துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதைபடிவங்கள் நீண்டகாலப் புதிர் விடுவித்தல்.

Dots தற்பொழுது அறிவியல் உலகில் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு விடை காண இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டு இருந்த நிலையில், தற்பொழுது இறுதி கட்ட முயற்சியாக, தலை கீழாக நடந்து கொண்டு யோசிக்கத் தொடங்கி இருக்கின்றனர். கேள்வி - ஒன்று. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைபடிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்கு காரணம் என்ன? கேள்வி- இரண்டு. வெப்ப மண்டலக் கால நிலையில் காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான, துருவப் பகுதிகளில், காணப் படுவதற்கு காரணம் என்ன? 0000000000000000000000000000000000 பூமியானது தன் அட்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச் சுற்றிக் கொண்டு இருப்பதால், துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து பகலும், அதே போன்று, ஐந்து மதங்கள் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இந்த நிலையில் வட துருவப் பகுதியில் இருந்து எழுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹைபர்க் என்ற தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த பசுமைக் காடுகள் இருந்திருப்பதற்கு ஆதாரமாக,மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருந்த பல மரங்களின் அடிப்பகுதிகளை, ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். தாவரங்கள், மற்றும் பாசிகள் சூரிய ஒளி, நீர் மற்றும் கரியமில வாயுவை பயன் படுத்தி, பச்சையத்தின் (Chlorophyll) உதவியுடன் தம் வளர்ச்சிக்குத் தேவையான உணவை (குளுக்கோஸ்) தயாரித்து, ஆக்சிஜனை) வெளியிடும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வாகும். இது ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் செயல் முறை. ஆனால் பல மாதங்கள் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி, தாவரங்களால் தங்களின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையான சர்க்கரை சத்துப் பொருளை "ஒளிச்சேர்க்கை மூலம், தயாரிக்க இயலாது. எனவே துருவப்.பகுதிகளில், அடர்ந்த பசுமைக் காடுகள் வளர்ந்து இருக்க இயலாது. ஒரு வேளை, அந்த காலத்தில் எரிமலைகள் அதிக அளவில் சீறியதால், வளி மண்டலத்தில், கரிய மில.வாயுவின் அளவு அதிகரித்து, அதன் விளைவாக குளாபல் வார்மிங் ஏற்பட்டு, தாவரங்களுக்கு தேவையான வெப்பம் கிடைத்து இருக்கலாம் என்றாலும், ஒளிச் சேர்க்கைக்கு அவசியமான வெளிச்சம் எப்படி கிடைத்தது, என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பு குறித்து, லூசியானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, புவிவேதியல் மற்றும் புவி உயிரியல் வல்லுனரான, டாக்டர் ஹோப் ஜெகரன், நான்கு மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் ஆக்சல் ஹைபர்க் தீவில், செம்மரக் காடுகள் எப்படி வளர்ந்தன என்பது, மர்மமாக இருக்கிறது என்று வியப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த மரங்களை பார்க்கும் பொழுது, தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இப்பதைப் பார்ப்பது போல ஆச்சர்யமாக இருக்கிறது, என்றும் டாக்டர்,ஹோப்ஜெகரன் தெரிவித்து இருக்கிறார். எல்லிஸ் மெர் தீவு புதை படிவங்கள். குறிப்பாக பாலூட்டி விலங்கினங்கள், உணவை செரிப்பதன் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. அத்துடன் உடல் வெப்பத்தை பாதுகாக்க மயிர்த் தோலையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பாலூட்டிகளின் உடல் வெப்பமாக இருப்பதால், இரவிலும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க முடிகிறது. அத்துடன் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளிலும் பாலூட்டிகளால் வாழ முடிகிறது. . அதனால்தான் தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில் மான்கள், கரடிகள்,'நரிகள், முயல்கள், போன்ற பாலூட்டி விலங்கினங்களே காணப்படுகிறன. ஆனால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக்கூடிய, பாம்புகள் பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகளால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே ஊர்வன வகை விலங்கினங்கள் உடல் வெப்பத்தை உயர்த்திக் கொள்ள சூரிய வெளிச்சத்தில் உடலை காய வைக்கின்றன. அதனால் துருவப் பகுதிகளில் ஊர்வன வகை விலங்கினங்கள் வசிப்பதில்லை. மாறாக ஊர்வன வகை விலங்கினங்கள் அதிக வெப்பம் நிலவக் கூடிய பூமத்தி யரேகைப் பகுதியிலயே அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில், கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில், நாலரை முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, ராட்சத பாம்புகள், முதலைகள், பல்லிகள், மற்றும் கால பாகஸ் தீவுகளில் "இந்தத் தீவு களுக்கு இந்த விலங்குகள் எப்படி வந்தன" என்று டார்வின் பார்த்து வியந்த, ராட்சத தரை வாழ் ஆமைகள், போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்றும் ஆதிகாலக் குரங்குகள், டபிர் என்று அழைக்கப்படும் பன்றி போன்ற விலங்கினம், ஐந்து டன் எடையுள்ள நீர் யானை போன்ற "கோரி போடன்" என்ற விலங்கு மற்றும் காண்டாமிருகம் போன்ற "பிராண்டோ தீரி" ஆகிய பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கண்டு பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த, கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விலங்கியல் வல்லுனரான டாக்டர், ஜெயலின் எபெர்லி, ‘’எல்லிஸ் மெர் தீவில், ராட்சத தரை வாழ் ஆமைகளின் புதை படிவங்கள் காணப்படுவது குழப்பமாக இருக்கிறது’’ என்று தெரிவித்து இருக்கிறார். ஆர்க்டிக் பகுதி புதை படிவப் புதிர்களுக்கு விடை என்ன? கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, பனிரெண்டு இன. வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது. பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய அளவில் இருக்கும், டைனோசர்களின் முட்டைகளானது, பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை. ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த, டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய, ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க, ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது, கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில், டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, காடுகள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. டைனோசர்கள் எப்படி அழிந்தன? சில ஆராய்ச்சியாளர்கள்,ஆர்க்டிக் பகுதி டைனோசர்கள் ஒடிந்த கிளைகள் கொப்புகளை உண்டு, எப்படியோ தப்பித் பிழைத்து இருக்கும் என்று நம்பினாலும் இந்த விளக்கமானது ,டைனோசர்களின் அழிவுக்கு கூறப் பட்ட, விண்கல் மோதல் விளக்கத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல், ஒரு ராச்சத விண் கல் மோதியதாகவும், அதனால் எழுந்த புழுதியானது, பூமியெங்கும் பரவி, ஆறு மாத காலம் சூரியனையே மறைத்தாகாவும், அதனால் தாவர இனங்களே அழிந்ததாகவும், அதனால் டைனோசர் போன்று, அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய, விலங்கினங்கள் முற்றாக அழிந்ததாகவும், ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதனால் ஆர்க்டிக் பகுதியில். ஆறுமாத காலம் டைனோசர்கள் கொப்புகளையும் கிளைகளையும் உண்டு வாழ்ந்தால், விண் கல் மோதலின் போதும் அதே போன்று கொப்புகளையும் கிளைகளையும் உண்டு, டைனோசர்கள் உயிர் பிழைத்து இருக்க முடியுமே என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி ஆறு மாத காலம், சூரிய ஓளியின்றி வாழ்ந்தன, அடர்ந்த காடுகள் எப்படி உருவாகின, போன்ற கேள்விகளும் விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. 000000000000000000000000000000000000000000 கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, பனிரெண்டு இன. வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது. பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய அளவில் இருக்கும், டைனோசர்களின் முட்டைகளானது, பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை. ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த, டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய, ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க, ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது, கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில், டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, காடுகள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. டைனோசர்கள் எப்படி அழிந்தன? சில ஆராய்ச்சியாளர்கள்,ஆர்க்டிக் பகுதி டைனோசர்கள் ஒடிந்த கிளைகள் கொப்புகளை உண்டு, எப்படியோ தப்பித் பிழைத்து இருக்கும் என்று நம்பினாலும் இந்த விளக்கமானது ,டைனோசர்களின் அழிவுக்கு கூறப் பட்ட, விண்கல் மோதல் விளக்கத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல், ஒரு ராச்சத விண் கல் மோதியதாகவும், அதனால் எழுந்த புழுதியானது, பூமியெங்கும் பரவி, ஆறு மாத காலம் சூரியனையே மறைத்தாகாவும், அதனால் தாவர இனங்களே அழிந்ததாகவும், அதனால் டைனோசர் போன்று, அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய, விலங்கினங்கள் முற்றாக அழிந்ததாகவும், ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதனால் ஆர்க்டிக் பகுதியில். ஆறுமாத காலம் டைனோசர்கள் கொப்புகளையும் கிளைகளையும் உண்டு வாழ்ந்தால், விண் கல் மோதலின் போதும் அதே போன்று கொப்புகளையும் கிளைகளையும் உண்டு, டைனோசர்கள் உயிர் பிழைத்து இருக்க முடியுமே என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி ஆறு மாத காலம், சூரிய ஓளியின்றி வாழ்ந்தன, அடர்ந்த காடுகள் எப்படி உருவாகின, போன்ற கேள்விகளும் விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. 00000000000000000000000000000000000000 00000000 ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எழுதிய கட்டுரையை,டைம் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரையை அலாஸ்கா பல்கலைக் கழகம் தனது இணையப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது. அந்தத் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் . இந்த மரங்களானது நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையானது என்றாலும் கூட அந்த மரங்களானது கல்மரங்களாக மாறாமல் இருக்கிறது. அதற்கு அந்த மரங்கள் மண்ணால் திடீரென்று மூடப்பட்ட பிறகு ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த மரங்கள் முதலில் வளர்ந்தன? ஏனென்றால், ஆண்டுக்கு நான்கு மாத காலம் தெரடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய அவசியமான சூரிய வெளிச்சம் இல்லாத சூழலில் எப்படி இந்த மரங்கள் வளர்ந்தன என்பதுதான் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் அலாஸ்காவில்,ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் உட்பட ஆயிரக் கணக்கான மற்ற விலங்கினங்களும் அழிந்தன, அதற்கான காரணம் இது வரை, அறியப் பட வில்லை. அதே போன்று இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. ஆண்டில் பாதி காலம் இரவு நீடிக்கும் ஆர்க்டிக் பகுதியில், ஒருவேளை குளோபல் வார்மிங் காரணமாக வெப்பத்தை பெற்றாலும் கூட, எப்படி இந்த விலங்குகளும், தாவரங்களும், உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூரிய வெளிச்சத்தைப் பெற்றன. அதற்கு அந்த காலத்தில் அந்த நிலப் பகுதிகள் அதிக சூரியவெளிச்சம் விழக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு, துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து இருக்கலாம் என்று கூறப்படும் கண்டத்தட்டு நகர்ச்சி விளக்கம் இங்கே, அதிஉயர் ஆர்க்டிக் பகுதிக்கு பொருந்தாது. ஒருவேளை, பூமியின் அச்சு சாய்ந்ததால், ஆர்க்டிக் பகுதியில் அதிக வெளிச்சம் கிடைத்திருக்குமா? ஆனால் அதற்கு எந்த இயக்க செயல் பாடும் அறியப்பட வில்லை. எனவே நாம் தற்பொழுது, செய்யவேண்டிய தெல்லாம், முன் ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், ஒப்பீட்டளவில் வெப்பமான அடர்ந்த காடுகளில், டைனோசர்களும், மற்ற விலங்கினங்களும், இருளில் வாழ்ந்திருக்கிறது என்பதை நம்பியாக வேண்டும். எப்படி இந்த விலங்கினங்களும் தாவரங்களும் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்பது விடையளிக்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மம். -பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், ஆர்க்டிக் புதைபடிவப் புதிர்களுக்கு காரணம் என்ன? 0000000000000000000000000000000000000000000000 அறிவியல் உலகிற்கு இதுபோன்ற புதைபடிவப் பிரச்சனை ஒன்றும் புதிதல்ல. பதினாறாம் நூற்றாண்டு... ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலிக்கு வந்த வியாபாரிகள் லியோனார்டோ டா வின்சியை சந்தித்து வரும் வழியில் அவர்கள் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களைக் கண்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட டாவின்சி அப்படி என்றால் இந்த இடம் முன் ஒரு காலத்தில் கடலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். மற்ற படி கடல் மலையின் மேல் இருந்து தாழ்வடைந்ததா அல்லது மலை கடலுக்குள் இருந்து உயர்ந்ததா என்றெல்லாம் அவர் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அவர் காலத்தில் மிகவும் புதை படிவங்கள் குறித்த தகவல்கள் மிகவும் குறைவு. முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் தாவரங்களின் செல்களை ஆய்வு செய்த, விஞ்ஞானியான ராபர்ட் ஹூக், இங்கிலாந்தின் டோவர் பகுதியில் ராட்சத ஆமையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது "அப்படி என்றால் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அதிக வெப்ப நிலை இந்திருக்க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டு... பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் பல தனிமைத் தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களைக் கண்டு, குறிப்பாக தவளைகள் மண்புழுக்கள் மற்றும் நத்தைகள் எப்படி இந்த இந்தத் தனிமையான தீவுகளுக்கு வந்திருக்குமென்று வியந்தார். குறிப்பாக செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும் தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும் டார்வின் வியப்பு அடைந்தார். அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல தீவுகளுக்கு சென்று அங்கு இருக்கும் விலங்கினங்களைக் கண்டு எப்படி இந்த விலங்கினங்கள் இந்தத் தனிமைத் தீவுகளுக்கு வந்திருக்கக் கூடும் என்று வியப்பு தெரிவித்து இருக்கின்றனர். அதாவது டார்வினின் ஆராய்ச்சியானது இன்று வரை தொடர்கிறது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது போன்ற புதைபடிவப் புதிர்களுக்கு விளக்கம் கூறும் முயற்சிகள் சூடுபிடித்தது. இறுதியாக இந்தப் புதைபடிவப் புதிர் விளக்கப் போட்டியில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற காலநிலை ஆராய்ச்சியாளர் கூறிய விளக்கம், அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை, 1570 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சேர்ந்த ஆபிரஹாம் ஆர்டெல்லியஸ் என்ற ஆராய்ச்சியாளர் முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஓரப் பகுதிகளானது, ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று,ஒன்றுக் கொன்று இணையான வடிவத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தப் புதிரானது 'மேட்சிங் கோஸ்ட் லைன்' என்று அழைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்து இருக்க வேண்டும் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஆர்டெல்லியஸ் விளக்கம் கூறினார். இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று, ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்களானது படிப் படியாக, பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும், ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது. அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது. அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது, சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது, மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும், அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர், ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில், ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது பற்றி தெரிவிக்க பட்டு இருந்தது.இந்தப் புதிரானது ''ஐடென்டிகில் பாசில்ஸ்'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த, மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதற்கு, முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம், கடலின் மேல், ஒரு ''தற்காலிக நிலப் பாலம்'' இருந்து விலங்கினங்களின் போக்குவதத்துக்கு பயன் பட்டு இருக்கலாம் என்றும், பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. வெக்னருக்கு இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக கண்டங்களானது, 'இலேசான' கிரானைட் வகை பாறையால் ஆனது.கண்டங்களின் சராசரி தடிமனானது நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர். ஆனால் கடல் தளமானது அதிக 'கடினமான' நீரை உறிஞ்சாத கடப்பாக் கல்லால் ஆனது.கடல் தளத்தின் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர். அதன் அடிப்படையில்,வெக்னர்,கண்டங்களானது, 'இலேசான' கிரானைட் பாறையால் ஆகி இருந்தால், அந்த தற்காலிக நிலப் பாலமானது, அதிக 'கனமான' கடல் தரைக்கு அடியில் மூழ்கி இருக்க இயலாது. அவ்வாறு இன்றி, தற்காலிக நிலப் பலமானது, அதிக கனமான கடல் தளப் பாறையால் ஆகி இருந்தால், அந்த பாலமானது, கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்து இருக்க இயலாது, எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று வெக்னர் வாதிட்டார். ஆனாலும் புவியியலாளர்கள் ஒரு வேளை கடல் பகுதிக்கு சுனாமி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு தற்செயலாக பரவி இருக்கலாம் என்றும் நம்பினார்கள். இந்த நிலையில் ஆக்ரோஷமான கடலால் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களானது ஏற்கனவே இந்தியா, சீனா, ரஸ்யா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சைனோ நேதஸ் என்ற விலங்கின் .புதை படிவங்களும் அண்டார்க்டிகாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இந்த விலங்கின் பல்லானது நாயின் பல்லை போன்று இருப்பதால் சைனோ நேதஸ் என்று அழைக்கப் படுகிறது.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களும் தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. கண்டத்தில் ''லிஸ்டரோ சாரஸ் '' என்று அழைக்கப் படும் மெதுவாக நடக்கும் ஒரு மந்தமான மூதாதை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்களானது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. இந்த விலங்குக்கு பற்களுக்குப் பதிலாக யானையை போன்று தந்தங்கள் மட்டுமே உண்டு.அதன் அடிப்படையில் இந்த விலக்கானது தரைக்கு அடியில் இருக்கும் கிழங்கு மற்றும் வேர்களை தோண்டி எடுத்து உண்ணும் வாழ்க்கை முறையை கொண்டிருக்கும் என்று லிஸ்டரோ சாரஸ் போன்ற ஒரு 'மந்தமான விலங்கால்' கடலில் பல நாட்கள் மரக் கிளைகள் மேல் இருந்தபடி கடலில் தத்தளித்தபடி ஆக்ரோஷமான கடல் பகுதியைக் கடந்து அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது. எனவே புவியியலாளர்கள் வெக்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய சைகேட் மற்றும் பெரணி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். நகரும் கண்டங்கள் விளக்கம் அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார். அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதேபோன்று, கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது,வடமேற்கு திசையில் நகர்ந்து, மூண்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்,வட கமெரிக்கக் கண்டத்துடன் மோதியதால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் விலங்குகளின் இடப் பெயர்வு நடைபெற்றதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வானது,"தி கிரேட் அமெரிக்கன் இன்டர்சேஞ்" என்று அழைக்கப்படுகிறது. அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் தரை, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. 00000000000000000 000000000000000000000000000000 00000000000000000000000 நகரும் கண்டங்கள் கருத்து, கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக மாற்றப் பட்டது ஏன்? முக்கியமாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபொழுது அமெரிக்க நாட்டின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்துக்கு பயன் படும் வண்ணம் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்கள், மலைகள், பள்ளத் தாக்குகள் பற்றிய விபரங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில், பூமியின் வடதுருவம் தொடங்கி தென் துருவத்தில் அண்டார்க்டிக்காக் கண்டம் வரைக்கும், பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருப்பதுடன், அப்பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும், நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது கண்டு பிடிக்கப் பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,இது போன்ற கடலடி எரிமலைத் தொடர்கள் கண்டங்களைச் சுற்றிலும் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில், கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் சென்று,வெப்பத்தால் மறுபடியும் பாறைக் குழம்பாக மாறி, கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொண்டு உயர்ந்து எரிமலைகளாக உருவாகுவதாக ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதே போன்று இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியிலும் கடல்தளம் சென்று பாறைக்கு குழம்பாக மாறி கடல் தளத்துக்கு மேலேயும், தீவுகளுக்கு மேலேயும், எரிமலைகளாக உருவாகுவதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. நில அதிர்ச்சிகள் சுனாமிகளும் கண்டத் தட்டு நகர்ச்சியே காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இவ்வாறு கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் செல்லும் கடல்தளமானது, பூமிக்குள் இருக்கும் வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி, மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தையும், நிலப் பகுதிகளையும் பொத்துக் கொண்டு,மேல் நோக்கி உயர்ந்து, எரிமலைகளாக உருவாகுவதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். 00000000000000000000000000000000000000 ஆனால் துருவப்பகுதிகளில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, குறிப்பாக ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான காடுககளின் புதைபடிவங்கள் காணப் படுவதற்கும், அதே போன்று ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதைபடிவங்கள், காணப் படுவதற்கும், கண்டத்தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை. எனவே 'புதை படிவப் புதிர்களுக்கு டாக்டர் ஆல்பிரட் வெக்னர் கூறிய விளக்கம் சரியா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைபடிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதே போன்று, வெப்ப மண்டலக் கால நிலையில் காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான, துருவப் பகுதிகளில், காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் விடையளிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. 00000000000000000000000000000000000000 ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தும் அண்டார்க்டிக் கண்டத்தின் புதைபடிவங்கள். கடந்த 2017 ஆண்டு, மில்வாக்கி-விஸ்கான்சிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் சூழலியல் வல்லுனரான டாக்டர். எரிக் குல்பிரான்சன் குழுவினர் அண்டார்க்டிக் கண்டத்தில் புதை படிவ ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது டிரான்ஸ் அண்டார்க்டிக் மலைப் பகுதியில். மண்ணுக்கு அடியில் பாதி புதையுண்ட நிலையில் பதின்மூன்று மரங்களின் அடிப்பகுதி கல்லாக மாறி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த மரங்களானது, இருபத்தி ஆறு முதல் இருபத்தி எட்டு கோடி ஆண்டுகள் தொன்மையானது என்று தெரியவந்துள்ளது. புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்ட இடமானது, தென் துருவப் பகுதியில் இருந்து, நானூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு ஒற்றைப் பெருங்கண்டமாக இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்ட மானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்ததாக நம்பப் படுகிறது. எனவே எப்படி நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் சூழலில், காடுகள் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு டாக்டர் குல் பிரான்சன், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் குளிர் காலத்தை எப்படியோ சமாளித்து இந்தக் காடுகள் வளர்ந்து இருக்கின்றன, ஆனால் அதுபற்றி நாங்கள் இன்னமும் முழுதாகப் புரிந்து கொள்ள இயல வில்லை,என்று தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பாஞ்சியா கருத்தின்படி, பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சியா சூப்பர் கண்டமானது, பூமத்திய ரேகைப் பகுதியில் பிளவு படத் தொடங்கியது. அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கியும் அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென்பகுதியை நோக்கியும் நகர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அத்துடன் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பிரிந்து வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்டமானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, தென்துருவப் பகுதியிலேயே இருக்கிறது. இந்தநிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, முதன் முதலில் தாவரங்கள் நீரில் இருந்து நிலத்திற்கு வந்து வாழத்bதொடங்கியதில் இருந்து, அதாவது நாற்பதுகோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைபடிவங்கள் முதல், கடந்த ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் புதைபடிவங்கள் வரை அண்டார்க்டிக் கண்டத்தில் காணப்படுகிறது. அதாவது பூமியில், தாவரங்களின் மொத்த பரிணாம வளர்ச்சியே அண்டர்க்டிக் கண்டத்தில் புதைபடிவங்களாகக் காணப்படுகிறது என்று டாக்டர் எரிக் குல்பிரான்சன் தெரிவித்து இருக்கிறார். முதலிள் அண்டார்க்டிக் கண்டத்தில் சில தாவர மற்றும் விலங்கின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்களும் விலங்குகளும், அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும் குளிர் கால இரவுக்bகாலத்தை சமாளித்து வாழ்வதற்கு, சில சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் பல நூறு தாவர இனங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று நூற்றுக்கும் அதிகமான விலங்கினங்களின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அண்டர்க்டிக் கண்டத்தில் ஆரம்பத்தில் சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில், பூமியில் ஏற்பட்ட அதிக அளவிலான எரிமலைச் சீற்றங்களால், பூமியின் வெப்ப நிலை உயர்வால், அண்டார்க்டிக் கண்டத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் மூலம், கடந்த பத்து கோடி ஆண்டுகாலமாகவே அதிக வெப்ப நிலையும் சூரிய வெளிச்சமும் இருத்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற வெப்பமான கடல் தரைப் பகுதியில் வாழ்ந்த"டிரைலோபைட்" என்று அழைக்கப்படும் கடல் பூச்சியின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று இருபத்தி ஐந்து கோடி கண்டு களுக்கு முன்பு, அதாவது பெர்மியன் காலத்தில் வாழ்ந்த லிஸ்ட்ரோ சாரஸ், சைனோ நேதஸ், போன்ற ஆதிகால பாலூட்டிகளின் புதை படிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. முக்கியமாக டைனோசர் இனமானது பூமியில் இருபத்தி மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டிரையாசிக் என்று அழைக்கப்படும் காலத்தில் சிறிய ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து தோன்றியது. இந்த நிலையில் டிரையாசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்கள் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டு இருக்கின்றன.அதே போன்று டிரையாசிக் காலத்திற்கு அடுத்து வந்த ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று ஜுராசிக் காலத்திற்கு அடுத்து வந்த கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக டைனோசர் இனமானது பூமியில் பதினாறு கோடி ஆண்டுகள் வாழ்ந்து இருக்கின்றன. இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் "சாரோ போட்" என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. தாவர உண்ணி வகையான ‘சாரோ போட்’ டைனோசரின் புதைபடிவங்களானது ஏற்கனவே ஏழு கண்டங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் டைனோசர் காலத்தில் பூமியெங்கும் ஏறக்குறைய ஒரே விதமான காலநிலை இருந்திருக்கலாம் என்றும்vஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டின் ஆல்பிரட் வெக்னர் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் கிளேக் அண்டார்க்டிக் கண்டத்தின் கடற் கரைப் பகுதியில்,கடல் தரைக்கு அடியில் நூறு அடி ஆழம் வரைக்கும் துளையிட்டு படிவுகளை சேகரித்து, அதனை சி.டி.ஸ்கேன் முறையில் ஆய்வு செய்தனர். அப்பொழுது, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான அந்த படிவுகளில் தாவரங்களின் வேர்கள், மற்றும் மகரந்தத் துகள்களின் புதைபடிவங்கள் இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில். அடர்ந்த பகமைக் காடுகள் இருந்ததாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த புதைபடிவங்கள் எடுக்கப்பட்ட இடமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்துருவப் பகுதியிலேயே இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த படிவுகளில் முன்னூற்றி அறுபதுக்கும் அதிகமான தாவர இனங்கள் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் ஏன் குளிர்ச்சி ஏற்பட்டு, பனிப்படலங்கள் உருவானது என்ற கேள்விக்கு விடை காண தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் நாங்கள் செய்து பார்த்த "பல கால நிலை மாதிரி ஆய்வில்" திருப்திகரமான விளக்கம் கிடைக்க வில்லை என்று அந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜெரிட் லோக்மன் தெரிவித்து இருக்கிறார். அண்டார்க்டிக் கண்டத்தில், அல்லிப்பூக் குளத்தில் வாழ்ந்த தவளைகள். ஸ்வீடன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர்,தாமஸ் மோர்ஸ் குழுவினர், அண்டார்க்டிக் கண்டத்தில் மேற்கொண்ட ஆய்வில், அண்டார்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, தவளையின் புதைபடிவங்களைக் கண்டு பிடித்தனர். அத்துடன் அந்த புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் அல்லிப் பூக்களின் புதைபடிவங்களையும் கண்டுபிடித்தனர். முக்கியமாக அந்த தவளையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் "ஹெல்மெட் தலை" தவளை இனத்தைச் சேர்ந்தது என்பதையும் கண்டு பிடித்து இருக்கின்றனர்., அதன் அடிப்படையில் அண்டர்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மிதமான காலநிலை இருந்ததாகவும், அதே போன்று தென் அமெரிக்காக் கண்டத்திற்கும்,அண்டர்க்டிக் கண்டத்திற்கும் இடையே நிலத் தொடர்பு இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். 0000000000000000000000000000000000000 ஆனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்களின் ஒர பகுதிகள் கட்சிதமாகப் பொருந்த வில்லை. ஆனால் முப்பது சதவீத சிறிய குளோப்பில் கண்டங்களின் ஒரப் பகுதிகள் நன்றாகப் பொருந்தின.அதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஹோபார்ட் முதலில் நகரும் கண்டங்கள் கருத்தை ஆதரித்தார்.பிறகு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து குறித்து ஆராய்ச்சி செய்த பொழுது, ‘விரிவடையும் பூமி’ கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாமுவேல் வாரேன் காரி என்ற புவியியல் பேராசிரியர் முதலில் வெக்னரின் நகரும் கண்டங்கள் கொள்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.பின்னர் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கு ஆதரவாக இருந்தார்.ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அழிகிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார். அதன் பிறகு விரிவடையும் பூமி குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் ஏன் விரிவடைகிறது என்று அவர் தெரிவிக்க வில்லை.ஆனால் பிற்காலத்தில் ஒரு கண்டு பிடிப்பு விரிவடையும் பூமி கருத்திற்கு ஆதரவாக அமையும் என்று கூறினார். 000000000000000000000000000000000000000000000000 ஆக, வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடுங்.குளிர் நிலவும், துருவப் பனிப் பிரதேசங்களில், பூமியின் அட்சுச் சாய்வால், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் நிலையில்,ஒளிச் சேர்க்கை செய்யாமல் தாவரங்கள், காடுகளாக எப்படி வளர்ந்தன, விலங்கினங்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விகள், விடை காணப் பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. 00000000000000000000000000000000000000000 துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதைபடிவங்கள் நீண்டகாலப் புதிர் விடுவிக்கப் படுகிறது. நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில், டைனாசரின் புதைபடிவங்கள் கண்டு பிடிப்பு. நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், ஐரோப்பாக் கண்டத்தில், இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பரவலாக வாழ்ந்த, தாவர உண்னி வகை டைனோசரான, ‘’பிளேட்டியோ சாரஸ்’’ என்று அழைக்கப் படும் பனை மர உயர. டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், கெர்கூலியன் தீவு எப்பொழுது உருவானது, என்று அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர்,கெர்கூலியன் தீவு அமைந்து இருக்கும் கடலடிப் பீடபூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளைச் சேகரித்து அதன் தொன்மையை ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகள் ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது. அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அந்தக் குழுவினர் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் டாக்டர் மைக்கேல் காபின், தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு தரையின் மேல் காணப்படக் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதைபடிவங்களானது, கடலுக்கு அடியில் காணப்படுவதன் மூலம், டைனோசர்கள் காலத்தில் கடல்மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது நி௹பணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடலானது பூமிக்குள் இருந்து வந்திருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இதேபோன்று, கண்டங்களின் மேலும் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதாரப்பூர்வமாக நி௹ பணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கண்டங்களும், கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது, விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. டைனோசர்கள் காலத்தில், கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்தபொழுது, கண்டங்களுக்கு இடையில், காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்கள் இடப் பெயர்ச்சி நடை பெற்று மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவி இருக்கின்றன. அத்துடன் டைனோசர் காலத்தில் பூமியின் அளவரானது சிறியதாக இருந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. டைனோசர் காலத்தில் பூமியன் அளவானது சிறியதாக இருந்த காரணத்தால்,நில நடுக் கோட்டை ஒட்டி சஞ்சரிக்கும் சூரியனின் கதிர்கள் பூமியின் துருவப் பகுதிகளில் அதிக அளவில் விழுந்திருக்கிறது. அதே போன்று. டைனாசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, குறைவாக இருந்தால். கடலின் பரப்பளவும் குறைவாக இருந்தால், வளிமண்டலத்தின் வெப்ப நிலையானது, அதிகமாக இருந்ததால், பூமியின் துருவப் பகுதிகளில் அதிக அளவில் வெப்பமும் கிடைத்திருக்கிறது. அதனால் டைனோசரர்கள் காலத்தில் துருருவப் பகுதிகளில் டைனோசர்கள் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் வளர்ந்து இருக்கின்றன. அதன்பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளிமண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால், பூமியின் அளவும் அதிகரித்ததால், துருவப் பகுதிகளில் விழுந்த சூரிய வெளிச்சத்தின் அளவும் குறைந்ததால், துருவப் பகுதிகளில் குளிர்ச்சி அதிகரித்ததால், காடுகளும் டைனோசர்களும் அழிந்தன. இதுபோன்று தொடர்ந்து நடந்ததால், பூமியின் குளிர்ச்சி அதிகரித்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களும் உருவாகியது. அதனால் துருவப் பகுதிகளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலுட்டி வகை விலங்கினங்களும்,ஊர்வன வகை விலங்கினங்களும் அழிந்தன. அதன் பிறகும் , பூமியின் குளிர்ச்சி அதிகரித்ததால் பனி யானை இனமும் அழிந்தன. பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. மடகாஸ்கர் தீவு புதை படிவப் புதிர்கள். மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட, குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள், நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன், கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று, குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்கலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால், மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து, இனப் பெருக்கம் செய்து, அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள், வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த, ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து, பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள், கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும், நீர் யானைகள், இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும், என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம், தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால், அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த, பெரிய நீர் யானை, தீவுக்கு வந்த பிறகு, தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால், குள்ள வகை நீர் யானையான தகவமைப்பு மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே, மடகாஸ்கர் தீவில் காணப் படும், நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும், கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும், குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள், ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஐந்து தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம், நில மட்டத்தை விட, கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். ஆம், பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக மத்திய தரைக் கடல் பகுதியில், ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருப்பதும் கூட, கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பற்கு சிறந்த ஆதாரம் ஆகும். மடகாஸ்கர் தீவுக்கு சைவ முதலை எப்படி வந்தது? கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. மூன்று அடி நீளமுள்ள, அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது. எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது. ஏற்கனவே சீமோ சூக்கஸ் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை. 000000000000000000000 00000000000000000000000000000000000000000000

Comments

Popular posts from this blog

fossils study

Abcd report

tsunami science