்டார்க்டிக் கண்டத்தின் கடற் கரைப் பகுதியில்,கடல் தரைக்கு அடியில் நூறு அடி ஆழம் வரைக்கும் துளையிட்டு படிவுகளை சேகரித்து, அதனை சி.டி.ஸ்கேன் முறையில் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான அந்த படிவுகளில் தாவரங்களின் வேர்கள், மற்றும் மகரந்தத் துகள்களின் புதைபடிவங்கள் இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில். அடர்ந்த பகமைக் காடுகள் இருந்ததாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் அந்த புதைபடிவங்கள் எடுக்கப்பட்ட இடமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்துருவப் பகுதியிலேயே இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் அந்த படிவுகளில் முன்னூற்றி அறுபதுக்கும் அதிகமான தாவர இனங்கள் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் ஏன் குளிர்ச்சி ஏற்பட்டு, பனிப்படலங்கள் உருவானது என்ற கேள்விக்கு விடை காண, தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் நாங்கள் செய்து பார்த்த "கால நிலைமாதிரிஆய்வில்" திருப்திகரமான விளக்கம் கிடைக்க வில்லை என்று அந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜெரிட் லோக்மன் தெரிவித்து இருக்கிறார்.
அண்டார்க்டிக் கண்டத்தில்,
அல்லிப்பூக் குளத்தில் வாழ்ந்த தவளைகள்.
ஸ்வீடன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர்,தாமஸ் மோர்ஸ் குழுவினர், அண்டார்க்டிக் கண்டத்தில் மேற்கொண்ட ஆய்வில், அண்டார்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, தவளையின் புதைபடிவங்களைக் கண்டு பிடித்தனர். அத்துடன் அந்த புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் அல்லிப் பூக்களின் புதைபடிவங்களையும் கண்டுபிடித்தனர்.
முக்கியமாக அந்த தவளையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் "ஹெல்மெட் தலை" தவளை இனத்தைச் சேர்ந்தது என்பதையும் கண்டு பிடித்து இருக்கின்றனர்.,
அதன் அடிப்படையில் அண்டர்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மிதமான காலநிலை இருந்ததாகவும், அதே போன்று தென் அமெரிக்காக் கண்டத்திற்கும்,அண்டர்க்டிக் கண்டத்திற்கும் இடையே நிலத் தொடர்பு இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக்vகுழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
எனது விளக்கம்
கடல் தளமானது, தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ,நார்வே நாட்டுக் கடல் பகுதியில், எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது, கிடைத்த பாறைப் பகுதிகளில், ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரவலாக வாழ்ந்த, பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,தாவர உண்ணி வகை டைனோசரான, பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது, எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர்,
அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட, எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் 6000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து, சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம், டைனோசர் காலத்தில், கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில், காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும்,அதன் வழியாக டைனோசர்கள் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து பூமியின் மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
கடல் பூமிக்குள் இருந்தது வந்தது.
இந்த நிலையில்,ஜப்பானின் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் யோஷிதா ,ஜப்பானில் உள்ள மாச்சுஹிரோ நகரில் உள்ள சூடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவந்த நீரை சேகரித்து பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில்,அந்த நீரானது,பூமியின் ஆழமான பகுதியில் இருந்த பாறைக்கு குழம்பில் இருந்து வெளிவந்த நீர் (magmatic water) என்று தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நிலவில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அந்த நீரானது.நிலவின் ஆழத்தில் இருக்கும் பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீர், மேற்பகுதிக்கு வந்து பனிக் கட்டியாக மாறி இருப்பதாக நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும் கடல் தரையின் உருவாகக் கூடிய தலையனைப் பாறைகள் மற்றும் பாம்புப் பாறைகள் காணப் படுவதுடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது குளிர்ந்து இறுகுவதால், பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன.
அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது
அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செ ய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன. தலையணை பாறைகள் கண்டங்களில் பல இடங்களில் காணப் படுகிறது.
இதே போன்று கடலுக்கு அடியில் இருந்து வேகமாக பாறைக் குழம்பு பீச்சியடிக்கும் பொழுது, உருவாகும் பாம்பு வடிவப் பாறைகளும் கண்டங்களில் பல இடங்களில் காணப் படுகிறது. இவ்வகைப் பாறைகள் ''ஒபியோலைட் ''என்று அழைக்கப் படுகின்றன.
இதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருளை சுரந்து கவசம் போல் பயன்படுத்துகின்றன.அந்த உயிரினங்கள் இறந்த பிறகு அந்த சுண்ணாம்புப் பொருட்கள் கடல் தரையில் தொடர்ந்து படிவதால் சுண்ணாம்புப் படிவுகள் உருவாகுகின்றன.
இதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து வாழும் பாசிகளும் சுண்ணாம்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.அந்த தாவரங்கள் இறக்கும் பொழுதும் அந்த சுண்ணாம்புப் பொருட்கள் கடல் தரையில் தொடர்ந்து படிவதால் சுண்ணாம்புப் படிவுகள் உருவாகுகின்றன.
இவ்வாறு ஆழமற்ற கடல் தரையில் படியும் சுண்ணாம்பு படுகைகள் இன்று கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுகின்றன.இதன் மூலம் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
சில சமயம் கடலுக்கு அடியில் உருவான சுண்ணாம்புப் படிவங்கள் மேல் மெக்னீசியம் அதிகம் உள்ள கடல் நீர் பாயும் பொழுது அந்த சுண்ணாம்புப் படுக்கையானது வேதி வினை மூலம் டோலமைட் என்று அழைக்கப் படும் ஒரு வகை சுண்ணாம்பாக மாறுகிறது.
இவ்வாறு உருவாகும் டோலமைட்டும் கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுகிறது.
இதே போன்று இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து வாழ்ந்த பாசிகள் உற்பத்தி செய்த ஆக்சிஜனானது கடல் நீரில் இருந்த இரும்புடன் வினை புரிந்து நீரில் கரையாத இரும்பு ஆக்சைடாக மாறி, கடல் தரையில் படிந்ததால் உருவான வரி அடுக்கு இரும்புப் படிவுகளும் கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுகிறது.
மேற்கண்ட பல ஆதாரங்களின் மூலம் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
000
இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது
இவ்வாறு கண்டங்களும், கடல் மட்டமும், மாறி மாறி உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
முக்கியமாக டைனோசர்களின் காலத்தில், பூமியானது சிறியதாக இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில், சூரிய ஒளியும் விழுந்து இருக்கிறது.
தற்பொழுது பூமியின் நடுப்பகுதி புடைத்துக் கொண்டு இருக்கிறது.ஆனால் துருவப் பகுதிகளில் தட்டையாக இருக்கிறது.ஆனால் பூமி உருவாகிய பொழுது, கோளமாக இருந்திருக்கிறது.பூமி விரிவடைந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குக்கிறேன்.
பூமியின் மையமானது ஒரு அடர்த்தியான வெண்ணெய்யால் ஆன கோளம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.அதனைச் சுற்றிலும் கிரீம் பிஸ்கெட்டில் அல்லது கேக்கில் இருக்கும் கிரீம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மேற்புறமானது பொருக்கு போன்ற பிஸ்கெட்டால் ஆனது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது மையக் கோளம் விரிவடைவடைந்தால் என்ன ஆகும்.அதனை சுற்றி இருக்கும் கிரீம் போன்ற பகுதி விரிவடையும்.அதனால் அதனை சுற்றி இருக்கும் மேற்புற பொருக்கு போன்ற பிஸ்கெட் பகுதியானது உடைந்து சிதறி பல பகுதிகளாக பிரிந்து,ஒன்றில் இருந்து ஒன்று விலகும்.இதனை கண்டங்களாக கற்பனை செய்து கொள்ளலாம்.அதற்கு அடுத்த அடுக்காக இருக்கும் கிரீமை, கடல் தளமாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படித்தான் நமது பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக மேற்பகுதி விரிவடையும் பொழுது, அதில் ஏற்படும் பிளவுகள் மற்றும் இங்கு இடுக்குகள் வழியாக, பூமிக்குள் இருந்து வெளிப் படும் பாறைக் குழம்பால் நிரப்பப் படும் பொழுது, மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பால், பாறை அடுக்குகள் உடையும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
மேலும் மேலும் பாறைக் குழம்பு உயரும் பொழுது, எரிமலையாக வெடித்து வெளியேறுகிறது. கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடிக்கும் பொழுது சுனாமி அலைகள் உருவாகுகிறது.
பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதால் விரிவடைகிறது.குளிரும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணையும் வெளியேறுகிறது.வெளியேறிய நீரால் கடல் உருவானது. வெளியேறிய வாயுக்களால் வளி மண்டலம் உருவானது.
இந்த நிலையில் தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த, டேனியல் ஃப்ரோஸ்ட் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், நில அதிர்ச்சி அலைகள், பூமிக்குள் பரவுவதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்தனர்,
அதன் அடிப்படையில் பூமியின் உட்கருக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர் பூமிக்குள் படிகங்கள் உருவாகுவதால் பூமியின் உட்கருக் கோளம் விரிவடைகிறதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இந்த விரிவானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும் இந்தோனேசியாவுக்கு அடியில் வேகமாகவும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
0000000000000000000000 00000000000000000000000
Comments