பத்திரிகைச் செய்தி வெளியீடு.
பத்திரிகைச் செய்தி வெளியீடு. விஞ்ஞானி.க.பொன்முடி.சென்னை. பொருள்:எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம். இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாறைத் தட்டில் அமைந்திருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்தை ஏற்க இயலாது. பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் ஒன்றாக இருந்ததாகவும், அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் இருந்ததாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்பொழுது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பாறைத் தட்டுகள் நகர்வதால் அவற்றின் மேல் அமைந்திருக்கும் கண்டங்களும் நகர்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரே பாறைத் தட்டின் மேல் அமைந்திருப்பதாகக் கூறப் படும் இரண்டு நிலப் பகுதிகள் எப்படி எதிர் எதிர் திசையில் நகர்ந்து சென்றிருக்க முடியும்? நில அதிர்ச்சிக்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் நகர்ந்து கொண்டிருப்பதே காரணம் என்று ஒரு தவறான விளக்கத்தைக் கூறிக் கொண்டிருக...