வணக்கம் நண்பர்களே!
கண்டங்கள் நிலையாக இருப்பதற்கு ஆணித்தரமான ஆதாரம் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே பசிபிக் கடல் தரையானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகர்ந்த பொழுது ஒரு எரிமலை மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால்தான், பசிபிக் கடல் தரையின் மேல் எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் பட்ட நிலையில் . பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையும் லைன் எரிமலைத் தீவு வரிசையும் அதே போன்று லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருந்தன் அடிப்படையில் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தேன்.
தற்பொழுது அதே போன்று இன்னொரு ஆணித்தரமான ஆதாரமும் கிடைத்து இருக்கிறது.
வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அனாஹிம் என்ற எரிமலைத் தொடர் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி உருவாகி இருப்பதற்கு அந்தக் கண்டமானது கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த பொழுது பூமிக்கு அடியில் இருந்த ஒரு எரிமலை மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதே காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது.
ஆனால் அதே பகுதியில் கரிபால்டி என்று அழைக்கப் படும் ஒரு எரிமலைத் தொடரானது வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
இதற்கு நகரும் கண்டங்கள் கருத்தாக்கத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிலேயே வெல்ஸ் கிரே என்று அழைக்கப் படும் இன்னொரு எரிமலைத் தொடரும் வடமேற்கு திசையில் தென் கிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது .
மேலும் அதே பகுதியில் ஸ்டிக்கின் என்ற எரிமலைத் தொடரும் திசை மாறி உருவாகி இருக்கிறது.
குறிப்பாக இந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த எரிமலைகள்.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலம் அந்தக் கண்டமானது நிலையாக இருப்பது ஆணித்தரமாக நிரூபணமாகிறது.இது தொடர்பான எனது விரிவான ஆய்வறிக்கையை விரைவில் வெளியிடுகிறேன்.
நன்றி !
அன்புடன்,
விஞ்ஞானி.கணபதி பொன்முடி
Comments