எரிமலைச் சுனாமி
எரிமலை வெடித்ததால் தெற்காசிய சுனாமி ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

iot1.jpg

ob4.jpg (வட அமெரிக்காவில் பூமிக்குள் உருவாகிக் கொண்டு இருக்கும் ஒரு எரிமலையைச் சுற்றியும் வரப்பு போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம்.)
எரிமலைகளைச் சுற்றியும் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றியும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

itainsar.jpg (இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றியும் வரப்பு போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம்.)
இத்தாலி நாட்டில் லா அகுய்லா என்ற நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது.அத்துடன் அந்த இடத்தில் எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான் என்ற வாயு வெளிப் பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
எனவே இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதே காரணம் என்பது நிரூபணமாகிறது.
இதே போன்று ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் சுனாமி உருவாகியுள்ளது.

sim1.png (சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றியும் வரப்பு போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம்.)
இதே போன்று கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவுக்கு அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவான பொழுது சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து இருந்தது.அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே தெற்காசிய சுனாமி உருவாகி இருக்கிறது.
Comments