நியூஸ் ஸ்டோரி - அவுட் லைன்
எனது கண்டு பிடிப்பு பொது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவில் எளிய முறையில் கதை சொல்லும் பாணியில் முழு விபரங்களைத் தெரிவித்து இருக்கிறேன். புவித் தரைக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் சுனாமி உருவானது.புதிய ஆதாரங்கள் மூலம் தெரிய வந்த உண்மை. பத்தாவது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக நான் சுனாமி குறித்து மேற்கொண்ட ஆய்வில் எனக்குத் தெரிய தெரிய வந்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனது ஆய்வு பற்றி . .. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தரையுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது பாறைத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் ,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு திடீரென்று செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனால் இணைய தளத்தில் வெளியாகி இருந்த செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்ததில் புவித் தரைக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரி...