பனிப் பிரதேசத்தில்,டைனோசர் முட்டை பொரியாது,கடல் மட்டம் தாழ்வாக இருந்திருக்கிறது.



துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவது, புவியியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பூமியானது இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச் சுற்றி வருவதால்,செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை,பூமியின் வட துருவப் பகுதியானது சூரியனை விட்டு விலகியும்,அதே நேரத்தில், பூமியின் தென் துருவமானது சூரியனை நோக்கிச் சாய்ந்தும் இருக்கிறது.
இதனால் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை, வட துருவப் பகுதியில் தொடர்ந்து இரவு நீடிக்கிறது.அதே நேரத்தில் பூமியின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆறு மாத காலம் பகல் நிலவுகிறது.
அதன் பிறகு மார்ச் முதல் செப்டம்பர் வரை,பூமியின் வட துருவமானது சூரியனை நோக்கியும், அதே நேரத்தில் பூமியின் தென் துருவமானது சூரியனை விட்டு விலகியும் இருக்கிறது.
இதனால் மார்ச் முதல் செப்டம்பர் வரை ,பூமியின் வட துருவப் பகுதியில் தொடர்ந்து ஆறு மாத காலம் பகல் நிலவுகிறது.அதே நேரத்தில் தென் துருவப் பகுதியில் தொடர்ந்து ஆறு மாத காலம் இரவு நீடிக்கிறது.
இது போன்று தொடர்ந்து ஆறு மாத காலம் இரவு நீடிக்கும் பொழுது, தொடர்ந்து பல மாதங்கள் உறை பனி நிலையில் இருக்கிறது. எனவே தாவரங்களால் நீரை தரையில் இருந்து உறிஞ்ச இயலாது.அதே போன்று சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்கவும் இயலாது.இந்த நிலையில் பூமியின் வட துருவப் பகுதியிலும்,தென் துருவ அண்டார்க்டிக் கண்டத்திலும், யானையை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்கள் கூட்டமாக வாழ்ந்திருப்பது,அந்தப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

( வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவ டைனோசர்கள்)




(அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவ டைனோசர்கள்)

எனவே டைனோசர்கள் வாழ்ந்த காடுகள் எப்படி உருவாகின?என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்பொழுது வடதுருவப் பகுதியில் பனிக் கரடி,ஓநாய்,மஸ்க் ஆக்ஸ்,முயல்,நரி போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் வாழ்கின்றன பாலூட்டி வகை விலங்கினங்கள் உணவை செரிப்பதன் மூலம் சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்து கொள்வதுடன்,உடல் வெப்பத்தை பாதுகாப்பதற்காக மயிர்,கொழுப்புப் படலம் போன்ற தகவமைப்புகளையும் கொண்டிருகின்றன.
இதனால் பாலூட்டி வகை விலங்கினங்களால் குளிர் பிரதேசத்திலும் கடுங் குளிர் நிலவும் இரவுக் காலத்தையும் சமாளித்து வாழ்கின்றன .ஆனால் இது போன்ற தகவமைப்புகள் இல்லாத ஊர்வன வகை விலங்கினங்களான பாம்பு,முதலை,ஆமை போன்ற விலங்கினங்கள் அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதிக்கு அருகிலேயே வாழ்கின்றன.
முட்டைகள் பொரியாது.


அத்துடன் ஊர்வன வகை விலங்கினங்கள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்கின்றன.இதன் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால்,அதற்கு இருபத்தி ஏழு முதல் முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
ஆனால், அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதியில்,ஆண்டு சராசரி வெப்ப நிலையானது, இருபது சென்டி கிரேடாக இருக்கிறது. இந்தக் குறைந்த வெப்ப நிலையில் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரியாது.
The numbers are “abnormal” and need explanation, said Hong-Yu Zhang of Shandong University of Technology, Zibo, China, in a recent email. For instance, there are far more fossilized eggs of dinosaurs than of other reptiles, he added.

ஆக்சல் ஹைபெர்க் தீவுக்கு அருகில் உள்ள பைலட் தீவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ஹேட்ரோ சாராஸ் என்று அழைக்கப் படும், வாத்தின் அலகைப் போன்ற வாயை உடைய தாவர உண்ணி வகை டைனோசர் மற்றும், கொன்று திண்ணி வகையைச் சேர்ந்த டைரானோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதையும் மெக்கில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர், ஹான்ஸ் லார்சன் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே டைனோசர்கள் பனி மான்களைப் போன்று குளிர்கால இடப் பெயர்ச்சியை மேற்கொண்டதா? அல்லது பனிக் கரடியைப் போன்று அரிதுயில் மேற்கொண்டதா? என்றெல்லாம் விலங்கியல் வல்லுனர்களும் புவியியல் வல்லுனர்கள் யோசித்தார்கள்.

ஆனால் தற்பொழுது ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் குறிப்பாக ஆக்டிக் பகுதியில் உள்ள காக்கநாடு ஆற்றுப் பகுதியில் டைனோசர்களின் முட்டையின் புதை படிவங்களும், அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியில் சிறிய டைனோசர்களின் பற்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் துருவப் பகுதிகளில் டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து ஆண்டு முழுவதும் அங்கேயே வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால் அதற்கு குறைந்த பட்சம் முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை,ஆனால் துருவப் பகுதிகளில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பதினைந்து முதல் இருபது சதவீதமாக இருக்கிறது.
எனவே டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில்,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.


குறிப்பாக, ராபர்ட் ஸ்பைசர் என்ற தொல் தாவரவியல் வல்லுநர்,அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள கொல் வில்லி ஆற்றுப் பகுதியில்,வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடிய, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான , பெரணி மற்றும் சைகேட் என்று அழைக்கப் படும் வகைத் தாவரத்தின் புதை படிவங்களையும் கண்டு பிடித்துள்ளார்.
எனவே வட துருவப் பகுதியில் டைனோசர்கள் காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ஆறு மாத கால இரவுக காலத்திற்குப் பிறகு டைனோசர் கூட்டதிற்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு அடர்ந்த காடுகள் உருவாக் இயலாது.எனவே டைனோசர்கள் காலத்திற்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.


(ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும்,ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ,வாத்து அலகு டைனோசரின் முதுகு முள் எலும்பு)




துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குப் பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்படையில், புவியியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனர்களால் விளக்கத்தைக் கூற இயலவில்லை.
Comments