கடல் மட்டம் உயர்வால், பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
கடல் மட்டம் உயர்வால், பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி. வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது.இந்த நிலப் பகுதியானது பெருமை புரோஸ்ட் என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள் மனுவுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு எகிப்து மம்மிகளைப் போன்று காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரதம் காணப் படுகிறது.குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமலையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர். உறைபனி நிலத்...