சுனாமிக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உயிரிழப்பை ஏற்படுத்திய சுனாமிக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன். கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது,அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறிக் கொண்டு இருக்கும் நிலையில், முப்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்... தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததை எடுத்துக் காட்டி அதன் அடிப்படையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதை நிரூபித்து இருக்கிறேன். அதே போன்று, கண்டங்களும் நிலையாக இருப்பதை எடுத்துக் காட்டி இருக்கிறேன். அதே ப...