டைனோசர்களை அழித்த திடீர் கால நிலை மாற்றம்.பகுதி மூன்று
ஹெயின்ரிச் நிகழ்வுகள்.





டைட்டானிக் கப்பலை உடைத்து மூழ்கடித்த மலை போன்ற பனிப் பாறைகள், அட்லாண்டிக் கடலில் குறிப்பிட்ட சில காலங்களில், குறிப்பிட்ட வழியில் அதிக அளவில் மிதந்து செல்கின்றன.
நிலத்தின் மேல் இருந்து உடைந்ததால் உருவான அந்தப் பனிப் பாளங்களானது, கடலில் மிதந்து செல்லும் பொழுது உருகத் தொடங்குகின்றன.
அப்பொழுது அந்தப் பனிப் பாறைகளில் ஒட்டிக் கொண்டு இருக்கும் கற்கள், கடலுக்கு அடியில் சென்று படிகின்றன.
இதே போன்று வெவ்வேறு கால கட்டத்தில் மிதாந்து செல்லும் கற்கள் வெவ்வேறு கால கட்டத்தில் படிகின்றன.
அவ்வாறு படிய வைக்கப் பட்ட கற்களானது பல அடுக்குகளில் வெவ்வேறு ஆழத்தில் காணப் படும்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் டாக்டர் ஹார்மட் ஹெயின்ரிச் என்ற புவியியல் வல்லுநர் கடலடித் தரையில் படிந்து கிடந்த கற்களின் படிவங்கள், ஆறு அடுக்குகளில் இருப்பதைக் கண்டார்.
அதன் அடிப்படையில் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் ஆறு முறை வெப்ப நிலை உயர்ந்ததால் பனியடுக்குகளானது உடைந்து கடலில் மிதந்து வந்திருப்பது தெரிய வந்தது.
இந்த வெப்ப உயர்வு மற்றும் தாழ்வு நிகழ்வானது ஹெயின்ரிச் நிகழ்வு என்று அழைக்கப் படுகிறது.ஆறு ஹெயின்ரிச் நிகழ்வுகளும் முறையே ஹெச் 1, ஹெச் 2,... ஹெச் 6, என்று அழைக்கப் படுகிறது.
ஹெயின்ரிச் நிகழ்வானது திடீரென்று வெப்ப நிலை உயர்ந்த பிறகு பல நூறு ஆண்டுகளாக நீண்ட உறை பனிக் காலமாக வரையறை செய்யப் பட்டுள்ளது.அத்துடன் ஹெயின்ரிச் நிகழ்வானது 7000-10,000 ஆண்டு கால சுழற்சியில் ஏற்படுவதாக நம்பப் படுகிறது.
சில புவியியல் வல்லுனர்கள் 14,000 ஆண்டிற்கு முன்பு ஏற்பட்ட ஹெயின்ரிச் 1 நிகழ்வை யங்கர் ட்ரையாஸ் நிகழ்வு எனக் கருதுகின்றனர்.




டான்காஸ்டர் - ஈஸ்கர் நிகழ்வு
pcl3.jpg
இதே போன்று டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தொல் கால நிலை இயல் வல்லுநர்,வில்லி டான்காஸ்டர் மற்றும் ஹான்ஸ் ஈஸ்கர் ஆகியோர் ,கிரீன்லாந்து தீவில் இருந்து எடுக்கப் பட்ட பனிப் படிவுகளை ஆய்வு செய்தனர்.அப்பொழுது எதிர்பார்த்ததை விட அடிக்கடி கால நிலை மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அறிந்தனர்.
குறிப்பாக கிரீன்லாந்து தீவின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட பனிப் படிவுகளில் ஆக்சிஜன் 16 ஐக் காட்டிலும் ஆக்சிஜன் 18 மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
அதன் காரணம் குறித்து ஆராயப் பட்டது.
ஆக்சிஜன் 18 ஐக் காட்டிலும், ஆக்சிஜன் 16 எடை குறைவு என்பதால், கடல் நீர் ஆவியாகும் பொழுது , அதிக கனமான ஆக்சிஜன் 18 ஐக் காட்டிலும் இலேசான ஆக்சிஜன் 16 அதிக அளவில் ஆவியாகிச் செல்கிறது.

இந்த நிலையில் மழை மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் பொழுது ஆக்சிஜன் 18 ஆனது, அதிக எடையின் காரணமாக விரைவிலேயே நிலத்தில் வீழ்கிறது.ஆனால் ஆக்சிஜன் 16 இலேசாக இருப்பதன் காரணமாக நெடுந்தொலைவு மேகத்தால் கொண்டு செல்லப் பட்டு தீவின் மத்தியப் பகுதியில் மழையுடன் பொழிகிறது.
இதன் காரணமாக கிரீன்லாந்து மத்தியப் பகுதியில் காணப் படும் பனிப் படிவில் ஆக்சிஜன் 16 ஐ விட ஆக்சிஜன் 18 குறைவாக காணப் படுகிறது.
அதாவது ஆக்சிஜன் 16 மற்றும் ஆக்சிஜன் 18 கக்கு இடையிலான விகிதாச் சாரம் மாறு பட்டு இருந்தது.
இதே போன்ற விகிதாச் சார வேறுபாடு சாதாரண காலத்திலும் பனிப் படலங்கள் உருவான காலத்திலும் காணப் பட்டது.
இதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் கிரீன்லாந்து தீவில் எதிர்பார்த்ததை விட அடிக்கடி கால நிலை மாற்றம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.



சில ஹெயின்ரிச் நிகழ்வுகளானது டான்காஸ்டர்-ஈஸ்கர் நிகழ்வுக்கு முத்தின வெப்ப காலத் தொடக்கமாகவும் சில புவியியல் வல்லுர்களால் கருதப் படுகிறது.
அதே போன்று டான்காஸ்டர்-ஈஸ்கர் திடீர் கால நிலை மாற்றத்தின் பொழுது ஏற்பட்ட வெப்பக் குறைவுக் காலமானது சின்னப் பனிக் காலம் என்றும் சில புவியியல் வல்லுர்களால் அழைக்கப் படுகிறது.

ஹெயின்ரிச் நிகழ்வைப் போலவே பனிப் பாறைகளால் படிய வைக்கப் பட்ட கற்படிவங்கள் ,470 ± 500 ஆண்டுகள் இடைவெளியில் ஏற்பட்டு இருப்பது குறித்து கொலம்பியா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெரால்ட் கிளார்க் பாண்ட் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார்.அந்த நிகழ்வானது பாண்ட் நிகழ்வு என்று அழைக்கப் படுகிறது.
----
பாண்ட் அவர்களின் பார்வையில் கடைசிப் பனிக் காலத்தில் நிகழ்ந்த டான்காஸ்டர் - ஈஸ்கர் நிகழ்வானது ,சின்னப் பனிக் காலம் மற்றும் 8,200 ஆண்டு நிகழ்வுகளைப் போலவே ,1500 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.
----


ஐரோப்பாக் கண்டத்தில் கிபி 1350 ஆம் ஆண்டு தொடங்கி கிபி 1850 ஆம் ஆண்டு வரையிலான ஐநூறு ஆண்டு காலத்தில் திடீரென்று பனிப் படலங்கள் உருவாகியது.
அந்தக் கால கட்டத்தில் இருபத்தி மூன்று முறை தேம்ஸ் நதி உறைந்தது.உறைந்த தேம்ஸ் நதியின் மேல் மக்கள் நடந்தார்கள் பனியில் சறுக்கி விளையாடினார்கள்,கேக் கடைகள் திறக்கப் பட்டு பனித் திருவிழாவும் நடந்தது.இது குறித்த ஓவியங்கள் லண்டன் அருங் காட்சியகத்தில் இன்றும் இருக்கிறது.

1816 ஆம் ஆண்டு கோடைக் காலமே வர வில்லை.அதனால் விவசாயம் உள்பட தொழில்கள் பாதிக்கப் பட்டது.பஞ்சம் தலை விரித்தாடியது.சமூகத்தில் அமைதி குலைந்தது.தொற்று நோய்கள் பரவியது.லட்சக் கணக்கானோர் மடிந்தனர்.









http://www.redorbit.com/news/space/1112937459/younger-dryas-asteroid-wiped-out-large-mammals-090313/
இது போன்று திடீரென்று ஏற்படும் பனிக் காலங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு சரியான விளக்கம் கூறப் படவில்லை.அதனால் இது போன்ற பனிக் காலங்கள் எப்பொழுது ஏற்படும் என்று முன் கூட்டியே கணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அமெரிக்காவை மிரட்டிய பனிப் பொழிவால் நயாகரா நீர் வீழ்ச்சியே உறைந்து சிலையாக நின்றது.ஆறாயிரம் விமானங்கள் நிறுத்தப் பட்டது.கல்வி மற்றும் தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்கள் மூடப் பட்டது பில்லியன் கணக்கில் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீராவி குளிர்வதால் உருவாகும் நீர் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
கடல் மட்டம் உயரும் பொழுது கடலின் பரப்பளவும் அதிகரிப்பதால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு பூமியின் வெப்ப நிலை குறைவதால் கடும் பனிப் பொழிவுகள் ஏற்படுகின்றன.
ஆனால் தற்பொழுது கடல் மட்டம் உயர்வதற்கு பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று தவறாக நம்பப் படுகிறது.
இது குறித்த விழிப்புணர்வு ஏற்படும் பொழுதே இது போன்ற இயற்கை நிகழ்வுகளை முன் கூட்டியே அறிய இயலும்.

தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் காலம் ஹோலோசீன் என்று அழைக்கப் படுகிறது.இந்தக் காலத்தில் திடீரென்று ஏற்பட்ட கால நிலை மாற்றதுக்குக் காரணம் தெரிய வில்லை என்று கிரிபித் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜீன் பாலுடிக்காப் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.






12.000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட யங்கர் ட்ரையாஸ் பனிப் பொழிவுக்குப் பனிப் படலமாக இருந்த அகாசி ஏரி உடைந்ததால் கடலில் விழுந்த பனிப் பாளங்கள் வெப்பக் கடல் நீரோட்டத்தை தடுத்ததால் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறி இருந்தார்கள்.
ஆனால் அந்த ஏரி உடைந்தாலும் அதில் இருந்த பனிப் படலங்கள் எந்த வழியாக வெளியேறி கடலில் கலந்தது என்ற கேள்விக்குப் புவியியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.புவியியல் அமைப்புப் படி அந்த விளக்கம் சாத்தியம் இல்லை என்று புவியியல் வல்லுனர்கள் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யங்கர் ட்ரையாஸ் போலவே ஒரு வெப்பக் குறைவுக் காலம் ஏற்பட்டு இருப்பதும் பனிப்படலத்தில் இருந்த ஆக்சிஜன் ஐசோடோப்புகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அந்த நிகழ்வானது ஆகாசி ஏரி நீர் ஆவியானதால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சின்சினாட்டி பல் களைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் தாமஸ் லோவல் நம்புகிறார்.



இந்த நிலையில் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ரிச்சர்ட் பேர்பேங்க் மற்றும் எட்வர்ட் பார்ட் ஆகியோர் தகித்தி மற்றும் பார்படோஸ் ஆகிய தீவுகளுக்கு அருகில் வெவ்வேறு ஆழத்தில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறை உயிரினங்களின் புதை படிவங்களைச் சேகரித்து அவற்றின் தொண்மையை மதிப்பிட்டு அந்த உயிரினங்கள் எப்பொழுது கடல் மட்ட உயர்வால் இறந்தன என்று மதிப்பிட்டனர்.
அதன் அடிப்படையில் ஏறக் குறைய 14500,11500,மற்றும் 8000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது வேகமாக உயர்ந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக 14500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் டென்மார்க் நாட்டில் போலிங் எரிப பகுதியில் வளர்ந்த வெப்ப மண்டலத் தாவரங்களின் புதைபடிவங்களின் அடிப்படையில் அந்தக் காலத்தில் வெப்பமான கால நிலை நிலவியதாக நம்பப் படுகிறது.அந்தக் காலமானது போலிங் வெப்பக் காலம் என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில் 14500, ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமும் உயர்ந்திருப்பது பவளப் பாறை உயிரினங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்திருப்பதால் ,கடல் மட்டம் உயர்நததற்கு ,அதிக வெப்ப நிலையால் வட அமெரிக்கக் கண்டத்தின் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததே காரணம் என்று எட்வர்ட் பார்ட் தலைமையிலான புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இதே போன்று 8000 ஆண்டுகளுக்கு முன்பும் கடல் மட்டம் உயர்ந்திருப்பதாகப் பவளப் பாறை உயிரினங்களின் புதை படிவங்களின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.ஆனால் 8000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனிப் படலங்களுடன் பனிக் காலச் சூழல் நிலவியிருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பனிக் காலத்திலும் கடல் மட்டம் உயர்ந்திருப்பது தெரிகிறது.எனவே கடல் மட்டம் உயர்ந்ததாலேயே பூமியின் வெப்ப நிலை குறைந்து பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.அதே போன்று கோடை காலத்திலும் பூமிக்குள் இருந்து சுரந்த சுடு நீர் ஊற்று நீர் கடலில் கலந்ததால் கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது.கடல் மட்ட உயர்ந்தாலும் கடலின் பரப்பளவு அதிகரித்ததாலும் வெப்ப நிலை குறைந்து அதன் காரணமாகப் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.
Comments