My Explanation for the distribution fossils
ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தும் ஆர்க்டிக் புதைபடிவங்கள். ‘’ஆர்க்டிக் பகுதியில் தொடந்து ஐந்து மாதங்கள் இரவு நீடிக்கும் நிலையில், டைனோசர்கள் வாழ்ந்த அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி வார்ந்தன?’’ ( சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு சென்டிகிரேட் வெப்ப நிலை தேவை. . ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள எட்மாண்டோ சாரஸ்,என்ற டைனோசரின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதுபோன்ற பெரிய அளவு டைனோசர்கள் அடை காப்பது இல்லை.எனவே ஆர்க்டிக் பகுதியில் கால்பந்து அளவு உள்ள,டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.) பூமியானது தன் அட்சில் இருபத்திமூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச்சுற்றிக்கொண்டு இருப்பதால், துருவப்பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து பகலும், அதே போன்று, ஐந்து மதங்கள் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இவ்வாறு ஐந்து மாதங்கள் தொடர்ந்து நீடிக்கும் குளிர் காலத்தில், வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரி வரை செல்கிறது. இந்தநிலையில் தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச்சேர்க்கை செய்து தங்களின் வளர்ச்சிக்குத் தேவையா...