வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் எப்பொழுது உருவானது ?

பூமியில் பனிப் படலங்கள் ஏன் உருவாகின ?எப்பொழுது உருவாகின? போன்ற கேள்விகளுக்கு என்னுடைய விளக்கம் ஆதாரங்களுடன் பொருந்துகிறது.ஆனால் இதே கேள்விகளுக்குப் புவியியல் வல்லுனர்கள் பனியுகக் கருத்தின் அடிப்படையில் கூறும் விளக்கத்துடன் ஆதாரங்கள் பொருந்த வில்லை.

முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியுகம் நிகழ்ந்த தாகவும், அப்பொழுது துருவப் பகுதிகளில் ,பனிப் படலங்கள் உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.ica.gifமுப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியுகம் நிகழ்ந்த தாகவும், அப்பொழுது துருவப் பகுதிகளில் ,பனிப் படலங்கள் உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.ica.gif

acex16.pngacex16.png
acex17.pngacex17.png
acex15.pngacex15.png
acex11.gifacex11.gif

முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியுகம் நிகழ்ந்த தாகவும், அப்பொழுது துருவப் பகுதிகளில் ,பனிப் படலங்கள் உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

தற்பொழுது அந்தக் கருத்து தவறு என்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ஆர்க்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் லாமோனோவ் என்று அழைக்கப் படும் கடலடி மலைத் தொடரில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில் 4.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,ஆழமற்ற வெப்பமான கடல் பகுதியில் வாழ்ந்த அசோலா என்று அழைக்கப் படும் பாசி போன்ற தாவரத்தின் பாகங்களைப் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் ஆர்க்டிக் பகுதியில்  4.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்பமான கால நிலை நிலவியிருப்பதாகப்  புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அத்துடன் நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் கடலில் மிதந்து செல்லும் பனிப் பாறைகளால் கொண்டுவரப் பட்டு படிய வைக்கப் படும் பாறைப் பகுதிகளையும் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ஆர்க்டிக் கடலில் நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே குளிர்காலத்தில் பனி உருவாகி இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இது மிகவும் எதிர்பாராத ஒன்று என்றும் ஏற்கனவே நினைத்ததற்கு மாறாக மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே வட துருவப் பகுதியில் பனி உருவாகி இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே பனியுகக் கருத்தை நம்பும் புவியியலாளர்கள் கூறுவதைப் போன்று துருவப் பகுதிகளில் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் உருவாகி இருக்க வில்லை.அதற்கும் முன்பே துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?