Delta report
Delta அடிப்படை ஆதாரம் இல்லாததா காரணத்தால், கண்டத் தட்டு நகர்ச்சி தியரியின் அடிப்படையில், தெற்காசிய சுனாமிக்கும், ஹைத்தி தீவில் ஏற்பட்ட சுனாமிக்கும், அமெரிக்காவின் முன்னனி புவியியல் ஆய்வு மையங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இந்த நிலையில், பூமிக்கு அடியில் ஏற்பட்ட, எரிமலை வெடிப்புகளால், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளும், ஹைத்தி தீவில், சுனாமியை உருவாக்கிய, நில அதிர்ச்சிகளும், ஏற்பட்டு இருப்பதைத் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களின் அடிப்படையில், நான் கண்டு பிடித்து இருக்கிறேன். - விஞ்ஞானி.க.பொன்முடி. நான் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்த தகவல்களை இணையத்தில் திரட்டி ஆய்வு செய்துகொண்டு இருக்கிறேன். இங்கேஅந்த தகவல்களை உங்களுக்குத் தெரிவித்து, உங்களிடம் ஒரு எளிமையான கேள்வியை முன்வைக்கிறேன். தற்பொழுது, உலகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில், கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கற்பிக்கப்படுகிறது. அவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் நகரும்பொழுது...