இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.

தற்பொழுது உயிர் வாழும் பெரிய விலங்குகளில் யானை மற்றும் காண்டா மிருகங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய விலங்காக நீர் யானைகள் இருக்கின்றன.
சராசரியாக 1300 கிலோ முதல் 1500 கிலோ எடையுள்ள நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் மிதக்கவோ நீந்தவோ இயலாது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் சிசிலி,கிரிட்டி,மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


இந்த விலங்கினம் எப்படி அந்தத் தீவுகளுக்குச் சென்றன என்று விஞ்ஞானிகளுக்குத் தெரிய வில்லை.
மத்திய தரைக் கடல் தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனமானது ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து தோன்றி இருப்பதாக நம்பப் படுகிறது.
கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிய படி, நீர் யானைகள் மத்திய தரைக் கடல் தீவுகளைத் தற்செயலாக அடைந்த பிறகு ,தீவுகளில் குறைந்த அளவே உணவு கிடைத்ததால், புதிய சூழலுக்கு ஏற்பக் குள்ள வகை நீர் யானை இனமாக மாறி விட்டதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி, தீவிற்கு சென்ற நீர் யானைகள் பல எண்ணிக்கையில் பெருகி இருக்க வேண்டும் என்றால், அதற்குக் குறைந்த பட்சம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய அளவுக்கு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு நீர் யானைகள் சென்று இருக்க வேண்டும்.
அல்லது குறைந்த பட்சம் ஒரு கர்ப்பிணி நீர் யானையாவது அந்தத் தீவுகளை அடைந்து இருக்க வேண்டும்.

ஆனால் நீர் யானையானது பெரிய வகைப் பாலூட்டிகளான யானை மற்றும் திமிங்கிலங்களைப் போன்று கே முறையில் இனப் பெருக்கம் செய்கின்றன.
அதாவது எலி ,முயல் போன்ற சிறிய அளவுள்ள பாலூட்டிகளைப் போன்று, சிறிய அளவுள்ள பல குட்டிகளை ஈணுவதற்குப் பதிலாகப் பெரிய அளவுடன் ஒரே ஒரு குட்டிகளை ஈணுகின்றன.
ஆனால் நீர் யானைகள் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈணுவதும் அறியப் பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொரு தீவுக்கும் மரங்களில் தொற்றிய படி தற்செயலாகச் சென்ற நீர் யானைகள், வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளைப் போட்டு இனப் பெருக்கம் நடந்து இருக்கும் என்பது அசாத்தியமானது.
எனவே மத்திய தரைக் கடல் தீவுகளான சிசிலி,கிரிட்டி,மால்டா,மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாகக் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.


இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ஹிப்போபொடமஸ் லெமரெல்ல்லி, ஹிப்போபொடமஸ் மடகாஸ்கரியன்சிஸ், ஹிப்போபொடமஸ் லாலுமெல்லா என மூன்று இனக் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
நீர்ப்பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாத, குள்ள வகை நீர் யானை இனமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவுக்குக் குள்ள வகை நீர் யானைகளானது மூன்று முறை சென்றடைந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நான்கு முறை ,மடகாஸ்கர் தீவுக்கு மூன்று முறை என ஏழு முறை நீர் யானைகள் தற்செயலாக மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு அடைந்திருக்கும் என்பது அசாத்தியமானது.
அதன் பிறகு வழக்கத்துக்கு மாறாக ஏழு முறையும் இரண்டு குட்டிகளைப் போட்டு இனப் பெருக்கம் நடந்து இருக்கும் என்பதும் அசாத்தியமானது.
எனவே மத்திய தரைக் கடல் தீவுகள் உள்பட மடகாஸ்கர் தீவில் காணப் படும் மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் , கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்திருப்பது நிரூபணமாகிறது.




இதே போன்று மடகாஸ்கர் தீவில் சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும் ,மூன்று அடி நீளமுள்ள, எலும்புத் தகடுகளால் மூடப் பட்ட்டு இருக்கும், நீந்த இயலாத தாவர உண்ணி முதலையின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்த விலங்கு எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

Comments