பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

'' நீங்கள்  ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்- டாக்டர் ஹான்ஸ் லார்சன்'' 
arcdin.jpgarcdin.jpg
66ma.jpg66ma.jpg
arcticmystery4arcticmystery4
http://www.gmanetwork.com/news/story/352530/scitech/science/miniature-t-rex-was-king-of-the-arctic
(Dinosaurs once foraged beneath the Southern Lights in Antarctica  )
arcticmystery27.jpg(Dinosaurs once foraged beneath the Southern Lights in Antarctica ) arcticmystery27.jpg
http://www.bbc.co.uk/news/science-environment-12378934
ஒரே இனத்தைச் சேர்ந்த தரைவாழ் விலங்கின் புதை படிவங்கள், கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில், கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுநரான, டாக்டர் ஆல்பிரட் கூறிய விளக்கம் தவறு, என்பது துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடற் கரையோரம் வாழ்ந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் ,மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்கள்,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் ,அட்லாண்டிக் பெருங் கடலுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.

இதன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர்,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது.எனவே மெசோ சாரசின் புதை படிவங்கள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததே காரணம் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்திருக்கிறது என்றும் ,தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.

ஆனால் சுனாமி மற்றும் சூறாவளியால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் தொற்றிக் கொண்டு, விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குத் தற்செயலாகப் பரவி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ் பெர்ஜன் என்ற பனிமலைகள் உள்ள தீவில் வெப்ப மண்டலப் பகுதியில் வளரக் கூடிய பெரணி மற்றும் கள்ளியின்  புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

அதன் அடிப்படையில்,அந்தத் தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,அதன் பிறகு வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் விளக்கம் கூறினார்.
wegenerworkwegenerwork
அத்துடன் ரஷ்யாவைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரும் தனது வருங் கால மாமனாருமான விளாடிமிர் கோப்பருடன் சேர்ந்து,ஒத்த கால நிலையில் வளரும் தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு, உலக வரை படத்தைப் பொருத்தினார்.

அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்குப் பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.

அந்தப் பாஞ்சியாக் கண்டத்தைச் சுற்றிலும் பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.

அதன் பிறகு,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.

அதன் பிறகு வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் அதே போன்று ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்த,யூரேசியாக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.

இதே போன்று தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இனைந்ததாகவும்,அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டம் உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் இணைந்ததாகவும்,வெக்னர் கூறினார்.

அதே போன்று,இந்தியாவும் மடகாஸ்கர் நிலப் பகுதியும் இணைந்த நிலையில்,பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,எட்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் நிலப் பகுதியில் இருந்து பிரிந்த இந்தியாவானது, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து, ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலை உருவானதாகவும் வெக்னர் கூறினார்.

ஆனால் கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் காணப் படவில்லை.

இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கப்பல் படையில் பணியாற்றிய, டாக்டர் எட்மண்ட் ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர்,அவரின் கப்பலில் சோனார் என்ற கருவியின் மூலம் கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்திய பிறகு, அந்த அலைகள் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு எதிரொலிக்கப் பட்டு திரும்ப வரும் நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம், கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பற்றி அறிந்தார்.போர் முடிந்த பிறகும் ஹாரி ஹெஸ் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

அப்பொழுது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,ஒரு கடலடி மலைத் தொடரானது ,வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு உருவாகி இருப்பதும், அதில் பல எரிமலைகள் இருப்பதுடன் அந்தக் கடலடி எரிமலைத் தொடரில்,அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
arcticmystery24arcticmystery24
இதன் அடிப்படையில் அவர்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளம் பாறையாக உருவாகுவதாகவும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.

இதே போன்று மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், பூமிக்கு அடியில் இருந்து வரும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாக உருவாகும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழையக் கடல் தளப் பாறைகளை,கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளப் பாறையாக உருவாகுவதகவும்,இதே போன்று தொடர்ந்து நடை பெறுவதால்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,புதிய கடல் தளம் தொடர்ந்து உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து  கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஹாரி ஹெஸ் கண்டங்கள் நகர்வதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.

இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்களும் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது பிளேட் டெக்டானிக் தியரி என்று அழைக்கப் படுகிறது.
fivecont.giffivecont.gif

இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள சைபீரியாப் பகுதியில் உள்ள காக்கநாடு ஆற்றுப் பகுதியும், கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கும் முன்பு இருந்தே,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் இருப்பதாக நம்பப் படுகிறது.

எனவே டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக் பகுதியிலேயே அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது நிரூபணமாகியுள்ளது.
எனவே ஆர்க்டிக் பகுதியில் உள்ள தீவுகளில் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, அந்த நிலப் பகுதிகளானது, அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும், பின்னர் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் கூறப் படும் விளக்கம் தவறு.


arcticmystery19arcticmystery19
http://www.kpbs.org/news/2010/dec/09/nova-arctic-dinosaurs/
இந்த நிலையில் அலாஸ்காவிலும்,கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்திருப்பது,அந்தப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
டைனோசர்களானது குளிர் இரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படும் ஊர்வன வகை இனத்தைச் சேர்ந்த விலங்கு.ஊர்வன வகை விலங்கால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.பாலூட்டி வகை விலங்கினங்கள் உணவைச் செரிப்பதன் மூலம்,சுயமாக வெப்பத்தை உற்பத்தி செய்த பிறகு,உடல் வெப்பத்தைப் பாது காப்பதற்காக,மயிர் போன்ற தகவமைப்புகளையும் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமின்றி பாலூட்டி வகை விலங்கினங்களானது குட்டிகளை ஈனுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது.ஆனால் டைனோசர் உள்பட ஊர்வன வகை விலங்கினங்களானது முட்டைகளை இடுவதன் மூலமே இனப் பெருக்கம் செய்கிறது.
ஊர்வன வகை விலங்கின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால், அதற்குக் குறைந்த பட்சம் முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்காவின் வட பகுதியும்,சைபீரியாவின் கொல்வில்லி ஆற்றுப் பகுதியும் அமைந்து இருக்கும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து முதல் இருபது சென்டிகிரேட்.
arcticmystery8arcticmystery8
http://www.artistwd.com/joyzine/australia/articles/dinosaurs/polar_dinosaurs.php#.VF6dkbjrZO8
அத்துடன் பூமி தான் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளளில்.ஆண்டுக்கு ஆறு மாதம் தொடர்ந்து பகலும்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இந்தக் காலமானது ஆர்க்டிக் இரவு என்று அழைக்கப் படுகிறது இந்தக் காலத்தில் வெப்ப நிலையானது தொடர்ந்து பல மாதங்கள் உறை பனிக்கும் கீழேயே இருக்கிறது.இந்த நிலையில் தாவரங்களால் தரையில் இருந்து நீரையும் உறிஞ்ச இயலாது.
அதே போன்று, ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்திருக்க இயலாது.
arcticmystery2.jpgarcticmystery2.jpg
http://www.smithsonianmag.com/science-nature/how-did-the-siberian-dinosaurs-die-37091068/?no-ist
arcticmystery14arcticmystery14
http://phenomena.nationalgeographic.com/2013/05/06/dinosaurs-in-the-dark/
ஆனால் துருவப் பகுதிகளில் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக கூடிய டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் துருவப் பகுதிகளில் எப்படி அடர்ந்த காடுகளும் டைனோசர்களும் வாழ்ந்திருக்கும் என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.

இந்தக் கேள்விகளுக்கு விடை கூறும் வண்ணம் ,புவியியல் வல்லுனர்களும், உயிரியல் வல்லுனர்களும் பல்வேறு யூகங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
arcticmystery7.pngarcticmystery7.png
http://home.alphalink.com.au/~dannj/ecenvir.htm

குறிப்பாக டைன்சோர்கள் மட்கிய இலை தழைகளை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம் அல்லது பனிக் கரடிகளைப் போன்று அறிதுயிலில் ஆழ்ந்திருக்கலாம் அல்லது பனி மான்களைப் போன்று குளிர்கால இடப் பெயர்ச்சி செய்து இருக்கலாம்  என்றெல்லாம் பல்வேறு யூகங்களை முன்வைத்து இருக்கின்றனர்.
arcticmystery9.jpgarcticmystery9.jpg
arcticmystery20.pngarcticmystery20.png
http://www.kpbs.org/news/2010/dec/09/nova-arctic-dinosaurs/

இவ்வாறு டைனோசர்கள் கடுமையான ஆறு மாத கால ஆர்க்டிக் இரவுக் காலத்திலேயே உயிர்பிழைக்க முடிந்தது என்றால், ஒரு விண் கல் விழுந்ததால் எழும்பிய தூசி மற்றும் புகை மண்டலத்தால் தாவரங்கள் அழிந்ததால், டைனோசர்களும் அழிந்தது, என்று கூறப் பட்ட விளக்கமும் கேள்விக் குறியாகி விட்டது. இதே போன்று டைனோசர்கள் ஆறு மாத கால ஆர்க்டிக் இரவைத் தவிர்கும் விதமாகப் பனி மான்களைப் போன்று, பருவகால இடப் பெயர்ச்சியை மேற்கொண்டு இருக்கும், என்றும் கருதப் பட்ட நிலையில், ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம், ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளதால், அந்த விளக்கமும் கேள்விக் குறியாகி விட்டது.
ஆனால் இது வரை எந்த விளக்கமும் உறுதிப் படுத்தப் பட வில்லை.
arcticmystery13.pngarcticmystery13.png
http://www.mcgill.ca/newsroom/node/14344

( ஆர்க்டிக் வளையப் பகுதியில் டைனோசரின் புதை படிவங்களைக் கண்டு பிடித்த மெக் கில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர் ஹான்ஸ் லார்சன்,நீங்கள் ஆர்க்டிக் பகுதியில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்து இருப்பதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.)
(நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் புதை படிவம்   )
deepdinofossil.jpg(நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் புதை படிவம் ) deepdinofossil.jpg
http://news.bbc.co.uk/2/hi/science/nature/4950540.stm

இந்த நிலையில் நார்வே நாட்டுப் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின்  எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருபதும்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்திலும் மடகாஸ்கர் தீவிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் உள்பட மற்ற விலங்கினங்களும் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.
தற்பொழுது வட துருவப் பகுதியில் இருந்து எழுநூறு கிலோ மீட்டர் தெற்கில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பும் குளிர்ப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதியிலேயே இருந்ததாக நம்பப் படுகிறது.

ஆனால் ஆக்சல் ஹைபெர்க் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டலப் பகுதியில் வளரும் செம்மரக் காடுகள் இருந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.முக்கியமாக வட துருவதிற்கு மிக அருகில் இருப்பதால் ஆக்சல் தீவில் தற்பொழுதும் செம்மரக் காடுகள் இருந்த பொழுதும் ஆண்டுக்கு நான்கு மாதம் இரவும் நான்கு மாதம் பகலும் நீடித்து இருந்த நிலையில் எப்படி காடுகள் நான்கு மாத காலம் சூரிய ஒளியின்றி வளர்ந்திருக்கும் என்பதும் இன்னொரு மர்மமாக இருக்கிறது என்று இந்தப் புதை படிவங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் புவி உயிரியல் வல்லுனரான ஹோப் ஜெகெரெல் தெரிவித்து இருக்கிறார்.
50ma.jpg50ma.jpg
( Paleogeobologist Hope Jahren-with a tree fossil on Axel Heiberg Island. )
arcticmystery1.jpg( Paleogeobologist Hope Jahren-with a tree fossil on Axel Heiberg Island. ) arcticmystery1.jpg
arcticmystery.pngarcticmystery.png
http://www.sciencedaily.com/releases/2002/03/020322074547.htm

arcticmystery3arcticmystery3
http://www.uct.ac.za/dailynews/?id=8085

gif.jpggif.jpg
http://www.pnas.org/content/105/8/2951/F5.expansion.html
colvilliriver.pngcolvilliriver.png
colvi.pngcolvi.png
Colville River course and drainage basin in northern Alaska

arcticmystery16arcticmystery16
http://museumvictoria.com.au/about/mv-news/2007/digging-alaskas-dinos/
arcticmystery17.pngarcticmystery17.png
http://museumvictoria.com.au/about/mv-news/2007/digging-alaskas-dinos/
arcticmystery21.pngarcticmystery21.png
arcticmystery22arcticmystery22
http://www.dailymail.co.uk/news/article-489309/Fat-dinosaurs-lived-near-South-Pole-say-scientists.html

arcticmystery15.gifarcticmystery15.gif
dinocove1.jpgdinocove1.jpg
http://blogs.scientificamerican.com/observations/2010/03/25/new-australian-dinosaur-fossil-shows-that-tyrannosaurs-range-was-global/
http://www.abc.net.au/science/ozfossil/ageofreptiles/continental/

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
aladino2.pngaladino2.png
http://www.nunatsiaqonline.ca/stories/article/65674some_dinosaurs_stayed_north_scientists/
aladino3.jpgaladino3.jpg
http://www.livescience.com/37683-juvenile-dinosaur-found-in-arctic.html

arcticmystery18arcticmystery18
http://museumvictoria.com.au/melbournemuseum/discoverycentre/600-million-years/timeline/cretaceous/
இதே போன்று ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, சாம்ப்சோ சாராஸ் என்று அழைக்கப் படும் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த, கடல் வாழ் முதலையின் எலும்புப் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதே போன்று ஆக்சல் ஹைபெர்க் தீவில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ஆசிய வகை நன்னீர் ஆமையின் புதை படிவங்களையும், டாக்டர் ஜான் டார்டுனோ குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அவர், ஆர்க்டிக் பகுதியிலேயே அதிக வெப்ப நிலை நிலவி இருப்பதன் மூலம் ,பூமத்திய ரேகைப் பகுதியில், இன்னும் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்திற்கு வடக்கில் உள்ள ஆர்க்டிக் பகுதியில் 73 வடக்கு அட்ச ரேகைப் பகுதியில் அமைந்து இருக்கும் பைலாட் தீவில்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைரானோ சாராஸ் என்று அழைக்கப் படும், கொன்று திண்ணி வகை டைனோசர் மற்றும் கூட்டம் கூட்டமாக வாழக் கூடிய தாவர உண்ணியான வாத்து அலகு டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை, மெக் கில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர்,ஹான்ஸ் லார்சன் குழுவினர் கடந்த 2003 ஆம் ஆண்டு கண்டு பிடித்துள்ளனர்.


இதே போன்று 76.5  வடக்கு அட்ச ரேகைப் பகுதியில் அமைந்து இருக்கும் கேமரான் தீவில்,இருபத்தி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்க்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று 75.5  வடக்கு அட்ச ரேகைப் பகுதியில் அமைந்து இருக்கும் மெல்வில்லி தீவில்,பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இக்தியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டால்பின் போன்ற உருவமுள்ள கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களையும்,தலாட்டோ சூக்கியா என்று அழைக்கப் படும் கடல் வாழ் முதலையின் எலும்புப் புதை படிவங்களையும்,பிளேசியோ சாராஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களையும்,மெக் கில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்,ஹான்ஸ் லார்சன் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

இதே போன்று ஐரோப்பாக் கண்டத்திற்கு வடக்கில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்ஜென் தீவில்,பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடுகள் இருந்து இருப்பதற்கான புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஆஸ்லோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான்ஹர்ரம்,அந்தக் காலத்தில் ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

எனவே கடுங் குளிர் நிலவும் வட துருவப் பகுதியில் உள்ள தீவுகளிலும் நிலங்களிலும், வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, அந்தத் தாவரங்களும் விலங்கினங்களும் வாழ்ந்த காலத்தில், ஆர்க்டிக் பகுதியிலேயே அதிக வெப்ப நிலை நிலவியதே காரணம் என்பது உறுதியாகிறது.
மற்றபடி நிலப் பகுதிகள் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்து வடபகுதியை நோக்கி நகர்ந்த்தாகக் கூறப் படும் விளக்கம் தவறு.
எனவே துருவப் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவியது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.


தற்பொழுது 78  டிகிரி வட அட்ச ரேகைப் பகுதியில் அமைந்திருக்கும்,எல்லிஸ்மெர் தீவில் முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ஒட்டகத்தின் புதை படிவங்களை,கனடா நாட்டின் இயற்கை அருங்காட்சியகத்தைச்  சேர்ந்த, டாக்டர்,நடாலியா ரிபிசின்க்ஸ்கி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், அந்த ஒட்டகம் வாழ்ந்த காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,பதினான்கு முதல் இருபத்தி இரண்டு டிகிரி சென்டி கிரேட் அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கலாம், என்று டாக்டர்,நடாலியா ரிபிசின்க்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாகத் தாவர உண்ணி விலங்கான ஒட்டகத்திற்கு நீந்தத் தெரியாது.எனவே ஒட்டகத்தின் எலும்புப் புதை படிவங்கள் எல்லிஸ்மெர் தீவில் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம், ஆர்க்டிக் பகுதியில் கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதுடன், கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு இடையில், காடுகளுடன் கூடியத் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று எல்லிஸ்மெர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, காண்டா மிருகம் போன்ற பிராண்டோ தீரி என்ற விலங்கு,நீர் யானை போன்ற கோரி போடன் என்ற விலங்கு,டபீர்,பறக்கும் லெமூர் வகைக் குரங்கு,ராட்சத ஆமை,முதலை,பாம்பு பல்லி போன்ற விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.அதனால் தீவுகள் உருவாகி இருக்கின்றன.அத்துடன் தீவுகளில்  பனியும் உருவாகி இருக்கின்றன.இந்தக் கால நிலை மாற்றத்தால் தாவரங்களும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன.
எனவே தீவுகள் உருவானதற்கும், பனி உருவானதற்கும், கடல் மட்டம் உயர்ந்து, கடலின் பரப்பளவும் அதிகரித்ததே காரணம்.
அதே போன்று துருவப் பகுதிகளில் வெப்ப நிலை நிலவியதற்குக் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததும், கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததுமே  காரணம்.

துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி உருவாகின?

சூரியனை வலம் வரும் பூமியின் பூமத்திய ரேகைப் பகுதியானது சூரியனுக்கு பக்கமாக இருப்பதால், சூரிய ஒளியானது பூமத்திய ரேகைப் பகுதியில் நேராக படுகிறது.

ஆனால் துருவப் பகுதிகளில் சூரிய ஒளியானது சாய்வாகப் படுகிறது.அதனால் துருவப் பகுதிகளில் வெப்ப நிலை குறைவாக இருக்கிறது.அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியில் சூரியன் உச்சி வானத்தில் தோன்றுவதைப் போன்று துருவப் பகுதிகளில் சூரியன் உச்சிப் பகுதிக்கு செல்வதில்லை.

மதிய நேரத்திலும் கூட துருவப் பகுதிகளில், சூரியன் தொடு வானத்திற்கு அருகிலேயே இருக்கிறது.அத்துடன் பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால், ஆண்டுக்கு ஆறுமாதம், பூமியின் வட துருவமானது, சூரியனை நோக்கி சாய்ந்தும், ஆண்டுக்கு ஆறுமாதம் பூமியின் வடதுருவம் சூரியனை விட்டு விலகியும் இருக்கிறது.

இதற்கு நேர் மாறாக, பூமியின் வட துருவப் பகுதியானது சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் காலங்களில், பூமியின் தென் துருவப் பகுதியானது, சூரியனை விட்டு விலகியும், அதே போன்று பூமியின் வட துருவமானது சூரியனை விட்டு விலகி இருக்கும் காலங்களில், தென் துருவமானது சூரியனை நோக்கிச் சாய்ந்தும் இருக்கிறது.

இவ்வாறு வடதுருவப் பகுதியானது சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் பொழுது, வட கோளப் பகுதியில், கோடை காலம் நிலவுகிறது.அதே நேரத்தில் சூரியனில் இருந்து விலகி இருக்கும் தென்கோளப் பகுதியில் குளிர் காலம் நிலவுகிறது.
அத்துடன் பூமியின் இந்தச் சாய்வினால் வட கோளப் பகுதியில் கோடை காலம் நிலவும் பொழுது, வடதுருவப் பகுதியில் சூரியன் மாதக் கணக்கில் மறைவதேயில்லை.

இதற்கு மாறாக தென் துருவப் பகுதியில் அப்பொழுது சூரியன் உதிப்பதேயில்லை.இதனால் அண்டார்க்டிக் கண்டத்தில் ஆறுமாத காலம் இரவு நீடிக்கிறது.

இது போன்று துருவப் பகுதிகளில் மாதக் கணக்கில் இரவு நீடிக்கும் பொழுது, வெப்ப நிலையானது மைனஸ் ஐம்பது டிகிரி நிலவுகிறது.

இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் நீர் உறைந்து விடும்.எனவே தாவரங்களால் நீரை உறிஞ்ச இயலாது,
எனவே டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பூமத்திய ரேகைப் பகுதியில் ஏற்படுவதைப் போன்று பகலும் இரவும் ஏற்பட்டு இருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் உருவாகி இருப்பதற்கு, பூமியின் அச்சில் சாய்வு ஏற்படாமல் இருந்ததே காரணம்.

எனவே டைனோசர்கள் காலத்திற்குப் பிறகே பூமியின் அச்சுச் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.
பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு, பூமிக்கு அருகே கடந்து சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம்,அந்தக் குறுங் கோளானது சூரியனால் பிடிக்கப் பட்ட வெள்ளி,புதன் போன்ற கிரகங்கள் அல்லது நிலவாகக் கூட இருக்கலாம்.

எனவே துருவப் பகுதிகளில் இருந்த காடுகள் ஏன் அழிந்தது ?என்ற கேள்வியும் எழுகிறது.
டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் வளி மண்டலத்தில் அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது.அதன் பிறகு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கோடிக் கணக்கான ஆண்டுகளாகக் கடலில் கலந்ததால், கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது.

அதனால் கடலின் பரப்பளவும் அதிகரித்து இருக்கிறது.அதனால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டுத் துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருக்கிறது.அதனால் துருவப் பகுதியில் வாழ்ந்த தாவரங்களும் விலங்கினங்களும் அழிந்தன.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?