tsunami1000

தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதே போன்று,கண்டங்கள் கடல் தரையுடன் நகரும் பொழுது,கடலுக்கு அடியில் இருக்கும் கண்டங்களின் அடிப்படகுதிக்கும்,தீவுகளுக்கு அடிப் பகுதியிலும்,உரசியபடி நகர்ந்து செல்வதாகவும்,அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல்நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி அலைகள் உருவாகுவாகு வதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு,வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம்'' ஒன்றை வெளியிட்டனர். அந்த 'உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'தனித் தனியாகாக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இந்த நிரையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் ,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியை வரையறை செய்ய இயல வில்லை. எனவே இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல்தரைப் பகுதியானது ''வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி ''என்றும் அழைக்கப் படுகிறது. இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் கரீபியன் பாறைத் தட்டு என்று அழைக்கப் படும், அந்தப் பாறைத் தட்டானது,எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை. சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது அந்த பாறைத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர். ஆனால் வேறு சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் பாறைத் தட்டானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது அந்த பாறைத் தட்டு, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர். இந்த இரண்டு கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை. இந்த நிலையில்,ஜெர்மனியின்,ப்ரிபெர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த,புவியியல் ஆராய்ச்சியாளரான,ரெய்க் பாக்மான் கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் குறித்த கருத்துக்களை ஆய்வு செய்து,தற்பொழுது எந்தக் கருத்தாலும்,கரீபியன் பாறைத் தட்டின் தோற்றத்தை 'நிரூபிக்க முடியாது' என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்,குறிப்பாகக் கரீபியன் பாறைத் தட்டையானது, எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்பதை நேரிடையாகக் குறிப்பிடாமல்,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால்,ஹைத்தி தீவில், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டது,என்று 'USGS'அழைக்கப் படும், ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின், புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ''நிரூபிக்கப் படாத கருத்தின் அடிப்படையில்'' ''யூகப்பூர்வமான'' விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள். உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம், எங்கே உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று 'நிரூபித்தால் மட்டுமே' அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர்களின் விளக்கத்தை, 'அறிவியல் பூர்வமான விளக்கமாக' ஏற்க முடியும். இந்த நிலையில் ,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ஆங்கில ''S''எழுத்து வடிவில் உருவாகி இருக்கும். மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சி யாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் உண்மை யென்றால், அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும், பாறைகளின் தொன்மையானது, சில லட்சம் ஆண்டுகளாகவும், அதே நேரத்தில்,கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, பல கோடி ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில்,அமெரிக்க நாட்டின் புவியியல் வல்லுனரான, ராண்டல் ரைட் என்ற ஆராய்ச்சியாளர் ,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும்,புனித பால் பாறைத் தீவு மற்றும் புனித பீட்டர் பாறைத் தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டார்.அந்த ஆய்வில் அந்த தீவுகளில் இருந்த பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பதைக் கண்டு பிடித்தார். அவரது ஆய்வு முடிவானது, அமெரிக்கப் புவியியல் கழகத்தின் ஆய்வு இதழிலும் வெளியிடப் பட்டு இருக்கிறது. குறிப்பாக கிரீன்லேண்ட் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,பூமி தோன்றி 'நானூற்றி ஐம்பது' கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில்,புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையே, நானூற்றி ஐம்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலம்,பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடல் தளமானது, நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில்,அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு,அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது, அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விடையளிக்கும் விதமாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர். அதாவது அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதை போலவே, பசிபிக் கடல் பகுதியிலும் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு தொடர்ந்து உருவாகும் புதிய கடல் தளங்களானது, பாசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து செல்வதாகவும்,அப்படி சென்ற பிறகு, வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக மாறி, மேல் நோக்கி உயர்ந்து, கண்டங்களையும் கடல் தளத்தையும் பொத்துக் கொண்டு, கண்டங்களின் மேலும், கடல் தளங்களின் மேலும், எரிமலைகளாக உருவாகுகின்றன, என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறு கடல் தளங்களானது, கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும்,உரசியபடி நகர்ந்து செல்வதால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் நில் அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதனால்,அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள பட்டு, சுனாமி அலைகள் உருவாகுவதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறு அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து கடல் தளங்களானது,உருவாகும் நிலையில்,பசிபிக் கடல் பகுதியில் கடல் தளங்களானது, கண்டங்களுக்கு அடியிலும், தீவுகளுக்கு அடியிலும், சென்று அழிவதால்,பூமியின் அளவானது,பெரிதாகாமல் ஒரே அளவாக இருக்கிறது, என்றும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். முக்கியமாகக் கடல் தரை குறித்த ஒரு வியப்பான விஷயம் என்னெவென்றால் கண்டங்களின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் ,கடல் தளத்தின் தொன்மையானது, அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருக்கிறது.இதற்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர். அதாவது,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.இவ்வாறு கண்டம் பிரிந்ததற்கு, அந்தக் கண்டத்திற்கு அடியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைச்களை நோக்கி நகர்ந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது போன்று, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ''சூப்பர் கண்டம் ' உருவாகிப் பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்ந்து பிரிவதால்,கண்டங்களின் தொன்மையை விட, கடல் தளத்தின் தொன்மையானது, குறைவாக இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேலும், கடல் தளங்களின் மேலும், எரிமலைகளானது வரிசையாக உருவாகி இருக்கின்றன. இவ்வாறு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகளானது வரிசையாக உருவாக்கி இருப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கம் கூறுகின்றனர். அதாவது கடல் தளமும் கண்டங்களும் மெதுவாக நகரும் பொழுது ,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் எரிமலைப் பிழம்பால், தொடர்ச்சியாக துளைக்கப் படுவதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைகளானது வரிசையாக உருவாகி இருக்கிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் உண்மையென்றால், கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும்,அணாகிம்,எரிமலைகள்,ஸ்டிக்கின் எரிமலைகள்,கரிபால்டி எரிமலைகள் மற்றும் வெல்ஸ் கிரே எரிமலைகளானது, ஒன்றுக் கொன்று இணையாக, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில், வெவேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு அந்த எரிமலைகளானது, வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதற்கு, புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை. இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதன் மூலம்,வட அமெரிக்கக் கண்டமானது, நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூணம் ஆகி இருக்கிறது. கண்டங்களின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் ,கடல் தளத்தின் தொன்மையானது, அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருந்தால், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும், ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறதுஅதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது என்ற கேள்வியும் எழுகிறது. அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் டைனோசர்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்க் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.. அதே போன்று பூமியானது, இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருவதால், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள், துருவப் பகுதிகளில் சூரியன் உதிக்காத நிலையில்,சூரிய ஒளியின் உதவியுடன், ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழக் கூடிய தாவரங்கள் மரங்கள் எப்படி வாழ்ந்தன வளர்ந்தன என்ற கேள்வியும் எழுகிறது. அதே போன்று பாலூட்டிகளைப் போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை விலங்கினங்கள் துருவப் பகுதிகளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எப்படி வாழ்ந்தன என்ற கேள்வியும் எழுகிறது. அதே போன்று டைனோசர்கள், எப்படி ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,துருவப் பகுதிகளில் எப்படி வாழ்ந்தன என்ற கேள்வியும் எழுகிறது.

Comments

Popular posts from this blog

fossils study

Abcd report

tsunami science