Posts

Showing posts from 2024

நம் பூமி, ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் உருவானது.

நம் பூமி, ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் உருவானது. கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மலைகளின் மேலும், பாலை வனங்களிலும், கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,மலைகளும், நிலப் பகுதிகளும்,ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்த பிறகு,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதை, ஒரு புத்தகத்தில் வெளியாகி இருந்த கட்டுரைப் படித்தபொழுது, தற்செயலாகக் கண்டு பிடித்தேன். ஆனால், கிரகங்கள் எப்படி தோன்றின? என்பதைக் கிரகங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்து, கண்டு பிடித்தேன். எனது கண்டு பிடிப்பு. நமது பூமியானது முன் ஒரு காலத்தில் நமது சூரியன் போன்று விண் வெளியில் பிரகாசித்துக் கொண்டு இருந்த பிறகு,சூரியனால் ஈர்க்கப் பட்டது. அப்பொழுது சூரியனை நோக்கி ஒரு வால் நட்சத்திரம் போன்று விரைந்து வந்தது.அப்பொழுது அதன் மேல் பகுதியில் இருந்த இலேசான வாயுக்கள் விண்வெளியில் இறைக்கப் பட்டது. இறுதியாக அதன் மையத்தில் உருவாகி இருந்த,ஆக்சிஜன்,கார்பன்,கந்தகம்,இரும்பு போன்ற கனமான வாயுக்கள் மட்டும்,திரண்டு ஒரு கிரகமாக மாறி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. கண்டு பிடித்தது எப்படி? பன்னெடுங் காலமாகவே நமது பூமி உள்பட மற்ற கிரகங்க...