பொது நலன் கருதி வெளியிடப் படுகிறது.
விஞ்ஞானி கணபதி பொன்முடியின் சுனாமி ஆய்வறிக்கை. பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததாலேயே ஜப்பானிலும் ஹைத்தி தீவிலும் இந்தோனேசியாவிலும் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு நான் தற்செயலாக நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் வெளியிடப் பட்டு இருந்த ஒரு செய்திக் கட்டுரையை படித்தேன். அதில் ஒரு மலையின் மேல் இரண்டு தொல் விலங்கியல் வல்லுனர்கள் நின்று கொண்டு மண் தோண்டும் கருவியால் தரையை தோண்டிக் கொண்டு இருக்கும் படம் வெளியாகி இருந்தது. அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும்,அவர்கள் நின்று கொண்டு இருக்கும் இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. உடன் எனக்கு அந்த மலையும் மலையைச் சுற்றியுள்ள நிலப் பகுதியும் கடலுக்கு அடியில் இருந்து அப்படியே மேல் நோக்கி உ...