abcd report
பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும்
ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள்
மூலம் தெரியவந்துள்ளது.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது ஒரு எரிமலைக்குள்
நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள
தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலையுடன் சிறிது உயர்கிறது.
இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது
எரிமலையின் உயரம் குறைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு உயர்ந்த தரைப் பகுதியும் சற்று கீழ் நோக்கி இறங்கும் பொழுது
எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்புகள்
வெட்டியதைப் போன்று வடுக்கள் உருவாகின்றன.
இவ்வாறு ஒரு எரிமலையானது குமுறி வெடிக்கும் பொழுது அந்த எரிமலையானது
உயர்ந்து இறங்கியதற்கு ஆதாரமாக எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு
உருவாகும் வளைய வடிவ வரப்பு மேடுகளானது
நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றியும் உருவாகி இருப்பது தரை மட்ட
மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு எரிமலையைச் சுற்றி பல கிலோம்மீட்டார் சுற்றளவிற்கு உருவாகும்
வளைய வடிவ வரப்பு மேடுகளானது சில சென்டி மீட்டர் உயரமே இருப்பதால் சாதாரணமாகத்
தரையில் இருந்து பார்ப்பதற்கு தெரிவதில்லை.
ஆனால் ரேடியோ கதிர் வீச்சு மூலம் தரை மட்ட மாறுபாடுகளைத் துல்லியமாகப்
பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகிறது.
குறிப்பாக ஒரு எரிமலைக்கு மேல் பறந்து செல்லும் ஒரு செயற்கைக் கோளில்
இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் படுகின்றன.
அப்பொழுது மேடான பகுதியில் பட்டுத் திரும்பவும் செயற்கைக் கோளை
வந்தடையும் ரேடியோ கதிர்கள் சீக்கிரமாக செயற்கைக் கோளை வந்தடைகிறது. ஆனால் பள்ளமான
பகுதிகளில் பட்டுத் திரும்பும் ரேடியோ கதிர்கள் சற்று தாமதமாக செயற்கைக் கோளை
வந்தடைகிறது.
இந்த நேர வித்தியாசமானது செயற்கைக் கோளில் உள்ள நுட்பமான கருவிகள்
மூலம் தரை மட்ட மேடுபள்ளங்கள் மில்லிமீட்டர் துல்லியமாகப் பதிவு செய்யப் படுகிறது.
இந்த முறையில் ஒரு எரிமலையானது உயர்ந்து இறங்குவதற்கு முன்பு எடுக்கப்
பட்ட படங்களையும் ஒரு எரிமலையானாது உயர்ந்து இறங்கிய பிறகு எடுக்கப் பட்ட தரை மட்ட
மாறுபாட்டுப் படங்களையும் ஒரு கணிப் பொறி மூலம் ஒரே படமாக மாற்றப் படும் பொழுது
இடைப் பட்ட காலத்தில் அந்த எரிமலையானது உயர்ந்து இறங்கியதால் எரிமலையைச் சுற்றி
எத்தனை மில்லி மீட்டர் உயரத்திற்கு வளைய வடிவ வரப்பு மேடுகள் உருவாகியது என்பது
தெரியவருகிறது.
இந்த முறையில் ஒரு வயல் வெளியின் மேல் பல முறை பறந்து செல்லும்
செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்களை ஒரு கணிப் பொறி மூலம் ஒரே படமாக
மாற்றப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில் அந்த வயல் வெளியை உழுதிருந்தால் கூட
கண்டு பிடித்து விட முடியும்.
இதே முறையில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியின் மேல் பறந்து சென்ற
செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்களில் குறிப்பாக நில அதிர்ச்சி
ஏற்படுவதற்கு முன்பு எடுக்கப் பட்ட படங்களையும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு
எடுக்கப் பட்ட தரை மட்ட மாறுபாட்டுப் படங்களையும் கணிப் பொறி மூலம் ஒரே படமாக
மாற்றப் பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு
,எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்றே வளைய வடிவ வரப்பு மேடுகள் உருவாகி
இருப்பது பதிவாகியுள்ளது.
குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட
பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய
வடிவ வரப்பு மேடுகள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த
செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு
ஒரு வாரத்திற்கு முன்பு எரிமலைகளில் இருந்து வெளிவரும் ரேடான் என்ற வாயுவானது
பூமிக்கு அடியில் இருந்து கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்துக் குமுறியதாலேயே இத்தாலி
நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி
எரிமலைகளைச் சுற்றி உருவாகும் வளைய வடிவ வரப்பு மேடுகள் உருவாகி இருப்பதைப் புலப்
படுத்தும் செயற்கைக் கோள் படம் மூலமாகவும் அதே போன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட
பகுதியில் எரிமலைகளில் இருந்து வெளியாகும் ரேடான் வாயு பூமிக்கு அடியில் இருந்து
கசிந்து இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதன் மூலமாகவும் நிரூபணமாகிறது.
இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டு ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது
நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவ
வரப்பு மேடுகள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக்
கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
அத்துடன் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நில
அதிர்ச்சி ஏற்பட்ட பகுதிக்கு மேல் உள்ள வளி மண்டல மேலடுக்கில் அசாதாரணமாக வெப்ப
நிலை உயர்ந்து இருந்ததும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
இதற்கு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த ரேடான் வாயு
காரணமாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.குறிப்பாக
எரிமலைகளில் இருந்து வெளிவரும் ரேடான் வாயுவானது கதிர் வீச்சுத் தன்மையுடையது.எனவே
பூமிக்கு அடியில் இருந்து வெளிப்பட்ட ரேடான் வாயுவின் கதிர் வீச்சானது வளி
மண்டலத்தில் உள்ள வாயுக்களில் உள்ள மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்களை
நீக்கியதால் எலெக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும் வல்லுனர்கள்
தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால் வளி
மண்டல அடுக்கில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என்று வல்லுனர்கள் தெரிவித்து
இருக்கின்றனர்.
எனவே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில
அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் எரிமலைகளைச் சுற்றி உருவாகும் வளைய வடிவ வரப்பு
மேடுகள் உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் எரிமலைகளில் இருந்து வெளியாகும் ரேடான்
வாயு வெளிபட்டதற்கு ஆதாரமாக வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்வு ஏற்பட்டதைப் பதிவு
செய்த செயற்கைக் கோள் படம் மூலமாகவும் பூமிக்கு அடியில் எரிமலை வெடித்துக்
குமுறியதாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது
நிரூபணமாகிறது.
உண்மை இவ்வாறு இருக்க தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல்தரையுடன்
அதாவது கண்டத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்ளும் பொழுது
நில அதிர்ச்சி ஏற்படுவதாக தவறாக நம்பப் படுகிறது.
அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு
நகர்ந்து செல்வதாகவும் அப்பொழுது மேற்பகுதியில் உள்ள பாறைத் தட்டு மேல் நோக்கி
உயரும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் தவறாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தாக்கம் உருவான பின்னணி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது
அவசியம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல்
மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல்தரையை எண்ணெய்
எடுப்பதற்காக துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் இருபது கோடி
ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற வகை
டைனோசரின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக்
காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து
இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின்
மத்தியப் பகுதியில் துளையிடும் கருவிகள் மூலம் துளையிடப் பட்ட பொழுது கிடைத்த
ஒன்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை
மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்
தக்கது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக்
காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில்
காடுகளுடன் கூடிய நிலத் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர்கள் ஒரு கண்டத்தில்
இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பது நிரூபணமாகிறது.
இந்த நிலையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை
போன்ற நீர் நிலைகளின் அருகில் வாழ்ந்த மெசோசாராஸ் என்ற விலங்கின் புதை படிவங்கள்
அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்ட தென் அமெரிக்கக் கண்டத்திலும்
ஆப்பிரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் நிச்சயம் தரையில்
வாழ்ந்த ஒரு விலங்கால் அட்லாண்டிக் கடலைக் கடந்திருக்க இயலாது என்று கூறி அதனால்
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து
பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங் கண்டம் இருந்ததாகவும், பின்னர்
அந்தப் பெருங் கண்டமானது பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால் தற்பொழுது உள்ள ஏழு
கண்டங்களும் உருவானதாகவும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை
இயல் வல்லுநர் 1912 ஆம் ஆண்டு ஒரு தவறான மேற்போக்கான விளக்கத்தைக் கூறினார்.
கடல் மட்டம் தாழ்வாக இருந்து உயர்ந்திருக்கலாம் என்பதைப் பற்றி அவர்
சிந்திக்கவே இல்லை.காரணம் அந்தக் காலத்தில் கடலுக்கு அடியில் விரிவான ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப் படவில்லை.
வெக்னருக்கு முன்பு அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களில்
விலங்கினங்கள் காணப் படுவதற்கு அட்லாண்டிக் கடலுக்கு குறுக்கே அதாவது கிழக்கு
மேற்கு திசையை நோக்கி ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்து அதன் வழியாக விலங்கினங்கள்
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று
கருதப் பட்டது.
இந்த நிலையில் ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் கடலுக்கு
அடியில் தந்திக் கம்பிகள் பதிக்கும் பணி நடைபெற்ற பொழுது அட்லாண்டிக் கடலுக்கு
அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி ஒரு கடலடி மலைத் தொடர் இருப்பது தெரியவந்தது.
மற்றபடி தற்காலிக நிலப் பாலம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் அறியப்
படவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் சூயஸ் என்ற
தாவரவியல் வல்லுநர், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த குளோசோப்
டெரிஸ் என்ற தாவரத்தின் பாகங்கள் தென் பகுதிக் கண்டங்களான தென்
அமெரிக்கா,ஆப்பிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப்
பட்டதன் அடிப்படையில் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து
கோண்டுவாணா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு தென் பெருங் கண்டம் இருந்ததாகவும் பின்னர்
அந்தப் பெருங் கண்டத்தின் இடையில் உள்ள நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்கு அடியில்
மூழ்கி விட்டதாகவும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் வெக்னர் கோண்டுவாணாக் கண்டமானது பிளவு பட்டு பிரிந்து நகர்ந்து
கொண்டு இருப்பதாக கூறினார்.அதற்கு முன்பு கோண்டுவாணாக் கண்டமானது வட பகுதியில் வட
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்கள் இணைந்த லாரேசியாக் கண்டத்துடன்
இணைந்து பாஞ்சியாக் கண்டமாக இருந்ததாகவும் கூறினார்.
அத்துடன் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியாக் கண்டம்
இரண்டாகப் பிரிந்து வடக்கில் லாரேசியா தெற்கில் கோண்டுவாணா என்று இரண்டு கண்டங்கள்
உருவானதாகவும் பின்னர் கோண்டுவானாக் கண்டம் பிரிந்து நகர்ந்ததால் தென் பகுதிக்
கண்டங்கள் உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
வெக்னரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.கண்டங்கள் ஏன் நகர்கின்றன?
கண்டங்களை நகர்ந்தும் சக்தி எது? என்ற கேள்விகளுக்கு வெக்னரால் உறுதியாக ஒரு
பதிலைக் கூற இயலவில்லை.
மாறாக பூமியின் சுழற்சி காரணமாக இருக்கலாம் என்றும் சூரியன் மற்றும்
சந்திரனின் சுழற்சி காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
வெக்னரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்றாலும் புவியியல்
வல்லுனர்களால் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது? மலைகள் எப்படி உருவாகின போன்ற
கேள்விகளுக்கு பதில் கூற இயலவில்லை.
ஆனால் வெக்னர்,கண்டங்கள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக்
கொள்ளும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் இரண்டு நிலப் பகுதிகள்
நகர்ந்து மோதிக் கொள்ளும் பொழுது இடையில் உள்ள நிலப் பகுதி புடைத்துக் கொண்டு
மலையாக உருவாகிறது என்று விளக்கம் கூறினார்.
வெக்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத வல்லுனர்கள் கடலில் மிதக்கும்
மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மூலம் விலங்கினங்கள் பெருங் கடல் பகுதியைக்
கடந்து ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்று
கருதினார்கள்.
இந்த நிலையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
லிஸ்ட்ரோ சாரஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும்
கண்டு பிடிக்கப் பட்ட நிலையில் அந்த விலங்கின் எலும்புப் புதை படிவங்கள்
ஆண்டார்க்டிக் கண்டத்தில் இருந்தும் கண்டு பிடிக்கப் பட்டது.
குறிப்பாக லிஸ்ட்ரோ சாரஸ் விலங்கானது டைனோசர்களுக்கு முன்பு வாழ்ந்த
என்ற ஆதி கால ஊர்வன வகை விலங்கினம் என்பதால் தரையில் மிக மெதுவாகவே நடக்கும்
இயல்புடையதாக இருப்பது எலும்பு அமைப்புகளின் படி தெரியவந்துள்ளது.
எனவே லிஸ்ட்ரோ சாரஸ் விலங்கானது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலம்
அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை.
எனவே இந்தக் கண்டு பிடிப்பானது வெக்னரின் நகரும் கண்டங்கள்
கருத்துக்கு வலு சேர்த்தது.
இந்த நிலையில் கண்டங்கள் நகர்வதற்கான சாத்தியங்கள் குறித்து
சிந்திக்கப் பட்டது.
இதற்கிடையில் 1930 ஆம் ஆண்டு வெக்னர் கிரீன்லாந்து தீவிற்கு ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட
பொழுது, பனிப் புயலில் சிக்கி உயிரிழந்தார்.
அதற்கு முந்தைய ஆண்டில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ஹோம்ஸ்
என்ற புவியியலாளர் ஒரு கருத்தை முன்மொழிந்தார்.
அதாவது ஒரு பாத்திரத்தில் உள்ள நீர் கொதிக்கும் பொழுது பாத்திரத்தின்
அடிப்பகுதியில் இருந்து வெப்பமான நீர் பாத்திரத்தின் மேற்பகுதிக்கு வந்த பிறகு
குளிர்ந்து மறுபடியும் பாத்திரத்திற்கு அடியிலேயே செல்வதைப் போன்று பூமிக்கு
அடியில் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்பானது வெப்பத்தால் விரிவடைந்து
மேற்பகுதிக்கு வருவதாகவும், பின்னர் குளிர்ந்து இறுகி கணம் அதிகரித்து மறுபடியும்
பூமிக்கு அடியிலேயே செல்வதாகவும் இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு
மேற்பகுதிக்கு வந்த பிறகு மறுபடியும் பூமிக்கு அடியில் செல்லும் பொழுது பாறைக்
குழம்பு ஒரு சக்கரம் போன்று செயல் பட்டு மேற்பகுதியில் உள்ள கண்டங்களை நகர்ந்தலாம்
என்று ஒரு கருத்தை முன் மொழிந்தார்.
ஆனால் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும்
என்றும் ஹோம்ஸ் கூறினார்.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
அப்பொழுது அமெரிக்க நாட்டின் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பல்
ஒன்றில் பணி புரிந்த ஹாரி ஹாமன்ட் ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர்,அவரின்
கப்பலில் ஒலி அலைகளை கடலுக்குள் செலுத்தி அந்த அலைகள் கடலுக்கு அடியில் உள்ள
மலைகள் மற்றும் பள்ளத் தாக்குகளில் பட்டு திரும்பவும் கப்பலை வந்தடையும் நேரத்தைக்
கணக்கிட்டு கடலுக்கு அடியில் இருக்கும் நில அமைப்பை அறிந்தார்.
அப்பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி
ஒரு நீண்ட கடலடி மலைத் தொடர் இருப்பதுடன் அந்த மலைத் தொடரில் எரிமலைகள் அதிகம்
இருப்பதுடன் நில அதிர்ச்சிகளும் அந்த மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி ஏற்படுவதும்
தெரியவந்தது.
போர் முடிந்த பிறகும் ஹெஸ் அந்தக் கப்பலில் உலகம் முழுவதும் பயணம்
செய்து ஆராய்ச்சி செய்ததில் அந்தக் கடலடி மலைத் தொடரின் கிளைகள் இந்தியப் பெருங்
கடலுக்கு அடியிலும் பசிபிக் பெருங் கடலுக்கு அடியிலும் நீண்டு ஒரு கிரிகெட்
பந்தில் உள்ள முடிச்சு போன்று கண்டங்களுக்கு இடையில் நீண்டு இருப்பதை அறிந்தார்.
உடன் அவருக்கு ஆர்தர் ஹோம்ஸ் முன்மொழிந்த புவியடி பாறைக் குழம்பு
சுழற்சி கருத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் அந்தக் கடலடி எரிமலைத்
தொடரின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது
மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும், இதே
போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே மத்தியப்
பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல்தளப் பாறையை பக்கவாட்டுப் பகுதியை நோக்கி
நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் கூறினார்.
இதனால் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் அந்தக் கடலடி எரிமலைத்
தொடரின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை
நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையுடன் அந்தக்
கடலடி எரிமலைத் தொடருக்கு இருபுறமும் உள்ள கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும் கூறினார்.
அதாவது கடல்தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து கொண்டு
இருப்பதாக கூறிய வெக்னருக்கு மாற்றாக கண்டங்களுக்கு இடையில் புதிய கடல்தளம்
உருவாகி எதிரெதிர் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்
கடல்தரையுடன் கண்டங்கள் அதாவது கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாக ஹாரி
ஹெஸ் கூறினார்.
இதன் அடிப்படையில் தற்பொழுது பூமத்திய ரேகைக்கு வட பகுதியில் உள்ள
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல்தளம்
உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும், அதனால் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்
படும் கடல் தரையுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதாகவும் அதே போன்று கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் கூறப் படும் கடல்தரையுடன் ஐரோப்பாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது.
இதே போன்று பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் உள்ள அட்லாண்டிக்
கடலுக்கு அடியில் உள்ள கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி
வடமேற்கு மற்றும் தென் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
அதனால் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்
கடல்தரையுடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும் அதே போன்று
வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தரையுடன்
ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக்
கூறப் படுகிறது.
இந்த நிலையில் அந்தக் கடலடி மலைத் தொடரானது ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு
தென் பகுதியில் வளைந்து கிழக்கு மேற்கு திசையை நோக்கி நீண்டு இந்தியப் பெருங் கடலுக்குள் நுழைந்து
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி வளைந்து செங்கடலுக்குள் முடிவடைகிறது.
குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென் பகுதியில் கிழக்கு
மேற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும்
அந்தக் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி ஹாரி ஹெஸ்
கூறியபடி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்தால் அந்தக் கடலடி மலைத்
தொடருக்கு வடபகுதியில் உள்ள கடல்தளமானது வடக்கு திசையை நோக்கியும், அதே போன்று
அந்தக் கடலடி மலைத் தொடருக்கு தென் பகுதியில் உள்ள கடல்தளமானது தென் திசையை நோக்கியும்
நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
ஆனால் ஏற்கனவே ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை
நோக்கி நீண்டு இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி
வடகிழக்கு திசையை நோக்கி ஆப்பிரிக்கக் கண்டமானது கடல்தரையுடன் நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் கூறப் பட்ட நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென் பகுதியில் எப்படி
புதிய கடல் தளம் உருவாகி தெற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து
செல்ல இயலும்?
முக்கியமாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென் பகுதியில் குறிப்பாக
நன்னம்பிக்கை முனைப் பகுதியில் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் புதிய கடல்தளம்
உருவாகி எப்படி அதிக சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து அதிக சுற்றுவட்டப்
பகுதியை நிரப்ப இயலும்?
இதே போன்று தென் துருவ அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு
அடியில் புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் கூறப் படுகிறது.
அண்டார்க்டிக் கண்டமானது தென் துருவப் பகுதியில் குறைந்த சுற்றுவட்டப்
பகுதியில் உள்ளது.இந்த நிலையில் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்
திரேலியா ஆகிய கண்டங்களானது அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும்,
பின்னர் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர்
திசையை நோக்கி விரிவடைந்து நகர்ந்ததால் கடல்தரையுடன் கண்டங்களும் வடக்கு திசையை
நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக கூறப் படுகிறது.
நிச்சயம் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல்தளத்தால் அதிக
சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது.
எனவே கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்
புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
அதனால் கடல்தரையுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும்
விளக்கமானது பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன
பூமத்திய ரேகைக்கு வட பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி
நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம்
உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி அதாவது கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை
நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தரையுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு
திசையை நோக்கியும், அதே போன்று கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக்
கூறப் படும் கடல்தரையுடன் ஐரோப்பாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து
கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
இதே போன்று பூமத்திய ரேக்கைக்கு தென் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி எரிமலைத் தொடரின்
மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடமேற்கு மற்றும் தென் கிழக்கு ஆகிய
திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் வட மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்
கடல்தரையுடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
குறிப்பாக கண்டத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு
இடையில் உரசல் ஏற்படும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் கூறப் படுகிறது.
இந்த நிலையில் உண்மையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்
உருவாகி மேற்கு திசையை நோக்கி நகரும் கடல்தரையுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு
திசையை நோக்கியும் நோக்கியும் அதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்
உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகரும் கடல்தரையுடன் தென் அமெரிக்கக் கண்டமானது வட
அமேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு
இடையில் உள்ள கடல்தரைப் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை
தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட
வேண்டும்.
ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல்தரை பகுதியில்
இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கவில்லை.
இதற்கு கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து
புவியியலாளர்கள் தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைப்படமே சான்று.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் இரண்டு தனித் தனிக்
கண்டத் தட்டுகளாக மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி கடல்தரையுடன்
நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென்
அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல்
அப்பகுதியில் அட்லாண்டிக் கடல்தரையானது தொடர்ச்சியாக இருப்பது புலனாகியுள்ளது.
எனவே கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப்
பகுதியில் புதிய கடல்தரை உருவாகி கண்டங்களுடன் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற கற்பனை என்பதும்
நிரூபணமாகிறது.
இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும்
ஆஸ்திரேலியாவும் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து
அருகருகே இருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து, பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி
நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கூறப் படுகிறது.
ஆனால் தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும் ஐயாயிரம் கிலோமீட்டர்
இடைவெளியில் உள்ளது.
ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் புதிய கடல்தளத்தை
உருவாக்கி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்த்துவதாகக் கூறப் படும் கடலடி எரிமலைத் தொடர் எதுவும் இருப்பதற்கு
ஆதாரமாக இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள்
ஏற்பட்டு இருக்க வில்லை.
எனவே கண்டங்களுக்கு இடையில் புதிய கடல்தளம் உருவாகி கண்டங்களுடன்
நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறான விளக்கம் என்பதுடன்
கண்டங்கள் நிலையாக இருப்பதும் கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில
அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதைப் புலப் படுத்தும் உலக அளவிலான நில அதிர்ச்சி
வரைபடம் மூலம் நிரூபணமாகிறது.
அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடரில்
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரை
படத்தில் பதிவாகி இருக்கிறது.எனவே நில அதிர்ச்சிகளுக்கு எரிமலைகளே காரணம் என்பது
நிரூபணமாகிறது.
எனவே கண்டங்களின் மத்தியப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள்
ஏற்பவது கண்டங்களுக்கு அடியிலும் எரிமலைகள் தொடர்ச்சியாக இருப்பதை புலப்
படுத்துகிறது.
எரிமலைத் தொடர்கள் மூலமும் கண்டங்கள் நிலையாக இருப்பது
தெரியவந்துள்ளது.
இதே போன்று கடல்தரையின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகியுள்ள
எரிமலைத் தொடர்கள் மூலமாகவும் கடல்தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது
நிரூபணமாகியுள்ளது.
பூமியின் மிக ஆழமான பகுதியில் இருக்கும் எரிமலை ஊற்றிலிருந்து பூமியின் மேற்பகுதிக்கு வரும் பாறைக் குழம்பால்
புவிப்பரப்பில் எரிமலைகள் உருவாகின்றன.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் ஆப்பிரிக்கக்
கண்டத் திட்டுப் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடல்தரை வரை கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி
வரிசையாக ஏழு எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.
கானரித் தீவுகள் என்று அழைக்கப் படும் இந்த ஏழு எரிமலைத் தீவுகளும்
ஆப்பிரிக்கக் கண்டமானது கடல்தரையுடன் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு திசையை
நோக்கி நகர்ந்து வந்த பொழுது, ஒரு எரிமலை ஊற்றின் மேல் நகர்ந்து வந்ததாகவும்,
அப்பொழுது அந்த எரிமலை ஊற்றால் தொடர்ச்சியாக கடல்தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும்
துளைக்கப் பட்டதால் கானரி எரிமலைத் தீவுகள் உருவானதாக கூறப் படுகிறது.
உண்மையில் ஒரு எரிமலை ஊற்றின் மேல் ஆப்பிரிக்கக் கண்டமானது
கடல்தரையுடன் நகர்ந்து வந்தபொழுது கடல்தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் அந்த எரிமலை
ஊற்றால் துளைக்கப் பட்டு இருந்தால்மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி
வரிசையாக உருவாகி இருக்கும் அந்த எரிமலைத் தீவுகளின் தொண்மையானது மேற்கு திசையில்
இருந்து கிழக்கு திசையை நோக்கி செல்லச் செல்ல படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறில்லாமல் கானரி எரிமலைத் தீவு வரிசையில் கிழக்கு கோடியில்
உள்ள எல் கிரரோ எரிமலைத் தீவின் தொண்மையானது 1.12 மிலியன் ஆண்டாகவும்
அதற்கடுத்ததாக கிழக்கு திசையில் இருக்கும் லா கோமிரா எரிமலைத் தீவின் தொண்மையானது 12.0
மிலியன்
ஆண்டாகவும் இருப்பது தெரியவந்துள்ளது இந்த நிலையில் லா கோமிரா தீவுக்கு கிழக்கில்
உள்ள டென்னெரிபி என்ற எரிமலையின் தொண்மையானது அதற்கு முன்னதாக மேற்கு திசையில் உள்ள
லா கோமிரா எரிமலைத் தீவின் தொண்மையை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறில்லாமல் லா கோமிரா தீவுக்கு கிழக்கில் உள்ள டென்னெரிபி
எரிமலைத் தீவின் தொண்மையானது 11.6 மிலியன் ஆண்டுகளாக இருப்பது
ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதே போன்று கானரி எரிமலைத் தீவுத் தொடரில் உள்ள பூர்சிவென்சுரா என்ற
எரிமலைத் தீவின் தொண்மையானது 20.6 மிலியன் ஆண்டுகளாக இருக்கும் நிலையில், பூர்சிவென்சுரா எரிமலைத்
தீவுக்கு கிழக்கு திசையில் உள்ள லான்சரொட்டி எரிமலைத் தீவின் தொண்மையானது 15.5
மிலியன்
ஆண்டுகளாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டுப் பகுதியில் இருந்து
அட்லாண்டிக் கடல்தரை வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரி மலைத் தீவுகளின்
தொண்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம்
அட்லாண்டிக் கடல்தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது
நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் கினியா வளை
குடாப் பகுதியில், தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி வரிசையாக
உருவாகி இருக்கும் கேமரூன் எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் தொன்மையும் தென்
மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி செல்லச் செல்ல படிப்படியாக
அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கேமரூன் எரிமலைத் தீவுத் தொடரில் தென் மேற்குப் பகுதியில்
உள்ள பாகலூ எரிமலைத் தீவின் தொண்மையானது 5 மிலியன் ஆண்டுகளாகவும் அதற்கடுத்ததாக
வடகிழக்கு திசையில் உள்ள சா டோம் எரிமலைத் தீவின் தொண்மையானது 14 மிலியன்
ஆண்டுகளாகவும், அதற்கடுத்ததாக வடகிழக்கு திசையில் உள்ள பிரின்சிபே எரிமலைத் தீவின்
தொண்மையானது 31 மிலியன் ஆண்டுகளாகவும் இருக்கும் நிலையில் பிரின்சிபே எரிமலைத்
தீவுக்கு அடுத்ததாக வடகிழக்கு திசையில் உள்ள பிக்கோ எரிமலைத் தீவின் தொண்மையானது
ஒரு மிலியன் ஆண்டுகள் தொன்மையாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் கினியா வளை
குடாப் பகுதியில் உள்ள கேமரூன் எரிமலைத் தீவுகளில் உள்ள எரிமலைகளின் தொண்மையானது
தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி செல்லச் செல்ல படிப்படியாக
அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் அடிப்படையிலும் அட்லாண்டிக்
கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த உண்மைக்கு மாறாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய
கடல்தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும் அதனால் கடல்தரையுடன் அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள
கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பும் புவியியல்
வல்லுனர்களுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்து விட்டது.
அதாவது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தரை உருவாகி
எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் விட்டம்
அதிகரிக்க வேண்டுமே என்ற சந்தேகம்தான் அது.
உடனே சே சே அப்படியெல்லாம் இருக்காது எனவே பூமியின் வேறு பகுதியில்
கடல்தரையானது பூமிக்குள் சென்று அழிந்து கொண்டு இருக்கவேண்டும் என்று
கருதினார்கள்.
இந்த நிலையில் டூசோ வில்சன் என்ற புவியியலாளர் பசிபிக் கடல் பகுதியின்
வரைபடத்தைப் பார்த்தார்.அதில் ஹவாய் எரிமலைத் தீவுகளானது தென் கிழக்கு திசையில்
இருந்து வட மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருப்பதைக் கவனித்தார்.
உடன் அதன் அடிப்படையில் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கடலடி
எரிமலைத் தொடர் பகுதியில் ஏற்கனவே கூறியபடி புதிய கடல்தளம் உருவாகி வடமேற்கு
மற்றும் தென் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும், அதில் தென் கிழக்கு திசையை நோக்கி செல்லும் கடல் தரையானது தென்
அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று அழிவதாகவும், அதே போன்று வட மேற்கு திசையை
நோக்கி நகரும் பசிபிக் கடல்தரையானது பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய
தீவுகளுக்கு அடியில் சென்று அழிவதாகவும் கூறினார்.
குறிப்பாக வடமேற்கு திசையை நோக்கி பசிபிக் கடல்தரையானது நகர்ந்து
கொண்டு இருக்கும் நிலயில் பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலை ஊற்றின் மேல்
நகர்ந்து வந்ததாகவும், அதனால் அந்த எரிமலை ஊற்றால் தொடர்ந்து துளைக்கப் பட்டதால்
பசிபிக் கடல்தரையின் மேல் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி
வரிசையாக ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவானதாகவும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் பசிபிக் கடல் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட எரிமலைத் தீவு
வரிசைகள் உருவாகி இருக்கின்றன.
இந்த நிலையில் உண்மையில் பசிபிக் கடல்தரையானது தென் கிழக்கு திசையில்
இருந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் பசிபிக் கடல் பகுதியில்
உள்ள மற்ற எரிமலைத் தீவு வரிசைகளும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி
இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறில்லாமல் பசிபிக் கடலில் உள்ள லைன் எரிமலைத் தீவு
வரிசையும் லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு
இணையாக உருவாகாமல் இணையற்ற முறையில் உருவாகி இருக்கிறது.
இவ்வாறு பசிபிக் கடல்தரையின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில்
உருவாகி இருக்கும் எரிமலைத்தீவு வரிசைகள் மூலமும் பசிபிக் கடல் தரையானது நிலையாக
இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று உண்மையில் பசிபிக் கடல் தரையானது தென் கிழக்கு திசையில்
இருந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இருக்கும் பொழுது கடல் தரைக்கு அடியில்
உள்ள ஒரு எரிமலை ஊற்ற்றால் துளைக்கப் பட்டு ஹவாய் எரிமலைத் தீவு வரிசை உருவாகி
இருந்தால் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள எரிமலைகளின் தொண்மையானது தென்
கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கிச் செல்லச் செல்ல பாறைகளின்
தொண்மையானது படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறில்லாமல் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் தென் கிழக்கு
திசையில் கடைசியில் உள்ள ஹவாய் எரிமலைத் தீவின் தொண்மையானது 5 மிலியன் ஆண்டுகளாக
இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஹவாய் எரிமலைத் தீவுக்கு வடமேற்கு திசையில் 519 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள கவாய் எரிமலைத் தீவின் தொண்மையானது 5.1 மிலியன்
ஆண்டுகளாகவும் அதே நேரத்தில் ஹவாய்
எரிமலைத் தீவுக்கு வடமேற்கு திசையில் 565 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியாகு
எரிமலைத் தீவின் பாறைகளின் தொண்மையானது 4.89 மிலியன் ஆண்டுகள்
தொன்மையாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதே போன்று ஹவாய் தீவிற்கு வட மேற்கு திசையில் 3520 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள உர்யாகி எரிமலைத் தீவின் பாறைகளின் தொண்மையானது 43.4 மிலியன் ஆண்டுகளாக
இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஹவாய் எரிமலைத் தீவுக்கு வடமேற்கு
திசையில் 3668 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்மி எரிமலைத் தீவுப் பாறைகளின்
தொண்மையானது 39.9 மிலியன் ஆண்டுகளாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள எரிமலைத் தீவுகளின்
தொண்மையானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி செல்லச் செல்ல
பாறைகளின் தொண்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன்
மூலமும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ஸ்கிரிப்ட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
டாக்டர் அந்தோணி கொபெர்ஸ் என்ற புவியியல் வல்லுநர் பசிபிக் கடல் பகுதியில் உள்ள
லைன் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளிலும் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து
அவற்றின் தொண்மையை மதிப்பிட்ட பொழுதும் அந்தத் தீவு வரிசைகளில் பாறைகளின்
தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாக
தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று பசிபிக் கடல்
பகுதியில் உள்ள துமாத்து எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் பாறைகளின்
தொன்மையும் படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும்
தெரியவந்துள்ளது.
எனவே பசிபிக் கடல் பகுதியில்
உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக
அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது
நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இந்த நிலையில் ஹார்வர்ட்
பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் சிசுன் ஹுவாங் மேற்கொண்ட ஆய்வில்
ஹவாய் தீவில் உள்ள மோனா லோவா எரிமலை மற்றும் மோனா கியா எரிமலைப் பாறைகளின் வேதிச்
சேர்மாணமும் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மோனோ லோவா எரிமலைப்
பாறையில் ஈயத்தின் ஐசோ டோப்புகளான ஈயம் 208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள
விகிதாச்சாரமானது அதிகமாகவும் அதே நேரத்தில் மோனோ கியா எரிமலைப் பாறைகளில் ஈயம்
208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள விகிதாச்சாரமானது குறைவாக இருப்பதும் கண்டு
பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் ஹவாய் தீவில் உள்ள இந்த இரண்டு
எரிமலைகளும் தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதாக சிசுன்
ஹுவாங் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு ஒரே தீவில் உள்ள
எரிமலைகளானது தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதன்
அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று பசிபிக் கடல்
பகுதியில் உள்ள சமோவா எரிமலைத் தொடரிலும் உள்ள தீவுப் பாறைகளின் வேதிச் சேர்மாணமும்
வேறுபட்டு இருப்பதுடன் மார்கொசாஸ் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் வேதிச் சேர்மாணமும்
வேறு பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இவ்வாறு பசிபிக் கடல்
பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் வேதிச் சேர்மானமானது
வேறுபட்டு இருப்பதன் அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது
நிரூபணமாகிறது.
இவ்வாறு கடல்தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது பல புவியியல்
ஆதாரங்கள் மூலமும் நில அதிர்ச்சி வரைபட ஆதாரம் மூலமும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்துக் குமுறியதாலேயே இத்தாலி
நாட்டின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது நில அதிர்ச்சி
மையத்தைச் சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகும் வளைய வடிவ வரப்பு மேடுகள்
உருவாகி இருந்ததைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலமும் அதே போன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் எரிமலைகளில்
இருந்து வெளியாகும் ரேடான் வாயு கசிந்தது கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையிலும்
நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட
பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் வலையவடிவ வரப்பு மேடுகள் உருவாகி
இருந்ததைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமாகவும் அதே போன்று
அப்பகுதியில் ரேடான் வாயு கசிந்ததற்கு ஆதாரமாக வளி மண்டல மேலடுக்கில் அசாதாரணமாக
வெப்ப நிலை உயர்வு ஏற்பட்டதைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமாகவும்
பூமிக்கு அடியில் எரிமலை வேடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும்
சுனாமியும் ஏற்பட்டு இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட
பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய
வடிவ வரப்பு மேடுகள் உருவாகி இருந்ததைப் பதிவுசெய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமாக
பூமிக்கு அடியில் எரிமலை வெடித்துக் குமுறியதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும்
ஏற்பட்டு இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவுக்கு அருகில் கடலுக்கு அடியில் நில
அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை
உயர்ந்து காணப் பட்ட சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு நில
அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு வளைய வடிவ வரப்பு மேடுகள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப்
பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்துக் குமுறியதாலேயே தெற்காசிய
சுனாமி உருவாகி இருக்கிறது.
விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
Comments