பத்திரிக்கை செய்தி வெளியீடு.
பத்திரிக்கை செய்தி வெளியீடு. விடுநர் விஞ்ஞானி க.பொன்முடி, சென்னை பெறுனர் ஆசிரியர், நாளிதழ்,வார இதழ்,தொலைக் காட்சி. சென்னை. வணக்கம்! பொருள்- எரிந்து முடிந்த நட்சத்திரதின் மையத்தில் கிரகம் உருவாகுகிறது என்பதை நான் உலகுக்குத் தெரிவித்த பிறகு,அதே விளக்கத்தை ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்தது தொடர்பாக. நான், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் பூமியின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்த தகவல்களின் அடிப்படையில்,ஆய்வு செய்து கொண்டு இருக்கிறேன். எனது ஆய்வில்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மையத்தில் கிரகங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அது குறித்த தகவலை, நான், 2007 ஆம் ஆண்டு,விகடன் பிரசுரம் வெளியிட்ட’எனது ‘பூமிப் பந்தின் புதிர்கள்’’புத்தகத்திலும்,2009 ஆம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் ஒரு விஞ்ஞானிக்கும்,தெரிவித்தேன். 2010 ஆம் ஆண்டு இணையத்திலும் பதிவு செய்தேன்,அந்தப் பதிவானது,கூகிள் பட்டியலிலும் காணக் கிடைக்கிறது. இந்த நிலையில்,கிரகங்களின் தோற்றம் குறித்து நான் கூறிய விளக்கத்தையே,ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள்,ஊடகங்களுக்குத் தங்களின் விளக்கமாகத் தெரிவித்...