கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.

ripo.jpg
ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் கானரித் தீவுகள் என்று
அழைக்கப் படும் ஏழு எரிமலைத் தீவுகள் கிழக்கு திசையில் இருந்து மேற்கு
திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கின்றன. ஸ்பானிய மொழியில் கானரி
என்றால் நாய் என்று பொருள். இந்தத் தீவுகளின் பூர்வீக குடிகள் நாயை
தெய்வமாக வழிபட்டதால் இவ்வாறு அழைக்கப் படுகின்றன.
canchain7.jpg
மேற்குப் பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியபடி அமைந்திருக்கும்
லான்சரோட் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத் திட்டுப் பகுதியில்
அமைந்திருக்கின்றன.கிழக்கு கோடியில் உள்ள எல் கிரரோ என்ற தீவும் அதற்கு
அடுத்தபடியாக உள்ள லா பாமா எரிமலைத் தீவும் அட்லாண்டிக் கடல் தரையின் மேல்
உருவாகி இருக்கின்றன.
canchain2.gif

இந்த ஏழு எரிமலைத் தீவுகளும் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெருங் கண்டம் இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள நிலைக்கு வந்து சேர்ந்ததாகாவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு கண்டங்கள் பிரிந்து நகர்ந்ததால்தான் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் உருவாகி இருக்கிறது.

sfs70.jpg
அந்தக் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில்
இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல்
தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு
பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே
மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல்தளப் பாறைகளை கிழக்கு மற்றும்
மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல்
தளமாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.இது போன்று தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அட்லாண்டிக் கடல் பகுதியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
அத்துடன் அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்தபடி அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்கக் கண்டங்கள் மேற்கு திசையை நோக்கியும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் கிழக்கு திசையை நோக்கியும் கடல்தரையுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

canchain6.png
இவ்வாறு அட்லாண்டிக் கடல் தரையுடன் ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது பூமிக்கு அடியில் இருந்த
ஒரு எரிமலை வெப்ப மையத்தின் மேல் நகர்ந்த பொழுது அந்த எரிமலை வெப்ப
மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால் அட்லாண்டிக் கடல் தரையில்
இருந்து ஆப்பிரிக்கக் கண்டத் திட்டு வரைக்கும் தொடர்ச்சியாக எரிமலைகள்
வரிசையாக உருவாகியதாக விளக்கம் கூறப் படுகிறது.
canchain5.jpg
உண்மையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு கடல்தரையையும்
ஆப்பிரிக்கக் கண்டத்தையும் துளைத்த பொழுது அட்லாண்டிக் கடல் தரையும்
ஆப்பிரிக்கக் கண்டமும் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை
நோகினகர்ந்து இருந்தால் எரிமலைத் தீவு வரிசையில் மேற்கு கோடியில் இருக்கும்
எரிமலையின் தொண்மையானது அதிகமாகவும் அங்கிருந்து கிழக்கு திசையை நோக்கி
செல்லச் செல்ல எரிமலைகளின் தொண்மையானது படிப்படியாக குறைய வேண்டும்.ஆனால் அவ்வாறில்லாமல் கானரி எரிமலைத் தீவு வரிசையில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி செல்லச் செல்ல தீவுகளின் தொன்மையானது படிப்படியாக குறையாமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தையொட்டியுள்ள லான்சரோட் எரிமலையின் தொண்மையானது 15.5 மிலியன் ஆண்டுகளாக இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் லான்சரோட் தீவுக்கு அடுத்தபடியாக மேற்கு திசையில் உள்ள ஃபூர்ட்டி வெஞ்சுரா எரிமலையின் தொண்மையானது குறைவாக இருப்பதற்கு பதிலாக 20.6 மிலியன் ஆண்டுகள் தொன்மையுடன் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது எரிமலை மையத்தின் மேல் ஆபிரிக்கக் கண்டம் நகர்ந்து வந்த பொழுது முதன் முதலில் உருவானதாக நம்பப் படும் லான்சரோட் எரிமலையின் தொண்மையானது குறைவாகவும் இரண்டாவதாக உருவானதாக நம்பப் படும் ஃபூர்ட்டி வெஞ்சுரா எரிமலையின் தொண்மையானது அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதே போன்று கானரி எரிமலைத் தீவு வரிசையில் மேற்குப் பகுதியில் உள்ள டென்னெரிபி எரிமலையின் தொண்மையானது 11.6 மிலியன் ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் டென்னெரிபி எரிமலைக்கு மேற்கில் உள்ள உள்ள லா கோமிரா எரிமலையின் தொண்மையானது குறைவாக இருப்பதற்கு பதிலாக 12.0 மிலியன் ஆண்டுகள் தொன்மையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
முக்கியமாக இந்த ஏழு எரிமலைத் தீவுகளின் வேதிச் சேர்மானமும் ஒன்றுக் கொண்று வேறு பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.எனவே இந்த எரிமலைத் தீவுகளானது தனித் தனி எரிமலைப் பிளம்புகள் மூலம் தனித் தனியாக உருவாகி இருப்பது நிரூபணமாகிறது.அத்துடன் எரிமலைத் தீவு வரிசையில் எரிமலைகளின் தொண்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் அடிப்படியில் அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையைக் இருப்பதும் நிரூபணமாகிறது.

cameroon line3.jpg
இதே
போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் கினியா வளைகுடாப்
பகுதியில் உள்ள கேமரூன் எரிமலைத் தொடரும் அட்லாண்டிக் கடல் தரையில்
இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேல் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி
இருக்கிறது.

cameage.jpg
ஆனால்
கேமரூன் எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைப் பாறைகளின் தொன்மையும்
படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது
தெரியவந்துள்ளது.
இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல்தரையின் மேல் இருந்தபடி வட
அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.இவ்வாறு வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் , வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்கே பசிபிக் கடல்தரைப் பகுதியில் புதிய கடல்தரை உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று பூமிக்குள் புதைந்து அழிவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

ofs1.jpg
அத்துடன் வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் செல்லும் பசிபிக் கடல் தரையானது உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியைத் துளைத்துக் கொண்டு நிலத்திற்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் காஸ் காடியா எரிமலைத் தொடரானது இப்படி வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்ற பசிபிக் கடல்தரையானது உருகி மேல் நோக்கி உயர்ந்து வட அமெரிக்கக் கண்டத்தை பொத்துக் கொண்டு உயர்ந்ததால்தான் உருவானது என்று விளக்கம் கூறப் படுகிறது.தான் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.

இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலம் வட அமெரிக்கக் கண்டமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.

fig5.gif
இதே போன்று வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக்
கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பசிபிக்
கடல் தரையிலும் புதிதாக கடல் தளம் உருவாகி தென் கிழக்கு மற்றும் வட
மேற்கு ஆகிய திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
விளக்கம் கூறப் படுகிறது.இதில் தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து
செல்லும் கடல்தரையானது தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தென்
அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாக்கி
மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து தென் அமெரிக்கக் கண்டத்தை பொத்துக்
கொண்டு உயர்ந்ததால் ஆண்டிஸ் எரிமலைத் தொடர் உருவானதாக விளக்கம் கூறப்
படுகிறது.அதே போன்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் பசிபிக் கடல் தரைக்கு அடியில் இருக்கும் எரிமலை வெப்ப மையத்தால் பசிபிக் கடல் தரையானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால்தான் பசிபிக் கடல் தரையின் மேல் தென் கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி வரிசையாக ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவானதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.


lic1.jpg
ஆனால் அவ்வாறில்லாமல் பசிபிக் கடல்தரையில் ஹவாய் எரிமலைத் தீவு
வரிசைக்கு தெற்கில் உள்ள லைன் எரிமலைத் தீவு வரிசையானது ஹவாய் எரிமலைத்
தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.அதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே பசிபிக் கடல்தரையின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகளின் மூலம் பசிபிக் கடல்தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று இன்னொரு ஆதாரம் மூலமும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
உண்மையில் பசிபிக் கடல் தரையானது தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பால் ஹவாய் எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவாகி இருந்தால் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் தென் கிழக்கு பகுதியில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையானது குறைவானதாகவும் அதே நேரத்தில் வட மேற்கு திசையை நோக்கி செல்லச் செல்ல ஹாவாய் தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையானது படிப படியாக அதிகரிக்க வேண்டும்.ஆனால் புவியியல் வல்லுனர்கள் ஹவாய் எரிமலைத் தீவுகளில் இருந்து பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ததில் அவ்வாறு ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கிச் செல்லச் செல்ல தீவுகளின் பாறைகளின் தொண்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது தெரியவந்துள்ளது.

hage10.jpg
குறிப்பாக ஹவாய் எரிமலைத் தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது ஐந்து
லட்சம் என்பது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் ஹவாய் எரிமலைத் தீவில்
இருந்து வட மேற்கு திசையில் 519 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவாய் எரிமலைத்
தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது 5.1 மிலியன் ஆண்டுகள் என்பது தெரிய
வந்துள்ளது.அதே நேரத்தில் ஹவாய் தீவிற்கு வட மேற்கில் 565 கிலோ மேட்டர்
தொலைவில் உள்ள நியாகு தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது 4.89 மிலியன்
ஆண்டுகள் தொன்மையானது என்பது தெரியவந்துள்ளது.
ischain age.gif
இதே போன்று ஹவாய் தீவிற்கு வட மேற்கு திசையில் 3520 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உர்யாகி தீவில் உள்ள பாறைகளின் தொண்மையானது 43.4 மிலியன் ஆண்டுகள் என்பது தெரியவந்துள்ளது.ஆனால் ஹவாய் தீவிற்கு வட மேற்கு திசையில் 3668 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்மி தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது 39.9 மிலியன் ஆண்டுகள் என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் பாறைகளின் தொன்மையானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று ஸ்கிரிப்ட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அந்தோணி கொபெர்ஸ் என்ற புவியியல் வல்லுநர் பசிபிக் கடல் பகுதியில் உள்ள லைன் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளிலும் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றின் தொண்மையை மதிப்பிட்ட பொழுதும் அந்தத் தீவு வரிசைகளில் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாக தெரிவித்து இருக்கிறார்.இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள துமாத்து எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் பாறைகளின் தொன்மையும் படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும் தெரியவந்துள்ளது.எனவே பசிபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.

lohi2.jpg
இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்
சிசுன் ஹுவாங் மேற்கொண்ட ஆய்வில் ஹவாய் தீவில் உள்ள மோனா லோவா எரிமலை
மற்றும் மோனா கியா எரிமலைப் பாறைகளின் வேதிச் சேர்மாணமும் ஒன்றுக் கொன்று
வேறுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.குறிப்பாக மோனோ லோவா எரிமலைப் பாறையில் ஈயத்தின் ஐசோ டோப்புகளான ஈயம் 208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள விகிதாச்சாரமானது அதிகமாகவும் அதே நேரத்தில் மோனோ கியா எரிமலைப் பாறைகளில் ஈயம் 208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள விகிதாச்சாரமானது குறைவாக இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் ஹவாய் தீவில் உள்ள இந்த இரண்டு எரிமலைகளும் தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதாக சிசுன் ஹுவாங் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு ஒரே தீவில் உள்ள எரிமலைகளானது தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதன் அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள சமோவா எரிமலைத் தொடரிலும் உள்ள தீவுப் பாறைகளின் வேதிச் சேர்மாணமும் வேறுபட்டு இருப்பதுடன் மார்கொசாஸ் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் வேதிச் சேர்மாணமும் வேறு பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இவ்வாறு பசிபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் வேதிச் சேர்மானமானது வேறுபட்டு இருப்பதன் அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
நில அதிர்ச்சிக்கு எரிமலைகளே காரணம்.
கண்டங்கள் நிலையாக இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் கண்டங்களின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் இருக்கின்றன.அதையெல்லாம் விட மிக எளிமையான ஆதாரம் உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம்.
தற்பொழுது கடல்தரையுடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் என்ன நடக்கும் என்பது கேள்விக் குறி?
வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.
அந்தக் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேல் நோக்கி வருவதாகவும் அவ்வாறு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல்தளமாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு பாறைக் குழம்பு வரும்பொழுது ஏற்கனவே அந்தப் பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல்தளப் பாறைகளை கிழக்கு மற்றும் மேற்கு என பக்க வாட்டுப் பகுதிகளுக்கு நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகுவதாகவும் இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவதால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரின் தென் பகுதியிலும் புதிய கடல்தளம் உருவாகி வடமேற்கு வடகிழக்கு ஆகிய திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல்தரையின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி முறையே வடக்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி கடல்தரையுடன் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நில அதிர்ச்சிகள் ஏற்படவேண்டும்.

2circle.jpg
ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் அவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
உண்மையில் அட்லாட்னிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி இந்த இரண்டு கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு நில அதிர்ச்சிகள் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ஏற்படாததன் அடிப்படையில் கண்டங்கள் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
எனவே கண்டங்கள் நகரவில்லை என்றால் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது? என்ற கேள்வி எழுகிறது.

ob4
இந்த நிலையில் எரிமலைகள் குமுறி உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச்
சுற்றியுள்ள தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றி
வரப்பு போன்று மேடுபள்ள வளையங்கள் உருவாகுவது செயற்கைக் கோள் படங்களில்
பதிவாகியுள்ளது.அதே போன்று நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றியும் வரப்பு
போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு
செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
itainsar.jpg
அது மட்டுமல்லாது இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில
அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி
இருந்ததுடன் அந்தப் பகுதியில் எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான்
என்ற வாயுவும் வெளிப் பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு
இருக்கிறது.எனவே நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதற்கு பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளே காரணம் என்பதும் நில அதிர்ச்சிக்கும் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகளே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
Comments