பொய்த்துப் போன கருத்தாக்கங்கள்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி
கண்டத் தட்டு நகர்ச்சி மற்றும் வெப்ப மையக் கருத்தாக்கம் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் உள்ள தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளின் ஓரப் பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று இணையாக உருவாகி இருக்கின்றன. இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களிலும் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளின் அருகில் வாழ்ந்து மடிந்த மெசோசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் தரையில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் அக்ன்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்திருக்க இயலாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் பிறகு பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.(continental drift) ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்ந்தும் சக்தி எது என்று ...