தென் துருவப் பகுதியில் பனிப் படலங்கள் எப்பொழுது உருவானது ?


பூமியில் பனிப் படலங்கள் ஏன் உருவாகின ?எப்பொழுது உருவாகின? போன்ற கேள்விகளுக்கு என்னுடைய விளக்கம் ஆதாரங்களுடன் பொருந்துகிறது.ஆனால் இதே கேள்விகளுக்குப் புவியியல் வல்லுனர்கள் பனியுகக் கருத்தின் அடிப்படையில் கூறும் விளக்கத்துடன் ஆதாரங்கள் பொருந்த வில்லை.

ica13.pngica13.png
http://www.dailygalaxy.com/my_weblog/2014/06/fossil-discovery-shows-the-antarctic-icecap-is-336-million-years-old-todays-most-popular.html
http://www.sciencedaily.com/releases/2013/05/130527100526.htm
http://www.livescience.com/34759-antarctica-ecosystem-age-found.html
http://www.natureworldnews.com/articles/2155/20130529/antarctic-ice-caps-formed-33-6-million-years-back-researchers.htm
 http://www.redorbit.com/news/science/1112857830/antarctic-ice-pack-formed-millions-years-organisms-evolve-052813/
http://www.aninews.in/newsdetail9/story113858/antarctic-polar-icecap-formed-039-33-6-million-years-ago-039-.html
 http://www.scienceworldreport.com/articles/7157/20130529/antarctica-ice-cap-came-existence-3-6-million-years-ago.htm
http://www.sciencedaily.com/releases/2013/05/130527100526.htm
http://www.livescience.com/34759-antarctica-ecosystem-age-found.html
http://canal.ugr.es/index.php/natural-resources-and-environment/item/65387-the-antarctic-polar-icecap-is-336-million-years-old?tmpl=component&print=1

பூமியில் பனிப் படலங்கள் ஏன் தோன்றின?எப்பொழுது தோன்றின?

கடல் மட்டம் உயர்ந்தன் காரணமாகப் பூமியின் வெப்ப நிலை குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகின என்று ஏற்கனவே விளக்கம் தெரிவித்து இருந்தேன்.

தற்பொழுது பூமியின் துருவப் பகுதிகளில் எப்பொழுது பனிப் படலங்கள் உருவாகின ? என்ற கேள்விக்கு விளக்கம் தெரிவிக்கிறேன்.

அதற்கு முன்பு பூமியின் துருவப் பகுதிகளில்  பனிப் படலங்கள் ஏன் உருவாகின ? எப்பொழுது உருவாகின ? என்பதற்குப் புவியியலாளர்கள் கூறும் விளக்கத்தை முன்வைக்கிறேன்.

பூமியானது சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் பொழுது சில காலம் சூரியனை விட்டு விலகிச் சென்று சற்று பெரிய நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாகவும், அதனால் பூமியில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவதாகவும், அதனால் பூமியின் வெப்ப நிலை குறைவதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவானதாகவும், புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு பூமியில் பனிப் படலங்கள் உருவாகும் பொழுது, கடல் மட்டம் இறங்குவதாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.


இந்தக் கருத்து தவறு.

எப்படியென்றால் பூமியில் வெப்ப நிலை குறையும் பொழுது, கடலில் உள்ள நீர் ஆவியாகுவது நின்று விடும்.

எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் உள்ள நீரும், வளி மண்டலத்தில் உள்ள நீராவியும்தான் நிலத்தின் மேல் பனியாக உறையும்.

எனவே பூமியின் வெப்பக் குறைவால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படுவதாகப் புவியியலாளர்கள் கூறும் கருத்து தவறு.

இவ்வாறு பூமியில் ஏற்படும் பனியானது, லட்சக் கணக்கான ஆண்டுகளாக நீடிப்பதாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

அதன் பிறகு பூமியானது மறுபடியும் சூரியனை நோக்கி நகர்ந்து, சிறிய நீள் வட்டப் பாதையில் வலம் வரத் தொடங்குவதாகவும், அதனால் பூமயின் வெப்ப நிலை அதிகரிப்பதாகவும், புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு பூமியானது சூரியனை சிறிய நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது, பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதாகவும், அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும், அதனால் கடல் மட்டம் உயர்வதாகவும், புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இதுவும் ஒரு தவறான விளக்கமே.

ஏனென்றால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் பொழுது, கடலில் உள்ள நீரும் ஆவியாகத் தொடங்கும்.எனவே நிலத்தின் மேல் இருக்கும் பனி உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட ,கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

எனவே பூமியானது சூரியனை விட்டு விலகியும் நெருங்கியும் வலம் வருவதாகவும், அதனால் பூமியில் பனிப் படலங்கள் உருவாகிப் பின்னர் உருகுவதாகவும், அதனால் கடல் மட்டம் உயர்ந்து இறங்குவதாகவும், புவியியலாளர்கள் கூறும் விளக்கம் தவறு.
( முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியுகம் நிகழ்ந்த தாகவும், அப்பொழுது துருவப் பகுதிகளில் ,பனிப் படலங்கள் உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.)   ica.gif( முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியுகம் நிகழ்ந்த தாகவும், அப்பொழுது துருவப் பகுதிகளில் ,பனிப் படலங்கள் உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.) ica.gif
ica1.gifica1.gif
http://geology.utah.gov/surveynotes/gladasked/gladice_ages.htm

இந்த நிலையில் பூமியானது  இது வரை ஐந்து முறை சூரியனை விட்டு விலகிச் சென்று பெரிய நீள் வட்டப் பாதையில் வலம் வந்ததாகவும், அதனால் பூமியில் ஐந்து முறை பெருமளவு பனி உருவாகியதாகவும், புவியியலாளர்கள் நம்புகின்றனர்.இவ்வாறு பூமிப் பரப்பு பனியால் மூடப் பட்ட காலம் பனியுகம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது.
ica6.pngica6.png
http://en.wikipedia.org/wiki/Ice_age
ica7.pngica7.png

முதல் பனியுகமானது இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஹுரோனியன் என்று அழைக்கப் படும் காலத்தில் ஏற்பட்டதாக நம்பப் படுகிறது.

இரண்டாவது பனியுகமானது எண்பத்தி  ஐந்து முதல் ,அறுபத்தி மூன்று  கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கிரையோ ஜெனியன் என்று அழைக்கப் படும் காலத்தில் ஏற்பட்டதாக நம்பப் படுகிறது.

மூன்றாவது பனியுகமானது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு  ஏற்பட்டதாக நம்பப் படுகிறது.

நான்காவது பனியுகமானது முப்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருபத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்ததாக நம்பப் படுகிறது.

கடைசிப் பனி யுகம் என்று அழைக்கப் படும் ஐந்தாவது பனியுகமானது முப்பது முதல் இருபத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக நம்பப் படுகிறது.
ica8.pngica8.png
http://en.wikipedia.org/wiki/Ice_age

http://www.livescience.com/7283-catastrophic-comet-chilled-killed-ice-age-beasts.html

ஒவ்வொரு பனியுகத்தின் பொழுதும் துருவப் பகுதிகளில் இருந்து பனிப் படலங்கள் படர்ந்து, கண்டங்களின் மேல் பரவிய பிறகு, மறுபடியும் சுருங்கியதாக நம்பப் படுகிறது.

இவ்வாறு பனிப் படலங்கள் வளர்வது பனிப் படலப் பெருக்கம் என்றும், பனிப் படலங்கள் சுருங்குவது பனிப் படலச் சுருக்கம் என்றும் அழைக்கப் படுகிறது.

இரண்டு பனிப் படலப் பெருக்கக் காலத்துக்கு இடைப் பட்ட காலம் பனிப் படல இடைக் காலம் என்றும் வெப்ப காலம் என்றும் அழைக்கப் படுகிறது.அதே போன்று இரண்டு பனியுகத்துக்கு இடைப் பட்ட காலம் பனியுக இடைக் காலம் என்றும் அழைக்கப் படுகிறது.

பனிப் படலங்கள் ஒரு லட்சம் ஆண்டு முதல் நாற்பதாயிரம் ஆண்டு கால சுழற்சியில்,  வளர்ந்து தேய்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

கடைசியாக  இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் பெருக்கமடைந்ததாகவும் அப்பொழுது பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்கள் அழிந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.அதே போன்று பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படல வளர் காலம் முடிந்து வெப்பமடையத் தொடங்கியதாகவும் நம்பப் படுகிறது.

தற்பொழுது பனிப் படல இடைக் காலம் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இன்னும் ஐம்பதாயிரம் ஆண்டு காலத்தில் மறுபடியும் பனிப் படலங்கள் பெருகி பனிப் படலக் காலம் தொடங்கும் என்றும் நம்பப் படுகிறது

தற்பொழுது துருவப் பகுதிகளில் காணப் படும் பனிப் படலங்களானது முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனியுகத்தின் மிச்சமாகக் கருதப் படுகிறது.

ஆனால் புவியியலாளர்களின் கருத்து தவறு.அடிப்படை ஆதாரமற்றது.
ica11.pngica11.png
http://www.sciencedaily.com/releases/2013/05/130527100526.htm

கடந்த 2013 ஆம் ஆண்டு ,ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கார்லோட்டா எஸ்குடியா தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,அண்டார்க்டிக் கண்டத்தில் மேற்கொண்ட ஆய்வில் ,அண்டார்க்டிக் கண்டத்தின் பனி அடுக்குகள் மூன்று கோடியே முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

குறிப்பாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் அண்டார்க்டிக் கண்டத்தின் பனி அடுக்கில் வெவ்வேறு ஆழத்தில் இருந்து எடுக்கப் பட்ட பனிக் கட்டிகளில்,டினோபிளேஜெல்லேட்ஸ் என்று அழைக்கப் படும் மிதவை உயிரியின் புதை படிவங்களை சேகரித்தனர்.

அப்பொழுது மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில் பலவகையான டினோபிளேஜெல்லேட்ஸ்கள் வாழ்ந்து இருப்பது தெரிய வந்தது.அதன் பிறகு கால நிலை மாற்றம் ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவானதால் புதிய சூழ் நிலையைத் தாக்குப் பிடித்த குறிப்பிட்ட சில வகை டினோபிளேஜெல்லேட்ஸ் இனவகைகள் மட்டுமே வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்தது.

அத்துடன் பனிப் படலங்கள் உருவான பிறகு கோடை காலத்தில் பனி உருகும் பொழுது பனியில் இருந்த சத்துக்கள் வெளியாகி இருப்பதும் அதனை உண்டதால்  டினோபிளேஜெல்லேட்ஸ்களின் அளவு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்தது.

இது போன்ற பருவ கால டினோபிளேஜெல்லேட்ஸ்களின் பெருக்கமானது முதன் முதலாக மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருப்பதாகவும் டாக்டர் கார்லோட்டா எஸ்குடியா தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் அவர் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

இந்த ஆராய்ச்சி முடிவானது எனது ஆய்வு முடிவுடன் மிகவும் ஒத்துப் போகிறது.

ஏற்கனவே நான் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால், கடலின் பரப்பளவு அதிகரித்ததால், பூமியின் வெப்ப நிலை குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவானதாக விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
( இது குறித்த எனது ஆய்வுக் கட்டுரை ''உயர்ந்தது கடல் உறைந்தது பூமி'' என்ற தலைப்பில் 12.05 2014 நாளிட்ட தின இதழில் வெளியாகி இருக்கிறது.  )


குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம மாற்றம் அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்களானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் ,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.

தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.

அதன் அடிப்படையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தேன்.
ica14.pngica14.png
http://www.abc.net.au/science/articles/2013/11/13/3889428.htm
http://news.nationalgeographic.com/news/2013/11/131112-antarctica-climate-change-penguin-origins/
http://phys.org/news/2013-11-cooler-climate-evolution-penguins.html

இதே போன்று தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் காணப் படும் பெங்குவின் பறவைகள் கூட, இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மூததையில் இருந்து பரிணாம மாற்றம் பெற்றிருப்பதாக உயிரியல் வல்லுனர்களும் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே பனியுகக் கருத்தை நம்பும் புவியியலாளர்கள் கூறுவதைப் போன்று துருவப் பகுதிகளில் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் உருவாகி இருக்க வில்லை.அதற்கும் முன்பே துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதன் மூலம் மடகாஸ்கர் தீவுப் பகுதியில் கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயரத் தொடங்கி இருக்கிறது.அதற்கு முன்பும்  கடல் மட்டம் உயரத் தொடங்கியதால், மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில்  பனிப் படலங்கள் உருவாகி இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.




நன்றி தின இதழ் 

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?