கடல் உருவானதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் தவறு.
நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக துருவப் பகுதியில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது ஆராய்ச்சியாளர்களை மிகவும் ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. அத்துடன் அந்த நீரானது எப்படி நிலவுக்கு வந்தது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு சில ஆராய்ச்சியாளர்கள்,நிலவுக்கு வால் நட்சத்திரங்கள் மூலம்,நீர் வந்து இருக்கலாம் என்று நம்புகின்றனர். இதே போன்று,பூமியிலும்,குறிப்பாகக் கடலில் இருக்கும் அளவில் நீர் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஏனென்றால்,தற்பொழுது,பூமி நிலா உள்பட அணைத்து கிரகங்களும் துணைக் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு,ராட்சத விண் மேகமானது,தட்டையாகச் சுருங்கிச் சூழன்றதால்,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைத் தொடர்ந்துஇருந்த தட்டையான பகுதியில் இருந்த,தூசிகளும் வாயுக்களும் ஆங்காங்கே உருண்டு திரண்டதால் கிரகங்களும் துணை கிரகங்களும் உருவானதாக நம்புகின்றனர். இவ்வாறு கிரகங்கள் உருவான பொழுது,சூரியனுக்கு அருகில்,வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால்,சூரியனுக்கு அரு...